நாதகுத்தனார் இயற்றிய
குண்டலகேசி
Kundalakesi
பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்
17. குற்றங் கடிதல்
மண்ணுளார் தம்மைப் போல்வார்
மாட்டதே யன்று வாய்மை
நண்ணினார் திறத்துங் குற்றங்
குற்றமே நல்ல வாகா
விண்ணுளார் புகழ்தற் கொத்த
விழுமியோ னெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டந் தன்மேற்
கறையையார் கறையன் றென்பார்.
எளிய நடை:
மண்ணுளார் தம்மைப் போல்வார்
மாட்டதே அன்று வாய்மை
நண்ணினார் திறத்தும் குற்றம்
குற்றமே நல்ல ஆகா
விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த
விழுமியோன் நெற்றிபோழ்ந்த
கண் உளான் கண்டம் தன்மேல்
கறையை யார் கறை அன்று என்பார்
Praised by the Devas, he who can split open
his third eye on his forehead - Shiva
who ever will refute that
he has poison in his throat? (nobody)
(Likewise) defilements are not exclusive to
humans and those similar to them. If defilements
show up in heavenly beings those
defilements would still be defilements.
In Hindu Mythology there is an incident in the "churning of the ocean of milk " where Shiva swallows poison which is stopped in his throat. The point to remember here is that even though it is the exalted Shiva's throat the poison is still poison. சிவன் விஷத்தை குடித்து அது தொண்டையில் நிறுத்தப்பட்ட கதை இந்த உவமானத்தில் பயன் படுத்தப்படுகிறது.
(இ - ள்.) விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த - வானுலகத்தே வாழுகின்ற தேவர்களும் புகழ்ந்து பாராட்டுதற் கேற்ற;
விழுமியோன் - சிறப்பினையுடையவனும்;
நெற்றிபோழ்ந்த கண் உளான் - நெற்றியைப் பிளந்து தோன்றிய நெருப்புக் கண்ணை யுடையவனும் ஆகிய சிவபெருமானுடைய;
கண்டம் தன்மேல் கறையை - மிடற்றின் கண்ணமைந்த களங்கத்தை:
கண்டம் - Throat; தொண்டை, மிடறு
கறை - மாசு stain
யார் கறை அன்று என்பார் - யார் தாம் களங்கம் அன்று என்று கூறுவார்? அங்ஙனமே;
குற்றம் மண்ணுளார் தம்மைப் போல்வர் மாட்டதே அன்று - குற்றம் என்பது இந்நிலவுலகத்தே வாழும் மக்கள் போல்வாரிடத்து மட்டும் உண்டாவதொன்றன்று;
குற்றம் வாய்மை நண்ணினார் திறத்தும் - குற்றமானது மெய்யுணர்வு பெற்ற மேலோரிடத்துத் தோன்றினும்; குற்றமே - குற்றமாகவே கொள்ளப்படுவதன்றி;
நல்ல ஆகா - அவர் மேலோர் என்பதற்காக நல்லனவாகி விடா;
ஆதலால் எத்தகையோரும் தம்பாற் குற்றம் நிகழாதபடி விழிப்புடனிருத்தல் வேண்டும் என்பதாம்.
(வி - ம்.) ஆதலால் எத்தகையோரும் தம்பாற் குற்றம் நிகழாதபடி விழிப்புடன் இருத்தல் வெண்டும் என்பது குறிப்பெச்சம். கந்தருவர் அரக்கர் முதலியோரையும் கருதி மண்ணுளார் தம்மைப் போல்வர் என்றார், வாய்மை நண்ணினார் என்றது மெய்யுணர்வு கைவரப் பெற்ற மேலோரை!
"தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.” --குறள், 433
எனவும்,
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும், அதைப் பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக்கொள்வர். (மு.வரதராசனார் உரை)
Those who feel a sense of shame when they do wrong - to them even a small mistake is taken as a big fault. They try to prevent it and protect themselves. - Kural 433
தினை - A very small measure a trifle; மிகச் சிறிய அளவு.
துணை - Measure அளவு
பனை - A large measure, opp. to tiṉai; ஒரு பேரளவு.
பழி - Fault குற்றம்
நாண்- Sense of shame; வெட்கம்
“குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை.” --குறள், 434
எனவும் வரும் அருமைத் திருக்குறள்களையும் நோக்குக, (17).
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும். ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும். (மு.வரதராசனார் உரை)
Defilements are an enemy that cause suffering. Keep in mind to prevent defilements. Kural 434
குற்றம் - moral fault, defilement
அற்றம் - Suffering; வருத்தம்