மணிமேகலை முகப்பு Manimekalai Home
மணிமேகலை Manimekalai
காதை 30 Canto 30
வரிகள் 217-228 Lines
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
நான்கு நயமெனத் தோன்றப் படுவன
ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்பென்க
காரண காரியம் ஆகிய பொருள்களை
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயமாம் 220
வீற்று வீற்றாக வேதனை கொள்வது
வேற்றுமை நயமென வேண்டல் வேண்டும்
பொன்றக் கெடாஅப் பொருள்வழிப் பொருள்களுக்கு
ஒன்றிய காரணம் உதவு காரியத்தைத்
தருதற்கு உள்ளம் தான்இலை என்றல்
புரிவின்மை நயமெனப் புகறல் வேண்டும்
நெல்வித்து அகத்துள் நெல்முளை தோற்றும் எனல்
நல்ல இயல்புநயம் இவற்றில்நாம் கொள்பயன்
தொக்க பொருளல தொன்றில்லை என்றும்
அப்பொரு ளிடைப்பற் றாகா தென்றும் 230
செய்வா னொடுகோட் பாடிலை என்றும்
எய்து காரணத்தால் காரியம் என்றும்
அதுவும் அன்றத லாததும் அன்றென்றும்
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும்
The four methods of understanding the causal relations (in dependent origination) clearly understood are
identity, diversity, uninterest and inescapable regularity
identity is seeing the series of cause and effect flow as one -
not to distinguish between the various stages ("a seed becomes a tree" though there are other stages such as shoot).
Distinguishing cause and effect as distinct
is to understand diversity (this helps to give up the eternity wrong view by seeing the origination of each stage).
Lack of interest in finding the cause for
An indestructible "self" identity
should be understood as the disinterest method.
From the grain comes the shoot is stating the method of inescapable regularity.
The benefits we get from these causal understandings are:
There is nothing independent and not linked to cause and effect.
Do not be attached to anything that is dependently originated.
There is no creator connected with the principle of cause and effect.
With the appropriate cause comes the effect.
The effect is not the cause nor is it not the cause
Thus explained the four according to the Pitaka texts
217. நான்கு நயம் எனத் தோன்றப்படுவன -
நால்வகை நயங்களெனத் தெளிய உணரப் படுபவை;
The four causal relations clearly understood are
218. ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்பு என்க -
ஒற்றுமையும், வேற்றுமையும், புரிவின்மையும், இயல்பும் என்பனவாம் என அறிக;
unity, diversity, unclear and the obvious
புரிவு – தெளிவு, Clearness; lucidity;
219, 220. காரண காரியம் ஆகிய பொருள்களை
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் -
அவற்றுள் ஒற்றுமை நயமாவது;
காரண காரிய மாகிய பொருள்களை ஒன்றாவுணர்தல் – காரணமும், காரியமுமாய் நிற்கும் பொருள்களை வேற்றுமை கருதாது காரணமாயாதல், காரியமாயாதல் என உணர்ந்து கொள்ளுதலாம்;
unity is seeing the cause and effect as one. Not to distinguish between the two.
அஃதாவது புகையையும், நெருப்பையும் நெருப்பென்று ஒன்றாகவே கூறுவது.
சோறு வேண்டுங் குறையுடையானொருவன் அரிசி பெற்ற வழிச் சோறு பெற்றேன் என்பது ஒற்றுமை நயம்
Someone who needs cooked rice get raw rice but says he got cooked rice. The raw rice is the cause for the cooked rice and the process of cause and effect does not need o be explicitly stated.
221,222. வீற்று வீற்றாக வேதனை கொள்வது
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும்
வீற்று வீற்றாக வேதனை கொள்வது - காரண காரியங்களை ஒன்றாக உணராது தனித்தனியாக வேறுபடுத்தி உணர்ந்து கொள்ளுதல்;
வேற்றுமை நயமென வேண்டல் வேண்டும் - வேற்றுமை நயமென்று கொள்கவென ஆசிரியர் விரும்புவர்;
புகை வேறு நெருப்பு வேறு என இரண்டாகக் கொள்வது வேற்றுமை நயம்.
வீற்று – வேறுபடுகை, Being different; diversity;
distinguishing cause and effect as distinct is to understand diversity. ex. smoke and fire are distinctly expressed.
223. பொன்றக் கெடாஅப் பொருள் வழிப்பொருள்களுக்கு -
முற்றக் கெடுதலில்லாத முதற் பொருள், காரியப் பொருள் என்பவற்றிற்கு;
பொன்றக்கெடுதல் - முற்றாக அழிதல், To be absolutely ruined;
பொன்றக்கெடா - நித்தப் பொருள் (Opposite of பொன்றக்கெடு), Unchanging, Indestructible
வழிப்பொருள் – காரியப்பொருள், That which caused the Unchanging object
224, 225, 226. ஒன்றிய காரணம் உதவு காரியத்தைத்
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல்
புரிவின்மை நயம் எனப் புகறல் வேண்டும்
ஒன்றிய காரணம் - பொருந்தியுள்ள காரணம்;
உதவு காரியத்தைத் தருதற்கு உள்ளம் தான் இல்லை என்றல் - விளைத்தற்குரிய காரியத்தைப் பயத்தலை அறிதற்கேற்ற உணர்வுநிலையில்லை யென்பது;
புரிவின்மை நயமெனப் புகறல் வேண்டும் -
புரிவின்மை நயமெனக் கூறலை ஆசிரியன் விரும்பும்;
புரிவு¹ purivu , n. புரி¹-. 1. Love, attachment; அன்பு
புரிவின்மை = disinterest
பொன்றக் கெடாப் பொருள் - நித்தப் பொருள்; முதற் பொருள் என்றலுமாம் நித்தப் பொருளின் நித்தத்துவத்துக்குரிய காரணங் காண்டலும், அதனால் அத்தன்மை யெய்துதலும் உணர்தலாகாமையானும், வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்புமாகிய காரண மூன்றுங் கூடிச் செம்மை நிறமாகிய காரியத்தைப் பயத்தல் எவ்வாறெனவறிதல் கூடாமை யானும், "ஒன்றிய காரணம் உதவு காரியத்தைத் தருதற்குள்ளம் தான் இலையென்றல்" என்றார். புரிவின்மை - உணரவாராமை; புரிதல் - விளங்குதல். உள்ளத்தின் செயல் உணர்தலால் ஒற்றுமை நயத்தால் "உள்ளம்" என்றார்,
Like trying to find the cause of a unchanging object.
or
betel leave + lime (calcium oxide) + Areca nuts when rolled up and chewed together turn red. This is an example for the incomprehensible (at-least back in the old days)
betel leaf; வெற்றிலை.
"அறிவு கணந்தோறும் கெட்டுப் பிறக்கும் என்பது போன்றக் கெடாப் பொருள்வழிப் பொருளாம். இவற்றில் முதற்கணக்கே கெட்ட அறிவு காரணம், அதன் வழிப்பொருள் அக்கணத்தின் பிற்பகுதியிலே பிறந்து அறிவு காரியம் ஆம். காரணம் ஆகிய அறிவு பிறப்பித்த காரியமாகிய அறிவு இயல்பாகவே நிகழ்வதன்றி இக்காரணத்தினின்றும் காரியத்தைத் தோற்றுவிக்கும் ஆன்மா என்று ஒரு வினைமுதல் இல்லை என்பது புரிவின்மை நயம் என்றவாறு. " (Alt. Comm.)
227, 228
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல்
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள்பயன்
நெல்வித் தகத்துள் நெல் முளை தோன்றுமெனல் - நெல் விதையினின்று நெல் முளையே தோன்றுமெனக் கோடல்;
நல்ல இயல்பு நயம் - குற்றமற்ற இயல்பு நயமெனப்படும். இவற்றின் நாம் கொள்பயன் - இந்நால்வகை நயங்களாலும் நாம் கொள்ளும் பயன்களாவன;
From the grain comes the shoot is saying the obvious.
The benefits we get from these causal understandings
228. ....இவற்றின் நாம் கொள்பயன் –
இந்நால்வகை நயங்களாலும் நாம் கொள்ளும் பயன்களாவன;
What we learn from this is:
229. தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் -
எல்லாம் காரண காரியமாய்த் தொகுத்த பொருள்களேயன்றித் தனியே ஒன்று கிடையாதென்றும்;
There is nothing independent and not linked to cause and effect. Nothing outside of the 12 links of dependent origination.
பேதைமை முதலிய பன்னிரண்டு பொருள்களின் வேறாகப் பிறிதொரு பொருள் இல்லை என்றும் - Alt Comm.
தொக்க – தொகுத்த, part. joined; united;
230. அப் பொருளிடைப் பற்று ஆகாது என்றும் -
அப்பொருள்களிடத்தே பற்று வைத்தல் கூடாதென்றும்;
Do not be attached to anything that is dependently originated.
மண்டில வகையாற் சூழும் இப்பொருள்களிடத்தே வழிமுறைத் தோற்றத்திற்குக் காரணமான பற்றினைச் செய்தல் அறிவாகா தென்றும்; Alt Comm.
Do not get attached to these links that are revolving in a circular fashion.
231. செய்வானொடு கோட்பாடு இலை என்றும் -
வினை முதலாகிய கருத்தாவொடு செய்கைக்கு இயைபு கொள்ளுதல் இல்லை யென்றும்;
There is no creator connected with the principle of cause and effect.
இப்பொருள்களை இவ்வாறு மண்டில வகையாற் சுழற்றுதற்கு ஒருவினை முதல்வனும், இங்ஙனம் சுழற்றுதற்கு அவனுக்கொரு நிமித்தமும் இல்லை என்றுணர்ந்து கொள்ளுதலும்;
There is no one/creator who caused these 12 links to revolve in a circular fashion and such a person has no reason to do it.
நிமித்தம் – காரணம், nimittam, < ni-mitta. n. 1. Cause; motive; occasion; Alt. Comm.
செய்வானொடு - with the person doing
கோட்பாடு – கொள்கை, Principles, tenets of a religious sect, doctrines, idea, opinion; 2. Conduct, behaviour; நடத்தை.
232. எய்து காரணத்தாம் காரியம் என்றும் -
பொருந்துகின்ற காரணத்தினால் காரியம் பிறக்குமென்றும்;
With the appropriate cause comes the effect.
Like the seed is the cause for the sprout
அநாதியாயுள்ள காரணங்களே காரியங்களாய்ச் சார்பில் தோன்றும் என்றும்;
அநாதி a-nāti : One who has no protector,
233. அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும்
அது காரண காரியமுமன்று, காரண காரியமல்லாததும் அன்று என்றும்;
The effect is not the cause nor is it not the cause
The sprout is not the seed. When the sprout appears the seed disappears. So the effect is not the cause.
But obviously there is a relation between sprout and seed. So the sprout can't be said to be naturally independent of the seed. Therefore we can't say that the sprout is not the seed. We cannot say that the effect is not the cause.
(Example from "The Middle Way - Faith grounded in reason" - Dalai Lama)
A 10 year old girl (cause) becomes the 50 year old woman (effect). The 10 yr old girl is not the same as the 50 yr old.
But the 50yr old woman cannot be said to be completely independent of the 10 year old girl either.
அக்காரியங்கள் காரியமாந் துணையுமன்று அஃதல்லாததும் அன்று என்றும்; alt comm
234. விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும்
விதிமுறை - முறை முறையாக; தொகையினால் நான்கும் விரிந்த - தொகை முதலியவற்றால் நான்காய் விரிந்தன.
பிடக நூல் விதிமுறையினாலே தொகுக்கப்பட்டமையால் ஈண்டு விரிக்கப்பட்ட நான்கினையும்; Alt Comm
நாம் எய்தும் பயன் - இந்நயங்களாலே யாம் அடையும் பயன் என்றார்; என்க.
விதிமுறை – நியமம், viti-muṟai , n. < விதி¹ +. Prescribed rule;.
* * * * *
Notes:
Lines 217-234 Visuddhimagga (xvii 309-313)
309. 6. [As to methods:] Then [585] there are four methods of treating the meaning here. They are (a) the method of identity, (b) the method of diversity, (c) the method of uninterest, and (d) the method of ineluctable regularity. So this Wheel of Becoming should also be known accordingly “as to the kinds of method.”
310. (a) Herein, the non-interruption of the continuity in this way, “With ignorance as condition there are formations; with formations as condition, consciousness,” just like a seed’s reaching the state of a tree through the state of the shoot, etc., is called the “method of identity.” One who sees this rightly abandons the annihilation view by understanding the unbrokenness of the continuity that occurs through the linking of cause and fruit. And one who sees it wrongly clings to the eternity view by apprehending identity in the non-interruption of the continuity that occurs through the linking of cause and fruit.
311. (b) The defining of the individual characteristic of ignorance, etc., is called the “method of diversity.” One who sees this rightly abandons the eternity view by seeing the arising of each new state. And one who sees it wrongly clings to the annihilation view by apprehending individual diversity in the events in a single continuity as though it were a broken continuity.
312. (c) The absence of interestedness on the part of ignorance, such as “Formations must be made to occur by me,” or on the part of formations, such as “Consciousness must be made to occur by us,” and so on, is called the “method of uninterestedness.” One who sees this rightly abandons the self view by understanding the absence of a maker. One who sees it wrongly clings to the moral-inefficacy-of-action view, because he does not perceive that the causative function of ignorance, etc., is established as a law by their respective individual essences.
313. (d) The production of only formations, etc., respectively and no others with ignorance, etc., as the respective reasons, like that of curd, etc., with milk, etc., as the respective reasons, is called the “method of ineluctable regularity.” One who sees this rightly abandons the no-cause view and the moral-inefficacy-of-action view by understanding how the fruit accords with its condition. One who sees it wrongly by apprehending it as non-production of anything from anything, instead of apprehending the occurrence of the fruit in accordance with its conditions, clings to the no-cause view and to the doctrine of fatalism.