மணிமேகலை முகப்பு Manimekalai Home
மணிமேகலை Manimekalai
காதை 30 Canto 30
வரிகள் 118-133 Lines
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
ஊழின் மண்டிலமாச் சூழுமிந் நுகர்ச்சி
பேதைமை மீளச் செய்கை மீளும்
செய்கை மீள உணர்ச்சி மீளும் 30-120
உணர்ச்சி மீள அருஉரு மீளும்
அருஉரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறு மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
வேட்கை மீளப் பற்று மீளும்
பற்று மீளக் கருமத் தொகுதி
மீளும் கருமத் தொகுதி மீளத்
தோற்றம் மீளும் தோற்றம் மீளப்
பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்புச் 30-130
சாக்காடு அவலம் அரற்றுக் கவலை
கையாறு என்று இக் கடையில் துன்பம்
எல்லாம் மீளுமிவ் வகையான் மீட்சி
This experience/suffering that revolves in a circular fashion due to fruit of kamma is resolved as follows:
From the remainder-less fading and cessation of that very ignorance comes the cessation of fabrications.
From the cessation of fabrications comes the cessation of consciousness.
From the cessation of consciousness comes the cessation of name and form.
From the cessation of name and form comes the cessation of the six sense media.
From the cessation of the six sense media comes the cessation of contact.
From the cessation of contact comes the cessation of feeling.
From the cessation of feeling comes the cessation of craving.
From the cessation of craving comes the cessation of clinging/sustenance.
From the cessation of clinging/sustenance comes the cessation of becoming.
From the cessation of becoming comes the cessation of birth.
From the cessation of birth, then aging and
death, sorrow, lamentation, pain, distress and
despair all cease. Such is the cessation of this entire mass of stress and suffering.
(Thanissaro Bhikkhu translation Line 119-133)
Commentary missing from TVA website. All references from Alternate Commentary.
118. ஊழின் மண்டிலமாச் சூழும் இந் நுகர்ச்சி
This experience/suffering that revolves in a circular fashion due to fruit of kamma is resolved as follows:
ஊழ்: பழவினை, பூர்வ கன்மம், Fruit of karma, fruit of deeds
119. பேதைமை மீளச் செய்கை மீளும்
அனைத்தும் தானேயாகிய பேதைமை நீங்குமாயின், அதுசார்பாகத் தோன்றும் வினைகளும் நீங்குவனவாம்;
120. செய்கை மீள - வினைகள் நீங்கிய பொழுது; உணர்ச்சி மீளும் - அவற்றின் சார்பாய்த் தோன்றிய உணர்ச்சி நீங்கும்.
121 உணர்ச்சி மீள அருவுரு மீளும்
அவ்வுணர்ச்சி நீங்கியவழி அதன் சார்பாய்த் தோன்றிய அருவுருவாகிய உடம்பு நீங்குவதாம்;
122. அருவுரு மீள வாயில் மீளும்
அவ்வருவுரு நீங்கியவிடத்து அதன் சார்பாய்த் தோன்றிய மனம் முதலிய கருவிகளாறும் நீங்குவனவாம்;
123. வாயில் மீள ஊறு மீளும்
கருவி நீக்கத்தினால் அவற்றில் வந்து பொருந்தும் புலன்களின் சேர்க்கை இல்லையாம்,
124. ஊறு மீள நுகர்ச்சி மீளும்
புலன்களின் கூட்டரவு இல்லையாவிடத்தே அவற்றை நுகருகின்ற நுகர்ச்சியும் இல்லையாய் ஒழியும்;
கூட்டரவு - கூட்டம், சேர்க்கை, சகவாசம்;
125. நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
புலன்களை நுகரும் நுகர்ச்சி இல்லையாயவிடத்தே அவற்றின்பால் எழுகின்ற அவா நீங்கிப்போம்;
126. வேட்கை மீளப் பற்று மீளும் - அவாவற்ற காலத்தே புலன்களினால் உண்டாகும் பற்றும் தொலைந்துபோம்;
127. பற்று மீளக் கருமத் தொகுதி மீளும் - பற்றற்ற விடத்துப் (போக்கின்மையாலே) பழவினைத் தொகுதியும் கழிந்தொழிவதாம்;
128. கருமத் தொகுதி மீளத் தோற்றம் மீளும் - பழவினைகள் இல்லையாய பொழுது அவற்றின் காரியமாகிய தோற்றம் இல்லையாய் ஒழிவதாம்;
129. தோற்றம் மீளப் பிறப்பு மீளும் இத்தோற்றம் இல்லையாகிவிடின், வழிமுறைப் பிறப்புகளும் இல்லையாம்;
129,133.
......பிறப்புப் பிணி மூப்புச்
சாக்காடு அவலம் அரற்றுக் கவலை
கையாறு என்று இக் கடை இல் துன்பம்
எல்லாம் மீளும் இவ் வகையால் மீட்சி
பிறப்பும், நோயும், மூப்பும்,
சாவும், அழுகையும், புலம்பலும், கவலையும்,
செயலறவுமாகிய இந்த முடிவில்லாத துன்பம்
எல்லாம் நில்லாது நீங்கிப்போகும் என்றார்.