மணிமேகலை முகப்பு Manimekalai Home
மணிமேகலை Manimekalai
காதை 30 Canto 30
வரிகள் 169-178 Lines
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
குலவிய குற்றம் எனக் கூறப்படுமே
அவாவே பற்றே பேதைமை என்றிவை 170
புனையும் அடைபவமும் வினை செயல் ஆகும்
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
நுகர்ச்சி பிறப்பு மூப்புப் பிணி சாவிவை
நிகழ்ச்சிப் பயன் ஆங்கே நேருங்காலை
குற்றமும் வினையும் பயனும் துன்பம்
பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா
எப்பொருளுக்கும் ஆன்மா இலை என
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம்
It is said that craving, clinging and ignorance are
defilements that cause volitional activities and resultants.
Volitional becoming and kammic formations are volitional activities.
Rebirth consciousness, mind and matter, sense bases, contact
feelings, rebirth process, aging, disease, death
are the resultants of present activities.
Defilements, volitional activities and resultants cause suffering.
The resultant bodies caused by these are inconstant.
Neither beings not inanimate objects have a self.
These are the realizations that will lead to liberation.
170. அவாவே பற்றே பேதைமை என்று இவை -
வேட்கையும் பற்றும் பேதைமையுமென்ற இம் மூன்றும்;
It is said that craving, clinging and ignorance are
(See explanation for Line 30-29)
169. குலவிய குற்றம் எனக் கூறப்படுமே -
வினைக்கும், அதன் பயனாய துன்பத்துக்கும் ஏற்கப் பொருந்திய குற்றமென அறிஞர்களாற் கூறப்படும்;
defilements that cause volitional activities and resultants
குலவிய – ஒன்று கூடிய, இணைந்த
171. புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும் -
உருப்படுத்தும் பவமும், அதனையடுத்து வரும் வினையும் செய்கையாகும்;
Volitional becoming and kammic formations are volitional activities.
புனைவு – செய்கை, புனைதல் – செய்தல், Making, producing;.
அடை பவம் – அடைகின்ற பவம், To be pre-ordained by destiny; விதிக்கப்படுதல்.
172, 173, 174. உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
நுகர்ச்சி பிறப்பு மூப்புப் பிணி சாவு இவை
நிகழ்ச்சிப் பயன் ஆங்கே நேருங்காலை
ஆங்கே நேருங்காலை - அப்பொழுது குற்றம் வினையென்ற இரண்டாலும் விளையும் பயனைக் கருதுமிடத்து;
உணர்ச்சி, பிறப்பு, மூப்பு, பிணி, சாவு இவை நிகழ்ச்சிப் பயன் - உணர்ச்சியும் பிறப்பும் முதுமையும் நோயும் சாக்காடும் என்ற இவை குற்றவினை நிகழ்ச்சியின் பயனாகும்.
நேருங்காலை - நிகழும்போது
நிகழ்ச்சி - Present moment; தற்காலம்.
Rebirth consciousness, mind and matter, sense bases, contact
feelings, rebirth process, aging, disease, death
are the resultants of present activities
175. குற்றமும் வினையும் பயனும் துன்பம் -
குற்றமும் வினையும் பயனுமாகிய யாவும் துன்பம் பயப்பனவாகும்;
Defilements, volitional activities and resultants cause suffering
176. பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா -
குற்றம் முதலியவற்றாற் பெற்ற பிறப்புக்குரிய உடம்புகள் நிலையில்லாதனவாகும்;
The resultant bodies caused by these are inconstant
177. எப்பொருளுக்கும் ஆன்மா இலை என -
உயர்திணையும், அஃறிணையுமாகிய எப்பொருட்கும் ஆன்மா என்பதொன்று கிடையாது;
அஃறிணை: அல் + திணை. Inferior class of beings, whether animate or inanimate, neuter, opp. to உயர்திணை;
அஃறிணை Could mean inanimate objects like stones and other objects like trees, animals etc. as opposed to
உயர்திணை objects like humans and devas.
மக்கள், தேவர், நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவும், இல்லவும் அஃறிணை.
(நன்னூல் சூத்திரம் – 261)
Neither beings not inanimate objects have a self
178. இப்படி உணரும் இவை - இவ்வாறு உணரப்படும் இவைகள்;
வீட்டியல்பாம் - வீடு பேற்றிற்கு உறுதியாம்.
These are the realizations that will lead to liberation.
Note : Bhava can be subdivided into kamma bhava (the volitional process of becoming) which belongs to the present life, and upapatti bhava (the rebirth process of becoming) which belongs to the future life.
* * * * *
Notes:
Visuddhimagga (xvii, 298)
298. 4. With triple round it spins forever (§288): here formations and becoming are the round of kamma . Ignorance, craving and clinging are the round of defilements. Consciousness, mentality-materiality, the sixfold base, contact and feeling are the round of result. So this Wheel of Becoming, having a triple round with these three rounds, should be understood to spin, revolving again and again, forever, for the conditions are not cut off as long as the round of defilements is not cut off.