7. யாக்கை நிலையாமை
போதர வுயிர்த்த வாவி புகவுயிர்க் கின்ற தேனு
மூதிய மென்று கொள்வ ருணர்வினான் மிக்க நீரா
ராதலா லழிதன் மாலைப் பொருள்களுக் கழிதல் வேண்டா
காதலா னழுது மென்பார் கண்ணனி களைய லுற்றார்.
எளிமையாக:
போதர உயிர்த்த ஆவி புக உயிர்க்கின்ற தேனும்
ஊதியம் என்று கொள்வர் உணர்வினான் மிக்க நீரார்
ஆதலால் அழிதன்மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டா
காதலால் அழுதும் என்பார் கண் நனி களையல் உற்றார்
யாக்கை - Body, as compacted together; உடம்பு.
உணர்-தல் - To be conscious of; அறிதல்
நீர்/நீரார் - Nature, disposition; குணம். அன்ன நீரார்க்கே யுள (குறள், 527). நீரார் - இயல்பு உடையவர்
ஊதியம் - Profit, gain; இலாபம்
மாலை - Nature, natural quality; இயல்பு. கைசெய்தூண் மாலையவர் (குறள், 1035).
நனி -Well, abundantly; மிகுதியாய்.
களை-த்தல் -To be fatigued or exhausted; to be languid; to flag, faint, swoon; இளைப்புறுதல்.
The inconstant body
Even though the out breath happens so the in-breath can follow
Those who have the nature to be conscious of it merely consider it (the in breath) as a one time payment.
So do not bemoan (the body) whose nature is uncertain.
Attracted to it those who are unable to bear (its decay) merely fatique their eyes (by lamenting).
(இ - ள்.) போதர உயிர்த்த ஆவி - உடம்பினின்றும் வெளியேறுவதற்கு விடுகின்ற மூச்சானது; புக உயிர்க்கின்ற தேனும் - மீண்டும் காற்று உட்புகுதற் பொருட்டே விடப்படுகின்ற தாயினும்; உணர்வினான் மிக்க நீரார் ஊதியம் என்று கொள்வர் - அங்ஙனம் அக்காற்று மீண்டும் உட்புகுவதனை மெய்யுணர்வினின் மிக்க பெரியோர் ஒரு பேறாகவே கருதாநிற்பர்; ஆதலால் அழிதன்மாலைப் பொருள்களுக்கு அழிதல் வேண்டா - அங்ஙனமாதலால் அழியுமியல்புடைய உடம்பு முதலியவற்றின் அழிவிற்கு நெஞ்சழிந்து வருந்துதல் வேண்டா; காதலால் அழுதும் என்பார் - இவ்வுடம்பின் கண் பற்றுடைமையாலே அதன் அழிவிற்கு ஆற்றாது அழுவேம் என்று கருதுபவர், கண் நனி களையல் உற்றார் - தம் கண்களை வாளா வருத்துபவரே யாவர் என்பதாம்.
ஆற்றாமை - Inability to bear, as excessive hunger, pain; தாங்க முடியாமை.
(வி - ம்.) வெளியேறிய மூச்சு மீண்டும் உட்புகாமற் போயே விடுதலும் கூடும். ஆதலால் மெய்யுணர்வுடையோர் தாம் உள்வாங்கும் ஒவ்வொரு மூச்சும் தமக்கு ஊதியமாகவே கருதுகின்றனர். அத்துனை நிலையாமையுடையது இவ்வுடம்பு. இதன் அழிவுக்கு வருந்துதல் வேண்டா. இதன் அழிவு கருதி அழுபவர் வீணே தம்மை வருத்துபவரேயாவர் என்றவாறு.
சான்றோர் உயிர்க்கும் மூச்சு மீண்டும் உட்புகுவதனை ஊதியமாகக் கருதற்குக் காரணம் பின்னும் பிழைத்திருந்து அதனாலாய பயன் கோடல் கருதியேயாம். பின்னும் வாழ்வேம் என்னும் அவாவாலன்று என்க.
இனி இச்செய்யுளோடு,
நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை.--குறள், 331
எனவும்,
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும். (மு.வரதராசனார் உரை)
To be an imbecile who takes that which is uncertain as certain
is a low life state. kural 331
புல் - Smallness, in quantity, number or value; அற்பம்.
ஆண்மை - Possession, used as the last member of a compound; உடை மை.
கடை - conclusion; முடிவு.
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.--குறள், 336
எனவும்,
நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம். (மு.வரதராசனார் உரை)
You find in abundance in life such statements as
'one who lived yesterday is dead today'. Kural 336
நெருநல் - Yesterday; நேற்று.
பெருமை - Abundance, excess; மிகுதி. இன்றில்லை யென்னும் பெருமை யுடைத்து (குறள், 336).
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு. --குறள், 338
எனவும் வரும் அருமைத் திருக்குறள்களும்,
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது. (மு.வரதராசனார் உரை)
Like a bird that flies off leaving its nest is the relation
of body to life. --- Kural 338
குடம்பை -1. Nest; கூடு.
ஒழி-தல் - To leave off; விட்டு நீங்குதல்.
புள் -Bird; fowl; பறவை.
சாதலும் பிறத்த றானுந்
தம்வினைப் பயத்தி னாகு
மாதலு மழிவு மெல்லா
மவைபொருட் கியல்பு கண்டாய்
நோதலும் பரிவு மெல்லாம்
நுண்ணுணர் வின்மை யன்றே
பேதைநீ பெரிதும் பொல்லாய்
பெய்வளைத் தோளி யென்றான்.
எனவும்,
Hey woman who wears a shoulder bracelet
birth and death and
to grow and to decay
is the result of ones deeds.
This is the nature of things.
To bemoan (death) and celebrate (birth)
is due to ignorace. Not realizing this
makes you an ignorant person.
(இ - ள்.) பெய்வளைத் தோளி பேதை - வளையணிந்த தோள்களையுடைய பேதையே!;
தம் வினைப்பயத்தின் ஆகும் சாதலும் பிறத்தல்தானும் ஆதலும் அழிவும் அவை எல்லாம் - தம் வினையின் பயனால் நேரும் இறப்பும் பிறப்பும் ஆக்கமும் அழிவும் ஆகிய அவை யாவும்;
பொருட்கு இயல்பு கண்டாய் - பொருள்களுக்கு இயற்கைகாண்;
நோதலும் பரிவும் எல்லாம் நுண்ணுணர்வு இன்மை அன்றே - இவையிற்றுட் சாதல் முதலியவற்றிற்குத் துன்புறுதலும் பிறத்தல் முதலியவற்றிற்கு அன்புறுதலும் ஆகிய இச்செயற்கெல்லாம் காரணம் அறிவின்மையே அல்லவோ;
நீ பெரிதும் பொல்லாய் - (இதை உணராத) நீ மிகவும் பொல்லாதவளாகிறாய். Source 269
பெய்வளை - Lady, as wearing bracelets; பெண்பால்
பேதை - Woman, as simple-minded; பெண்
பரிதல் - அன்புறுதல்.
பொல்லாய் Ignorant person; அறிவிலி. பேதைநீ பெரிதும் பொல்லாய் (சீவக. 269).
பிரிந்தவர்க் கிரங்கிப் பேதுற்
றழுதநங் கண்ணி னீர்கள்
சொரிந்தவை தொகுந்து நோக்கிற்
றொடுகடல் வெள்ள மாற்றா
முரிந்தநம் பிறவி மேனாண்
முற்றிழை யின்னு நோக்காய்
பரிந்தழு வதற்குப் பாவா
யடியிட்ட வாறு கண்டாய்.
எனவும்,
You bedecked lady - reflect thus:
In our previous lives
we lamented those who departed from us.
The volume of
the amount of tears we shed
is more than what the seas that touch the skies can hold.
Lady! You have found a way to cry in sympathy (that has no ending).
முற்றிழை - Lady, as bedecked with ornaments of finished work-manship; [வேலைப்பாடு திருந்திய அணிகளை அணிந் தவள்] பெண்.
அடியிடு-தல்- To make a beginning, commence an undertaking; தொடங்குதல். பரிந் தழுவதற்குப் பாவா யடியிட்டவாறு
(இ - ள்.) முற்றிழை இன்னும் நோக்காய் - முற்றிழையே! இன்னும் மனத்தாலே நோக்குவாயாக;
மேல்நாள் முரிந்த நம் பிறவி - மேல் நாட்களில் இற்ற நம் பிறவிகளிலே;
பிரிந்தவற்கு இரங்கிப் பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள் - அப்பொழுது பிரிந்தவனே கணவனாக அவற்றே பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள்;
சொரிந்தவை தொகுத்து நோக்கின் - சொரிந்தவற்றைத் தொகுத்துப் பார்த்தால்;
தொடுகடல் வெள்ளம் ஆற்றா - தொட்ட கடலின் பெருக்கும் உறையிடவும் போதாது;
பாவாய்! பரிந்து அழுவதற்கு அடியிட்ட ஆறு கண்டாய் - பாவையே! பரிவுற்று மேலும் அழுதற்கு இந்நாள் அடியிட்டபடியென்றறிவாய்.
பரிந்தழுவதற்கு அடியிட்டவாறு என்றது இங்ஙனம் அழும் அழுகைக்கு முடிவில்லை என்றவாறு. Source 1391
அன்பினி னவலித் தாற்றா
தழுவது மெளிது நங்க
ளென்பினி னாவி நீங்க
விறுவது மெளிது சோ்ந்த
துன்பத்தாற் றுகைக்கப் பட்டார்
துகைத்தவத் துன்பந் தாங்கி
யின்பமென் றிருத்தல் போலு
மரியதிவ் வுலகி லென்றாள்.
எனவும்,
"To cry and grieve due to love
for another is easy.
For life to leave this
body is easy.
When lovers separate the
grief this causes women: to bear this grief
and think of it as a source for happiness (by seeking an end to suffering)
is rare in this world." she said.
(இ - ள்.) அன்பினின் அவலித்து ஆற்றாது அழுவதும் எளிது - நம் காதலரிடம் அன்பினாலே வருந்தி ஆற்றவியலாமல் அழுவதும் எளிது;
நங்கள் என்பினின் ஆவி நீங்க இறுவதும் எளிது - நம் உடம்பிலிருந்து உயிர்போம்படி இறத்தலும் எளிது;
சேர்ந்த துன்பத்தால் துகைக்கப்பப்பட்டார் - தம் காதலர் சேர்ந்து பிரிந்ததனால் பிறந்த துன்பத்தாலே வருத்தப்பட்ட மகளிர்;
துகைத்த அத் துன்பம் தாங்கி - அங்ஙனம் வருத்தின அவ்வருத்தத்தைப் பொறுத்து;
இன்பம் என்று இருத்தல் இவ்வுலகில் அரியது போலும் என்றாள் - இது நமக்கு இன்பம் என்று இருப்பதே இவ்வுலகில் அரியதாகும் என்றாள்.
மயற்கையிம் மக்கள் யோனிப்
பிறத்தலும் பிறந்து வந்தீங்
கியற்கையே பிரிவு சாத
லிமைப்பிடைப் படாத தொன்றாற்
கயற்கணி னளவுங் கொள்ளார்
கவற்சியுட் கவற்சி கொண்டார்
செயற்கையம் பிறவி நச்சுக்
கடலகத் தழுந்து கின்றார்.
எனவும்,
With defilements people born in the womb
Once born separation and
death are natural
(the being) does not stay in the middle (of death and the next birth) even for a wink
The wise do not worry even for a short duration.
Those who worry due to attachment
stay (continue to be reborn) in the
poisonous ocean of samsara
கவற்சி - 1. Anxiety, concern; மனோவிசாரம்.
(இ - ள்.) மயற்கை இம் மக்கள் யோனிப் பிறத்தலும் - குற்றமுடைய இம் மக்கட் பிறப்பிற் பிறத்தலும்;
பிறந்து வந்து ஈங்குப் பிரிவு சாதல் இயற்கை - பிறந்து வந்து இவ்வுலகிற் பிரிதலும் இறத்தலும் இயற்கை;
இமைப்பிடைப் படாதது ஒன்றால் - இமைப்பளவும் நடுவில் தங்காதது ஒன்று, ஆதலால்;
கவற்சி கயற்கணின் அளவும் கொள்ளார் - அறிஞர் கவலை மீன்கண்ணளவாயினும் கொள்ளார்;
உள் கவற்சி கொண்டார் செயற்கை அம்பிறவி நச்சுக் கடலகத்து அழுந்துகின்றார் - மனக்கவலை கொண்டவர்கள் பற்றுள்ளத்தால் உண்டாகும் பிறவியாகிய நச்சுக் கடலிலே அழுந்துகின்றவர்கள். Source 1393
இளமையின் மூப்புஞ் செல்வத்
திடும்பையும் புணர்ச்சிப் போழ்திற்
கிளைநரிற் பிரிவு நோயில்
காலத்து நோயு நோக்கி
விளைமதுக் கமழுங் கோதை
வேலினும் வெய்ய கண்ணாய்
களைதுய ரவலம் வேண்டா
கண்ணிமைப் பளவு மென்றாள்
எனவும் வரும் சீவக சிந்தாமணிச் செய்யுள்களும் ஒப்பு நோக்கியின்புறுக.
"While young we grow old
While we have wealth poverty can come
While with our husband separation can come
While healthy we can get sick. Expecting these:
You who are wearing a honey scented garland of flowers,
eyes sharper than a trident -
get rid of your grief. Do not lament even
for as long as it takes to wink." she said.
(இ - ள்.) இளமையில் மூப்பும் - இளமைக் காலத்தே மூப்பு வருமென்பதையும்;
செல்வத்து இடும்பையும் - செல்வமுள்ள போதே வறுமைத் துன்பம் வருமென்பதையும்;
கிளைநரில் புணர்ச்சிப் போழ்தில் பிரிவும் - கணவருடன் கூடியிருக்கும் போதே பிரிவு வருமென்பதையும்;
நோய்இல் காலத்து நோயும் - நலமுள்ள காலத்திலேயே நோய் வருமென்பதையும்;
நோக்கி - எதிர்பார்த் துணர்ந்து;
விளைமதுக் கமழும் கோதை! - விளைந்த தேன் மணக்கும் மாலையாய்!;
வேலினும் வெய்ய கண்ணாய்! - வேலினும் கொடிய கண்களையுடையாய்!;
துயர் களை - துயரத்தை நீக்குவாயாக;
கண் இமைப்பளவும் அவலம் வேண்டா என்றாள் - கண்ணிமைக்கும் போதளவேனும் இந்த அவலம் வேண்டா என்றுரைத்தாள். Source 1394
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுஉடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். --குறள், 622
வெள்ளம்போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும். (மு.வரதராசனார் உரை)
Like a flood comes Dhukka (suffering). To the extent the
wise reflect on its nature - suffering disappears.
நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்
எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று --நீதிநெறி விளக்கம்,
என்பது குமரகுருபரவடிகளார் திருமொழி. (7)
Like bubbles in water is youth. Wealth like
long waves in a water body. Like writing on water
is this body. (Amid such uncertainty) Oh You Faithful! Why don't you
praise and worship our Lord.
குமிழி -குமிழ்-. Bubble;
திரை-த்தல் - To roll or rise, as waves; அலையெழுதல்
மன்றாடு-தல் - To pray, entreat, implore, petition, supplicate; குறையிரந்து வேண்டுதல்.
வழுத்து-தல் - To praise, extol; துதித்தல்.
(பொருள்.) இளமை நீரில் குமிழி - இளமைப்பருவம் நீரிலுண்டாகும்குமிழியாகும். நிறை செல்வம் நீரில் சுருட்டும் நெடுதிரைகள் - நிறைந்த செல்வம்நீரிலே காற்றினாற் சுருட்டப்படும் உயர்ந்த அலைகளாகும், யாக்கை நீரில் எழுத்துஆகும் - உடம்பு நீரிலெழுதிய எழுத்தாகும்; (இங்ஙனமிருக்க), நமரங்காள் - நம்மவர்களே!'எம்பிரான் மன்று வழுத்தாதது என்னே - நம்கடவுளுடைய மன்றினை (அம்பலத்தை) வாழ்த்தி வணங்காதது ஏனோ? (கருத்து.) இளமையும் செல்வமும்யாக்கையும் நிலையாமையால், அவை உள்ள பொழுதே இறைவனை வழிபட்டுக் கொள்கவென்பது. Source 1