மணிமேகலை முகப்பு Manimekalai Home
மணிமேகலை Manimekalai
காதை 30 Canto 30
வரிகள் 179-190 Lines
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
உணர்வே அருஉரு வாயில் ஊறே
நுகர்வே பிறப்பே பிணி மூப்புச் சாவே 180
அவலம் அரற்றுக் கவலை கையாறென
நுவலப் படுவன நோய் ஆகும்மே
அந்நோய் தனக்குப்
பேதைமை செய்கை அவாவே பற்றுக்
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும்
துன்பம் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய உரையே வாய்மை நான்காவது
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன 190
Consciousness, name and body, sense bases, contact
feelings, birth, disease, aging, sickness
sorrow, lamentation, worry and helplessness
are the links that are said to be suffering.
For these sufferings
ignorance, kamma formations, craving, clinging
becoming are the causes.
Suffering and becoming are caused by clinging.
Not clinging results in happiness and release.
These thorough teachings make up the four noble truths.
Form, feelings, perception and volitional formations
consciousness are the five aggregates.
179, 180. உணர்வே அருஉரு வாயில் ஊறே
நுகர்வே பிறப்பே பிணி மூப்புச் சாவே -
உணர்ச்சியும், அருவுருவும், வாயிலும், ஊறும், நுகர்ச்சியும், பிறப்பும், பிணியும், மூப்பும், சாக்காடும் என்றும்;
Consciousness, name and body, sense bases, contact
feelings, birth, disease, aging, sickness
181. அவலம் அரற்றுக் கவலை கையாறு என -
அவலமும், அரற்றலும் கவலையும், கையறவும் என்றும்;
sorrow, lamentation, worry and helplessness
182. நுவலப் படுவன நோய் ஆகும்மே
நுவலப்படுவன - சொல்லப்படும் நிதானங்களே; நோயாகும் - துக்கமாம்.
are the links that are said to be suffering
183. அந் நோய் தனக்கு -
அத்துக்கத் தோற்றத்துக்கு;
184, 185. பேதைமை செய்கை அவாவே பற்றுக்
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும் -
பேதைமையும், வினையும், வேட்கையும், பற்றும், வினைப்பயன்களும் என்ற இவையே காரணமாகும்.
For these sufferings
ignorance, kamma formations, craving, clinging
becoming are the causes
186. துன்பம் தோற்றம் பற்றே காரணம் -
துன்பத்துக்கும், பிறப்புக்கும் பற்றுடைமையே காரணமாகும்;
Suffering and becoming are caused by clinging
187. இன்பம் வீடே பற்றிலி காரணம் -
இன்பத்துக்கும், பிறவாத வீடுபேற்றிற்கும் பற்றின்மையே காரணமாகும்;
Not clinging results in happiness and release
188. ஒன்றிய உரையே வாய்மை நான்காவது -
ஒருங்கே தொகுத்துரைக்கும் இவ்வுரையே நால்வகை வாய்மையாகும்.
These thorough teachings make up the four noble truths.
ஒருங்கே – முழுதும், ஒருசேர, Thoroughly, fully, To the fullest extent or measure;
189, 190. உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன -
உருவு - உருவமும்; நுகர்ச்சி - வேதனையும்; குறிப்பு - குறிப்பும்; பாவனை - பாவனையும்; உள்ள அறிவு - விஞ்ஞானமும் என்ற; இவை ஐங்கந்தமாவன - இவைகள் ஐவகைக் கந்தங்களெனப்படும்.
Form, feelings, perception and volitional formations
consciousness are the five aggregates.