நாதகுத்தனார் இயற்றிய
குண்டலகேசி
Kundalakesi
பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்
8. கூற்றுவன் கொடுமை
அரவின மரக்க ராளி
யவைகளுஞ் சிறிது தம்மை
மருவினாற் றீய வாகா
வரம்பில்கா லத்து ளென்றும்
பிரிவில மாகித் தன்சொற்
பேணியே யொழுகு நங்கட்
கொருபொழு திரங்க மாட்டாக்
கூற்றின்யா ருய்து மென்பார்.
எளிமையாக:
அரவு இனம் அரக்கர் ஆளி
அவைகளும் சிறிது தம்மை
மருவினால் தீய ஆகா
வரம்பு இல் காலத்துள் என்றும்
பிரிவு இலம் ஆகி தன்சொற்
பேணி ஒழுகும் நங்கட்கு
ஒருபொழுது இரங்கமாட்டா
கூற்றின் யார் உய்தும் என்பார்
The cruelty of 'The messenger of Death'
Even beings such as snakes, demons and lions
when we relate to them for a little while
don't harm us.
From beginning-less time
never separating from him (he is with us eating every second of our lifetime)
we obey every command of his (he commands us to breath in / breath out)
But still the 'Messenger of Death' shows no compassion.
Who can escape him? (Nobody)
(இ - ள்.) அரவு இனம் - கொடிய நச்சுப் பாம்பினங்களும்; அரக்கர் - இரக்கமென்றொரு பொருளிலாத அரக்கரும்; ஆளி - யாளி முதலிய வல்விலங்குகளும்;
சிறிது தம்மை மருவினால் தீய ஆகா - சிறிதுகாலம் தம்மோடு யாரும் பழகுமிடத்தே அவர்பால் அன்புடையவாய்த் தீமை செய்வன ஆகாவாம்;
வரம்பு இல் காலத்துள் என்றும் - எல்லையில்லாததாய் இறந்தகாலத்திலெல்லாம் நாள்தோறும்;
பிரிவு இலம் ஆகி - தன்னோடு பிரிதலிலமாய்;
தன்சொற்பேணி ஒழுகும் நங்கட்கு - தன் கட்டளையை மேற்கொண்டு ஒழுகி வருகின்ற மாந்தராகிய நம்பொருட்டு;
ஒருபொழுது இரங்கமாட்டா - ஒருசிறிது பொழுதேனும் இரங்கு மியல்பில்லாத,
கூற்றின் - கூற்றுவனுக்குத் தப்பி; உய்தும் என்பார் - யாங்கள் உய்ந்திருக்கவல்லேம் என்று கூறவல்லார்; யார் - யாவரேயுளர்; ஒருவருமிலர் என்பதாம்.
(வி - ம்.) அரவினம் அரக்கர் ஆளி எனத் திணை விரவி வந்தது, மிகுதிபற்றி அஃறிணை முடிபேற்றது. அரவினம் முதலியன கொல்லும் தொழிலினையுடையன வாயினும் தம்மோடு சிறிதுகாலம் பழகுவோர்பால் அன்புகொண்டு அவரைக்கொல்லாமல் விடுதலுமுண்டு. கூற்றுவனோடு யாம் எல்லையற்ற காலமெல்லாம் கூடியிருப்போமாயினும் அவன் நம்பால் சிறிதும் இரக்கம் கொள்வானலன். ஆதலால் அவனுக்குத் தப்பி உயிர்வாழ்வோர் யாருமிலர் என்றவாறு.
கூற்றுவன் கணம் கணமாக நம்மகவை நாளை நம்மோடிருந்துண்கின்றான் ஆதலால், வரம்பில் காலத்துள் என்றும் பிரிவிலமாகி என்றார். அவன் சொற் பேணுதலாவது, அவன் கட்டளைப்படி கணந்தோறு மிறந்திறந்து வருதல். சிறிதேனும் இரங்குதலிலன் என்பாள். ஒருபொழுது இரங்கமாட்டாக்கூற்று என்றாள். உய்துமென்பார் யார்? என்னும் வினா ஒருவருமிலர் என்பது பட நின்றது. இனி இதனோடு,
“தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோ ரென்னான் இளையோ ரென்னான்
கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பவிவ்
வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ”
எனவரும் மணிமேகலைப் பகுதியும், 6, 97-104
The renunciates, the wealthy
young women who have given birth, weak children:
He doesn't consider the elderly neither the youth.
The messenger of Death has a cruel job of killing and heaping the corpses.
Even after seeing the burning ghat that has fire as its mouth consuming the dead,
drunk with pride under the influence of wealth,
not following the uplifting Dhamma:
Are there greater fools among people?
தவத்துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர் - தவநெறியிற் செல்லுந் துறவியர் மிக்க பெருஞ் செல்வமுடையோர், ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப்பாலகர் - ஈன்றணிமையையுடைய இளமகளிர் ஆற்றாத இளஞ்சிறார், முதியோர் என்னான் இளையோர் என்னான் - ஆண்டில் முதிர்ந்தோர் என்னாமலும் இளையோர் என்னாமலும், கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப - கொடுந் தொழிலை யுடைய காலன் கொன்று குவிப்ப, இவ் அழல்வாய்ச் சுடலை தின்னக்கண்டும் - அழல் வாயினையுடைய சுடலை தின்னக்கண்டும், கழிபெருஞ்செல்வக் கள்ளாட்டு அயர்ந்து - மிக்க பெருஞ்செல்வமாகிய கள்ளையுண்டு விளையாடுதலைச் செய்து, மிக்க நல்லறம் விரும்பாது வாழும் - மேன்மை தரும் நல்லறங்களை விரும்பாமல் வாழ்கின்ற, மக்களில் சிறந்த மடவோர் உண்டோ - மக்களிலுஞ் சிறந்த அறிவிலிகள் உளரோ; Source
ஆற்றான்- One who is without strength or ability; வலியரல்லாதவன், வறியவன்.
அழல் 1. Fire; நெருப்பு.
கூற்றுவன் கொடிய னாகிக்
கொலைத்தொழிற் கருவி சூழ்ந்து
மாற்றரும் வலையை வைத்தான்
வைத்ததை யறிந்து நாமு
நோற்றவன் வலையை நீங்கி
நுகர்ச்சியி லுலக நோக்கி
யாற்றுறப் போத றேற்றா
மளியமோஒ பெரிய மேகாண்.
எனவரும் சிந்தாமணிச் செய்யுளும், ஒப்பு நோக்குக. (8)
The God of Death is cruel
surrounded by the instruments of death he
sets a trap that cannot be removed
knowing this we, with wisdom and reflection
escape his trap
we taste the deathless world that we have not seen so far
and find a way to it.
we who are to be pitied have found greatness.
(இ - ள்.) கூற்றுவன் கொடியன் ஆகிக் கொலைத் தொழில் கருவி சூழ்ந்து - கூற்றுவன் கொடுமையுடையவனாகிக் கொலைத் தொழிலுக்குரிய கருவிகளை ஆராய்ந்து;
மாற்ற அரும் வலையை வைத்தான் - நீக்க முடியாத வலையை வைத்துள்ளான்;
வைத்ததை நாமும் அறிந்து நோற்று - அதனை அறிவுடைய நாமும் அறிந்து தவம்புரிந்து;
அவன் வலையை நீங்கி - அவன் வலைக்குத் தப்பி; நுகர்ச்சிஇல் உலகம் நோக்கி - இதற்குமுன் துய்த்தறியாத உலகமான வீட்டை நோக்கி;
ஆறு உறப்போதல் தேற்றாம் - வழிக்கொண்டு செல்லுதலைத் தெளியோம் ;
அளியம் ஓஒ பெரியம் காண் - இரங்கத் தக்க நாம் பெரியோம் காண். Source 376