மணிமேகலை முகப்பு Manimekalai Home
மணிமேகலை Manimekalai
காதை 30 Canto 30
வரிகள் 103-117 Lines
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
பேதைமை சார்வாச் செய்கை ஆகும்
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்
உணர்ச்சி சார்வா அருவுரு ஆகும்
அருவுருச் சார்வா வாயில் ஆகும்
வாயில் சார்வா ஊறு ஆகும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் 30-110
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றில் தோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத்
தவலில் துன்பம் தலைவரும் என்ப
From ignorance as a requisite condition come fabrications.
From fabrications as a requisite condition comes consciousness.
From consciousness as a requisite condition comes name and form.
From name and form as a requisite condition comes the six sense media.
From the six sense media as a requisite condition comes contact.
From contact as a requisite condition comes feeling.
From feeling as a requisite condition comes craving.
From craving as a requisite condition comes clinging/sustenance.
From clinging/sustenance as a requisite condition comes becoming.
From becoming as a requisite condition comes birth.
From birth as a requisite condition, then aging and death,
sorrow, lamentation, pain, distress and despair come into play.
Such is the origination of this entire mass of stress and suffering.
(Thanissaro Bhikkhu translation)
104. பேதைமை சார்வாச் செய்கை ஆகும்
பேதைமையாகிய நிதானத்தைச் சார்பாகக் கொண்டு செய்கையாகிய நிதானம் தோன்றும்;
105. செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்
அச் செய்கையைச் சார்பாகக் கொண்டு உணர்ச்சி யென்னும் நிதானம் தோன்றும் ;
106. உணர்ச்சி சார்வா அருவுரு ஆகும்
அவ்வுணர்ச்சியைச் சார்பாகக் கொண்டு அருவுருவாகிய நிதானம் தோன்றும்;
107. அருவுரு சார்வா வாயில் ஆகும்
அவ்வருவுருவைச் சார்பாகக் கொண்டு வாயிலாகிய நிதானம் தோன்றும்;
108. வாயில் சார்வா ஊறு ஆகும்மே
அவ்வாயிலைச் சார்பாகக் கொண்டு ஊறாகிய நிதானம் தோன்றும்;
109. ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்
அவ்வூற்றினைச் சார்பாகக் கொண்டு நுகர்ச்சி யாகிய நிதானம் தோன்றும்;
110. நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்
அந்நுகர்ச்சியைச் சார்பாகக் கொண்டு வேட்கை யாகிய நிதானம் தோன்றும்;
111. வேட்கை சார்ந்து பற்று ஆகும்மே
அவ்வேட்கையைச் சார்பாகக் கொண்டு பற்றாகிய நிதானம் தோன்றும்;
112. பற்றின் தோன்றும் கருமத் தொகுதி
அப்பற்றினைச் சார்பாகக் கொண்டு வினைப்பயனாகிய நிதானம் தோன்றும்;
113. கருமத் தொகுதி காரணமாக
வினைப்பயனைக் காரணமாகக் கொண்டு
114. வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
ஏனைப் பவமும், தோற்றமுமாகிய நிதானங்கள் தோன்றும்;
ஏனை – மற்றை, Other, the rest;
வழிமுறை – சந்ததி, Descendant;
115. தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு
அத்தோற்றத்தைச் சார்பாகக் கொண்டு மூப்பு, பிணி,சாக்காடு
116, 117. அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத்
தவல் இல் துன்பம் தலைவரும் என்ப
நோயும், முதுமையும், இறப்பும், அவலமும், அழுகையும், கவலையும், செயலறுதியுமென்ற கெடாத துன்பமாகிய நிதானம் தோன்றும்;
என்ப - என்று நிதான இயல்பறிந்த புலவர்கள் கூறுவர்.
தவல் – நீக்கம், குறைவு , இல் - இல்லாத
தவல் + இல் – நீக்கம் + இல்லாத
தவலில் துன்பம் – நீக்கமில்லாத் துன்பம்
மூப்பும், பிணியும், மரணமும் ஆகிய நீக்கமில்லாத் துன்பங்கள் தோன்றும்..
தலைவா-தல் - மிகுதியாக நேர்தல், To increase;
அவலம் - Suffering, pain, distress; துன்பம்
அரற்று-தல் To lament, cry, weep
கையாறு despair