மணிமேகலை காதை 30 வரிகள் 1-5

மணிமேகலை முகப்பு Manimekalai Home

மணிமேகலை Manimekalai

காதை 30 Canto 30

வரிகள் 1-5 Lines

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

To be free from defilements that cause birth, Manimekalai goes forth (takes the robes)


தானம் தாங்கிச் சீலம் தலைநின்று

போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள்

புத்த தன்ம சங்கம் என்னும்

முத்திற மணியை மும்மையின் வணங்கிச்

சரணாகதியாய்ச் சரண் சென்று அடைந்தபின் 5


Undertaking generosity, establishing virtue

Knowing the history of her previous births

Manimekalai paid homage thrice to the triple gem -

the Buddha, the Dhamma and the Sangha.

Having taken refuge in them -


விளக்கவுரை Commentary:

Chapter Title:

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

பிறப்புக்கேதுவாகிய குற்றங்களின் நீங்குவேனென நோற்கலுற்றாள்

The narrative of Manimekalai "going forth" (taking the robes) so as to be free from suffering caused by birth.

பிறப்பினால் உண்டாகும் துன்பம் அறுந்து போக வேண்டிப் பாவை துறவு பூண்ட கதை.

பவத்திற மறுகென - பவம் + திறம் + அறுக + என - பவத்தின் தன்மை அறுந்து போக என

திறம் – தன்மை, quality, nature

நோற்றல் - தவம் இருத்தல், performing penance, bearing, endurance.

நோன்றல் – தள்ளல், துறத்தல், rejecting secular things,

பாவை - பெண் (மணிமேகலை)

காதை – கதை, அதிகாரம், வரலாறு

பவம் – பிறப்பு, bhava. 1. Birth, origin;

குற்றங்கள் - மாசுகள். மனம், மொழி, உடல் மூலம் செய்யப்படும் பத்துவகை மாசுகள். The ten kinds of defilements done with mind, body and speech.


Lines:

2. போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள்

தனது முன்னைப் பிறப்பு வரலாற்றை அறிந்தவளான மணிமேகலை;

Knowing the history of her previous births from Aravana Adigal (described in the previous cantos)...

1. தானம் தாங்கிச் சீலம் தலைநின்று

தானம் தாங்கி - தானத்தை மேற்கொண்டு;

சீலம் தலைநின்று - சீலங்களின் வழி நின்று;

சீலம் - ஒழுக்கம் Virtue

3,4. புத்த தன்ம சங்கம் என்னும் முத்திறமணியை

புத்தன் தருமம் சங்கம் என்னும் கொள்கைகளான மூன்று தத்துவ மணிகளையும்;

முத்திறம் – மூன்று திறம்,

திறம் – குணம், தத்துவம், தன்மை

திரிமணி - The three objects of veneration in Buddhism, பெளத்தர்கள் வணங்குதற்குரிய புத்தன், புத்ததருமம், புத்த சங்கம் என்ற முத்திறப் பொருள்கள். திரி - மூன்று

4. மும்மையின் வணங்கி

மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் வணங்கி;

She paid homage with Mind, Speech and Body மெய் – உடம்பு, Body

The word மும்மை could mean thrice or as the Tamil commentary states could refer to "Mind, Speech and Body"

5. சரணாகதியாய்ச் சரண் சென்று அடைந்தபின்

சரணாகதியாய் - புத்தன் திருவடி யல்லது வேறே புகலில்லாதவளாய், Taking no other refuge other than the Buddha

சரண் சென்று அடைந்த பின் - புத்த சங்கத்தே அடைக்கலமாகப் புகுந்த பின்னர்

* * * * *

Notes:

Generosity and Virtue are two of the ten paramis that lay people should start with. Developing the paramis leads

to a favourable future in this life and the next.

The ten paramis are

Dana - (generous action), தானம் (தயாள குணம்)

Sila - (virtue), சீலம் (ஒழுக்கம்)

Khanti - (patience), பொறை, (பொறுமை)

Viriya - (energy, effort), வீரியம், (வன்மை)

Pañña - (wisdom, discernment), பிரஞ்ஞை, (மெய்ஞ்ஞானம்)

Adhitthana - (determination, resolution), துணிவு (சங்கற்பம்)

Nekkhamma - (renunciation), துறத்தல்

Sacca - (truthfulness), வாய்மை

Metta - (goodwill, loving-kindness), அன்பு

Upekkha - (equanimity), சமத்துவம்


The Sila or virtue means following precepts.

Upasakas (Lay Buddhists) are expected to follow five precepts according to Vinaya Pitaka.

The five precepts are:

To refrain from killing living creatures - (கொல்லாமை)

To refrain from taking what is not given - (கள்ளாமை)

To refrain from sexual misconduct - (தவறான பாலியல் உறவுகள் கொள்ளாமை)

To refrain from harsh and false speech - (பொய்யாமை, புறங்கூறாமை, வன்சொல் இயம்பாமை, பயனில மொழியாமை)

To refrain from taking intoxicating liquor and drugs - (கள்ளுண்ணாமை)


Buddha, Dhamma, Sangha are the triple gems.

Manimekalai paid homage by saying these three lines three times (மும்மை):

Buddham Saranam Gacchami. (I take refuge in the Buddha.), புத்தம் சரணம் கச்சாமி

Dhammam Saranam Gacchami. (I take refuge in the Dhamma.) தம்மம் சரணம் கச்சாமி

Sangham Saranam Gacchami. (I take refuge in the Sangha.) சங்கம் சரணம் கச்சாமி

புத்தர் என்பது மெய்ஞானத்தையும் The Buddha symbolizes Wisdom

தன்மம் என்பது வாய்மையையும் The Dhamma symbolizes Truth

சங்கம் என்பது ஒழுக்கத்தையும் குறிக்கும். The Sangha symbolizes Virtue.

So taking refuge in the Buddha, Dhamma and Sangha is the same as saying 'May my Wisdom grow, may I see the Truth, may I develop my Virtue.'

Anyone wanting to follow the Buddhist path starts by taking refuge as described above.