மணிமேகலை முகப்பு Manimekalai Home
மணிமேகலை Manimekalai
காதை 30 Canto 30
வரிகள் 6-15 Lines
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
முரணாத் திருவறமூர்த்தியை மொழிவோன்
அறிவு வறிதாய் உயிர் நிறை காலத்து
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப
துடிதலோகம் ஒழியத் தோன்றி
போதி மூலம் பொருந்தியிருந்து 30-010
மாரனை வென்று வீரன் ஆகி
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்
வாமன் வாய்மை ஏமக் கட்டுரை
இறந்த காலத்து எண் இல் புத்தர்களும்
சிறந்து அருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது
(Aravana Adigal summarized) The story
of the Embodiment of Truth (The Buddha) who taught the Dhamma without contradictions:
At a time when people were plenty but wisdom was rare
radiant crowned Devas besieged the bodhisatta (the Buddha to be) to teach the Dhamma.
So he came from Tusita heaven to Earth,
sat under a Bodhi tree,
overcame Mara and became a hero
destroying the three defilements
Buddha's teachings full of Truth and protective of beings
that the many Buddhas of the past
with compassion towards beings have been teaching.
விளக்கவுரை Commentary:
6. முரணாத் திருவற மூர்த்தியை மொழிவோன்
முன்பின் மாறுபாடில்லாத அறங்களின் வடிவாகிய புத்ததேவன் வரலாற்றினைச் சுருங்கக் கூறலுற்ற அறவணன்;
முரணாத் திருவற - முரண்பாடு இல்லாத அறம்
மூர்த்தி 1. Body; embodiment; உடல். 2. Form; figure; வடிவம்.
மூர்த்தி – தலைவன், தேவன், புத்தன்.
அறங்களின் வடிவாகிய தன்மகாயமான வாய்மையே உருவாகக் கொண்ட புத்தர்.
மொழிவோன் – மொழிகின்ற அறவண அடிகள்
அறவணன் - அறவண அடிகள் (மணிமேகலைக்குத் தன்மத்தைக் கற்பித்தவர்)
7. அறிவு வறிதாய் உயிர் நிறை காலத்து
உயிர் – உயிர்கள், மக்கள்;
அறிவு வறிதாய் நிறை காலத்து - நல்லறிவின்றி மக்கள் பூமியில் நிரம்பியிருந்த காலத்தில்;
வறிதாய் – வறிதாக
வறிது – அறியாமை, குறைவு, சிறிது That which is little, small or insignificant
8. முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப
முடியணிந்து விளங்குந் தேவர்கள் தன்னை முறைப்படி வணங்கி, நிலவுலகில் தோன்றி அறங்கூற வேண்டுமென வேண்டிக் கொண்டு நின்றதனால்;
தயங்கல் - ஒளி செய்தல்
ஒளி பொருந்திய முடி அணிந்த தேவர்கள்
அமரர் - தேவர்கள்
குறை – வேண்டுகோள், Request;
இரந்து – இரத்தல், to beg
9. துடிதலோகம் ஒழியத் தோன்றி
துடித லோகத்தை விட்டு நீங்கி மண்ணுலகில் தோன்றி;
துடிதலோகம் - பௌத்தநூல் கூறும் தேவலோகங்களுள் ஒன்று, A celestial world; ஒழிய – நீங்கி
10. போதி மூலம் பொருந்தி யிருந்து
புத்த கயை யென்னுமிடத்தே அரசமரத்தினடியில் எழுந்தருளியிருந்து;
போதி : அரச மரம், Pipal, as the tree of wisdom; போதிமன்றத்து
மூலம் : அடி, வேர், Foot, base;
போதிமூலம் பொருந்தி (மணி. 26, 47).
பொருந்தல் - அமைதல், கலத்தல், தங்கியிருத்தல், To abide;
11. மாரனை வென்று வீரன் ஆகி
மாரனென்னும் தேவனை வென்றதனால் வீரனாக விளங்கி;
மாரன் - 1. காமன், மன்மதன்; 2. A god who tempted the Buddha but was vanquished by Him;
12. குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்
மூவகைக் குற்றங்களையும் முழுமையாக ஒழிக்கும்;
இலவாக்கும் - இல்லாத தாக்கும்
மூவகைக் குற்றங்கள் - மனம், மொழி (பேச்சு), மெய் (உடல்) மூன்றானும் உண்டாகும் பத்துவகைக் குற்றம்.
13. வாமன் வாய்மை ஏமக் கட்டுரை
புத்த தேவனது மெய்ம்மை நிறைந்ததும் உயிர்கட்குப் பாதுகாப்பாக எடுத்தோதியதும்;
வாமன் – புத்தன் Buddha;
காமற் கடந்த வாமன் பாதம்
ஏமம் + கட்டுரை – ஏமக் கட்டுரை
ஏமம் – இன்பம், களிப்பு, காவல், பாதுகாப்பு, Pleasure, delight;
கட்டுரை – உறுதிபடச் சொல்லல், விளங்கச் சொல்லல், Avowal, solemn declaration;
கட்டுரை விரித்துங் கற்றவை பகர்ந்தும் (மணி. 23, 5).
14. இறந்த காலத்து எண்ணில் புத்தர்களும்
புத்தருக்குப் பின் தோன்றிய எண்ணிறந்த புத்த சங்கத்தோர்களும்;
Countless Buddhas of the past.
எண்ணில் – எண்ணற்ற,
15. சிறந்து அருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது
சிறந் தருள் கூர்ந்து - உயிர்கள் பால் மிக்க அருள் பூண்டு; திருவாய் மொழிந்தது - மறவாது நிலைபெற வற்புறுத்தப்பட்டதுமாகிய அறம் ஈண்டு யான் கூறலுறுவது
ஈண்டு – இங்கு, இவ்விடம், இப்போது.
Sakyamuni Gautama Buddha is the last of countless Buddhas past. A Buddha only appears when the Dhamma is forgotten in the world. All the Buddhas past gave the same teachings. The Buddhas did not invent Truth. They merely discovered it and they teach the way leading to it.
அருள் – கருணை, Grace, mercy, favour, benevolence;
மொழிந்தது - சொன்னது
* * * * * *
Notes:
Aravana Adigal who is Manimekalai's spiritual mentor gives her a brief account of the Buddha's life. During a time when wisdom was rare in Earth, the Devas (celestial beings) went to him (the Budhha-to-be) in the Tusita heaven (one of many realms in Buddhist cosmology) and begged him to teach the Dhamma. So he came down to Earth, sat under a Bodhi tree and became enlightened. In the process he had to overcome Mara. Mara is a Deva whose goal is to get people entangled in sensual pleasures. Having overcome Mara he destroyed the three kinds of defilements i.e. by mind, body and speech. He then taught the Dhamma which is the path leading to Truth. Buddhas appear when wisdom is rare. They discover and teach the Truth. The Truth is eventually forgotten. Then another Buddha appears in the world to rediscover the truth. The last Buddha was Sakyamuni Guatama Buddha and his teachings are in line with the teachings of earlier Buddhas.
The ten defilements are of three kinds:
by body: killing, stealing, illicit sex
by speech: lying, slanderous speech, harsh speech and frivolous speech
by mind: greed, hatred and delusion.