மணிமேகலை முகப்பு Manimekalai Home
மணிமேகலை Manimekalai
காதை 30 Canto 30
வரிகள் 191-216 Lines
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
அறுவகை வழக்கும் மறுவின்று கிளப்பிற்
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த
உண்மை வழக்கும் இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும்
இல்லது சார்ந்த இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும்
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் எனச்
சொல்லிய தொகைத் திறம் உடம்பு நீர் நாடு
தொடர்ச்சி வித்து முளை தாள் என்றிந் 200
நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல்
இயல்பு மிகுத்துரை ஈறுடைத்து என்றும்
தோன்றிற்று என்றும் மூத்தது என்றும்
மூன்றின் ஒன்றின் இயல்புமிகுத் துரைத்தல்
இயைந்துரை என்பது எழுத்துப்பல கூடச்
சொல்எனத் தோற்றும் பலநாள் கூடிய
எல்லையைத் திங்கள் என்று வழங்குதல்
உள்வழக்கு உணர்வில் இல் வழக்கு முயற்கோடு
உள்ளது சார்ந்த உள்வழக் காகும்
சித்தத் துடனே ஒத்த நுகர்ச்சி 210
உள்ளது சார்ந்த இல்வழக் காகும்
சித்தம் உற்பவித்தது மின்போல் என்கை
இல்லது சார்ந்த உண்மை வழக்காகும்
காரணம் இன்றிக் காரியம் நேர்தல்
இல்லது சார்ந்த இல்வழக் காகும்
முயற்கோ டின்மையின் தோற்றமும் இல் எனல்
Faultlessly describing the six methods of reasonings (inference)
which are associated with these four objects of experience
'collection of similar objects', sequence, highlight, and 'collection of distinct objects'
true reasoning, false reasoning,
true reasoning based on the existent,
false reasoning based on the non-existent,
false reasoning based on the existent,
true reasoning based on the non-existent.
First object of experience mentioned above 'collection of similar objects' is like body (collection of cells), water (collection of tiny drops)and country (collection of inhabitations)
'sequence' is the succession of seed, shoot and stalk followed again by seed:
this sequence is simply called a grain (seed and shoot are implied).
Highlighting a quality is when an object has an ending
a beginning ,an aging
to highlight just one of these qualities (to say "it has the nature to die" implies it also has a beginning and a growth).
''collection of distinct objects' is like any collection of letters
described as a word
and different number of days (28,29,30,31) all being labelled as a month.
Consciousness is, And so it is a true inference. A hare with horns isn't real. And so it a false inference
Feelings that are associated with our consciousness is an example
of true reasoning associated with that which is existent(a beautiful sunset, eye and eye consciousness leads to pleasant feeling).
False reasoning based on the existent is to
compare lightning (real but of short duration) to consciousness (real but infinite).
True reasoning based on the non-existent
is an effect without cause (we see smoke and no fire but infer that there must be a fire) .
False reasoning based on the non-existent is to
say there are no hares since there are no hares with horns.
191. அறுவகை வழக்கும் மறுவின்று கிளப்பின்
மறுவின்று கிளப்பின் - குறைவின்றிக் கூறுமிடத்து;
அறுவகை வழக்கு – ஆறு வகைப்பட்ட வழக்காவன;
Faultlessly describing the six methods of reasoning
மறு – குற்றம், Stigma, blemish, fault;
கிளப்பு – கிளத்தல் – பேசுதல், சொல்லுகை, Speech, utterance;.
192, 193. தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த
தொகையும், தொடர்ச்சியும், தன்மை மிகுத்துரையும், இயைந்துரையும் என்ற நான்கோடும்; இயைந்த - சேர்ந்து வருவனவாகிய;
which are associated with these four objects of experience
'collection of similar objects', sequence, highlight, and 'collection of distinct objects'
தொகை - கொத்து, Bunch;
தொடர்ச்சி - காரண காரிய சம்பந்தம்,
Chain of causes and effects;
தன்மை – இயல்பு, Nature, essence, property, inherent or abstract quality;
மிகுத்துரை - indicate, enhance, particularize
இயைந்துரை - பலபொருள்களின் வரையறைப்பட்ட தொகுதி, Collection of several distinct objects;
four objects of experience (Danielou/T.V.Gopala Iyer)
The objects of experience are: ensembles (or conglomerates); continuity; evolution; entities circumscribed by a name. (Danielou)
194-198. உண்மை வழக்கும் இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும்
இல்லது சார்ந்த இன்மை வழக்கும்
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும்
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் எனச்
உண்மை வழக்கெனவும், இன்மை வழக்கெனவும், உள்ளது சார்ந்த உண்மை வழக்கெனவும், இல்லது சார்ந்த உண்மை வழக்கெனவும், உள்ளது சார்ந்த இன்மை வழக்கெனவும், இல்லது சார்ந்த இன்மை வழக்கெனவுமாம்
true inference false inference
true inference of real objects
false inference of false objects
false inference of true objects
true inference of false objects
199. சொல்லிய தொகைத் திறம் உடம்பு நீர் நாடு
சொல்லிய தொகைத்திறம் - மேலே தொகை முதலாகச் சொல்லப்பட்டவற்றுள் தொகை யென்னும் கூறாவது; உடம்பு நீர் நாடு – உடம்பும், நீரும், நாடுமாகும்;
பல்வகைத் தாதுக்களின் கூட்டத்தை உடம்பென்றும், பல சிறு துளிகளின் கூட்டத்தை நீரென்றும், பல சிறியவும் பெரியவுமாகிய ஊர்களின் கூட்டத்தை நாடென்றும் வழங்குவது தொகைத் திறம் என்பார்.
அதாவது உடம்பு என்றும், வெள்ளம் என்றும், நாடு என்றும் பல பொருளின் கூட்டத்தைத் தொகுத்து ஒரு பொருள்போல ஒரு பெயரால் வழங்குவது தொகைத் திறம் என்பதாம்; - Alt. Commentary
First classification mentioned are like body, water and country.
Many many constituent parts make up the Body.
Tiny droplets together is Water.
Many cities together makes a Country.
200. தொடர்ச்சி வித்து முளைதாள் என்று இந் 200
தொடர்ச்சி - தொடர்ச்சியாவது; வித்து முளை தாள் என்று இந்நிகழ்ச்சியில் - நெல்வித்தின் முளையும், முளையில் தாளும், அத்தாளிலிருந்து நெல்லும் எனத் தோன்றி நிலவும்
நெல்வித்தினின்று முளையும் அதனினின்று தாளும் அதனினின்று நெல்லும் ஒன்றினொன்று காரண காரியமாய்த் தோன்றித் தொடர்ந்து நின்று நெல்லென வழங்குமாறு போலக் காரண காரியத் தொடர்ச்சியாய் வருவது தொடர்ச்சி யென்பார்,
வித்து - விதை
முளை - நெல்லின் முளை, வித்தினின்று வெளிப்படுவது, Shoot, tender shoot of trees or plants; seed-leaf; Sprout of paddy plant;
தாள் - பூ முதலியவற்றின் அடித்தண்டு, Stem, pedicle, stalk;
Succession is the succession of seed, shoot and stalk followed again by seed.
201. நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல்
இந்நிகழ்ச்சியால்; அவற்றை நெல்லென வழங்குதல் - அக்காரண காரியங்களை நெல்லென்று வழங்குவதாம் எ - று.
The series of cause and effect is called a grain.
202. இயல்பு மிகுத்துரை ஈறுடைத்து என்றும்
இயல்பு மிகுத்துரை - தன்மை மிகுத்துரையாவது; ஈறுடைத்தென்றும் - ஒரு பொருள் அழியும் தன்மை கொண்டதென்றும்;
இயல்பு – தன்மை, Nature, essence, property, inherent or abstract quality;
மிகுத்துரை indicate, enhance, particularize
ஈறு – முடிவு, மரணம், அந்தம், End, termination,. (திவா.) Death;
highlighting a quality is when an object has a end
203. தோன்றிற்று என்றும் மூத்தது என்றும்
தோன்றிற்றென்றும் - பிறந்ததென்றும்; மூத்ததென்றும் - முதுமை யுற்றதென்றும் கூறப்படும் தன்மைகள்;
a beginning an aging
204. மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்துரைத்தல்
மூன்றின் - மூன்றனுள்; ஒன்றின் இயல்பு மிகுத்துரைத்தல் - ஒரு கூற்றின் தன்மையை மிக்கெடுத்துக் கூறுவதாம்.
இஃதழிபொருள் என்றாதல் இது தோன்றிய பொருள் என்றாதல் முதிர்ந்தது என்றாதல் அம்மூன்றனுள் ஒன்றனை மட்டும் கிளர்ந்தெடுத்து வழங்குதல் போல்வதாம்; Alt Comm.
to highlight one of these qualities.
If an object is born, ages and dies to say that the object is subject to death is to enhance one of the qualities. But it implies the object is also subject to birth and aging.
205, 206, 207. இயைந்துரை என்பது எழுத்துப் பல கூடச்
சொல் எனத் தோற்றும் பல நாள் கூடிய
எல்லையைத் திங்கள் என்று வழங்குதல்
இயைந்துரை என்பது - இயைந்துரை என்று சொல்லப்படுவது; எழுத்துப் பல கூடச் சொல்லெனத் தோற்றும் - எழுத்துக்கள் பல கூடிய வழிச் சொல்லென்பது தோற்றுமாறு போலன்றி; பல நாள் கூடிய எல்லையை - பல நாட்கள் கூடிய ஒரு கால எல்லையை; திங்கள் என்று வழங்குதல் - திங்களென்று வழங்குவது போல்வது.
'collection of distinct objects' is like any number of letters making up a word is a collection of distinct objects like
different number of days being labelled as a month.
A month can have 28 or 29 or 30 or 31 days - but it is clearly defined.
இயைந்துரை - பலபொருள்களின் வரையறைப் பட்ட தொகுதி, Collection of several distinct objects;
208. உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயற்கோடு -
உள்வழக்கு உணர்வு - உள்வழக்கென்பது உள்ளதாகிய உணர்ச்சியை உள்ளதென்று கூறல்; இல்வழக்கு முயற்கோடு - இல்வழக்காவது இல்லாததாகிய முயலின் கொம்பினை இல்லை யென்று கூறல்;
Truth is stating a true experience, Non Truth is to say a hare has horns
உள்ளதை உள்ளபடி ஆறு வழிகளில் அனுமானிக்கலாம்.
by six ways of inference we can experience reality
அனுமானித்தல் – ஊகத்தால் அறிதல், To determine by inference;
Inference 1.
உண்மைவழக்கு - உள்வழக்கு. (மணி. 30, 194.)
உள்வழக்கு - Assertion of that which is or exists; உள்ளதை யுள்ளதென்கை
உணர்வு - consciousness
Inference 2.
இல்வழக்கு - இல்ல தனை இல்லையென்கை, பொய் வழக்கு, 1. False or untenable plea or contention;. 2. (Log.) Categorical denial;.
முயற்கோடு – முயலின் கொம்பு, கட்டியசொல் Coined compound word that refers to something which never exists, as முயலின் கொம்பு,
Asserting that which we are conscious of is true; Asserting that a hare with horns is false.
209, 210. உள்ளது சார்ந்த உள் வழக்காகும்
சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி –
உள்ளது சார்ந்த உள் வழக்காகும் - உள்ளது சார்ந்து வரும் உள் வழக்காவது; சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி - உள்ளதாகிய உணர்வோடு அதற்கியைந்த நுகர்ச்சியு முண்டென்பதாம்;
feelings that are associated with our consciousness is an example of true experience associated with that which is
உள்ளது , உள்பொருள்.
நுகர்ச்சி - Pleasant, unpleasant and neutral feelings
211,212. உள்ளது சார்ந்த இல் வழக்காகும்
சித்தம் உற்பவித்தது மின்போல் என்கை
மின்போல் - மின்னுப்போல; சித்தம் உற்பவித்தது என்கை - உணர்வாகிய உள்பொருள் தோன்றிற்றென இல்வழக்குக் கூறுதல்; உள்ளது சார்ந்த இல்வழக்காகும் - உள்ளதைச் சார்ந்து வரும் இல்வழக் கெனப்படும்;
false experience of true objects is to
compare lightning (short duration ) to consciousness (infinite).
மின் – மின்னல், Lightning;
உற்பவித்தல் – தோன்றுதல், To be conceived, be born; to originate, come into existence; to rise, as the sun;.
மின்னல் உண்மையான செயல். உணர்வு தோன்றுவதும் உண்மையான செயலே.
ஆனால் மின்னலோ கணப்பொழுதே நீடிப்பது. உணர்வோ காலவரையற்றது.
இவ்விரண்டும் உண்மையான செயல்களாயினும், அவற்றை ஒப்பிடுவது பொய் வழக்கு.
Comparing lightning (short duration) to consciousness (infinite) is like comparing apples to oranges. The comparison is between real phenomena but it is a false comparison.
False statement: "Consciousness was not there before but just appeared. It can be compared to lightning."
213, 214. இல்லது சார்ந்த உண்மை வழக்காகும்
காரணம் இன்றிக் காரியம் நேர்தல்
A true statement comparing false objects is an effect without cause.
காரணம் இன்றிக் காரியம் நேர்தல் - காரணமில்லையாகக் காரியத்தைத் கொண்டுரைத்தல்; இல்லதுசார்ந்த உள்வழக்காகும் - இல்லாததைச் சார்ந்து வரும் உள்வழக்காகும்;
You see smoke. The fire is not visible. But since you see the smoke (the effect) you infer that there must be a fire (cause).
The fire is இல்லது false object. But the inference is a true statement.
215, 216. இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும்
முயற்கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல்
முயற்கோடு இன்மையின் தோற்றமும் இல்லெனல் – முயலுக்குக் கொம்பு இல்பொருளாதலின் அதற்குத் தோற்றமில்லை யென்று கூறுதல்; இல்லது சார்ந்த இல்வழக்காகும் - இல்லாததைச் சார்ந்து வரும் இல்வழக் கெனப்படும்.
A false statement concerning non existent objects
Like saying there are no hares since there are no hares with horns.
* * * * *
Notes:
Lines 191-216 From Visuddhimagga (viii 39)
It then gives six kinds of paññatti “according to the commentarial method but not in the texts”:
(1) Concept of the existent (vijjamána-paññatti), which is the conceptualizing of (making known) a dhamma that is existent, actual, become, in the true and ultimate sense (e.g. aggregates, etc.).
(2) Concept of the non-existent, which is, for example, the conceptualizing of “female,” “male,” “persons,” etc., which are non-existent by that standard and are only established by means of current speech in the world; similarly “such impossibilities as concepts of a fifth truth or the other sectarians’ Atom, Primordial Essence, World Soul, and the like.”
(3) Concept of the non-existent based on the existent, e.g. the expression, “One with the three clear-visions,” where the “person” (“one”) is nonexistent and the “clear-visions” are existent.
(4) Concept of the existent based on the non-existent, e.g. the “female form,” “visible form” (= visible datum base) being existent and “female” non-existent.
(5) Concept of the existent based on the existent, e.g. “eye-contact,” both “eye” and “contact” being existent.
(6) Concept of the non-existent based on the non-existent, e.g. “banker’s son,” both being non-existent.