நாதகுத்தனார் இயற்றிய
குண்டலகேசி
Kundalakesi
பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்
15. இறைமாட்சி
இறந்த நற்குண மெய்தற் கரியவா
யுறைந்த தம்மையெல் லாமுட னாக்குவான்
பிறந்த மூர்த்தியொத் தான்றிங்கள் வெண்குடை
யறங்கொள் கோலண்ணன் மும்மத யானையான்.
எளிமையாக:
இறந்த நற்குணம் எய்தற்கு அரியவாய்
உறைந்த தம்மை எல்லாம் உடன் ஆக்குவான்
பிறந்த மூர்த்தி ஒத்தான் திங்கள் வெள்குடை
அறங்கொள் கோல் அண்ணல் மும்மத யானையான்
(Describes a King)
To regain the lost virtue amongst people
to help liberate people by getting back that was lost
comparable to the Lord Buddha, his rule bright as a full moon
this male elephant, this king had the Dhamma as his sole goal.
(இ - ள்) மும்மத யானையான் - மூன்று மதங்களையும் பொழிகின்ற களிற்றியானையையுடையவனும்;
மும்மதம்-Exudations of a musk elephant, as from three places,மதயானையின் கன்னமதம் கைமதம் கோசமதம்
களிற்றியானை - Male elephant; ஆண்யானை.
திங்கள் - Moon; சந்திரன்.
திங்கள் வெள்குடை - நிறைத்திங்கண் மண்டிலம் போன்ற வெள்ளிய தன் குடையினாலே;
குடை - Government; அரசாட்சி
மண்டிலம் - Disc, as of sun or moon; வட்ட வடிவம்
வெள்ளிய - bright; ஒளிமிகுந்த.
அறங்கொள் கோல் - அறத்தையே குறிக்கோளாகக் கொண்ட செங்கோன் முறைமையினையுடைய;
கோல் - Sceptre; செங்கோல் an ornamented staff carried by rulers on ceremonial occasions as a symbol of sovereignty.
முறைமை - Right, propriety; உரிமை
அண்ணல் - இவ்வேந்தன் இவ்வாற்றால்;
இறந்த நற்குணம் - இவ்வுலகத்தை விட்டகன்று போய்விட்ட நல்ல மக்கட் பண்புகள்;
எய்தற்கு அரியவாய் - மீண்டும் மாந்தர் எய்துதற்கரியனவாகி;
உறைந்த தம்மை எல்லாம் - இருந்தவற்றை யெல்லாம்;
உடன் ஆக்குவான் - மீண்டும் இவ்வுலகத்து மக்களோடே சேர்த்து அவரை யுய்விக்கும் பொருட்டு;
பிறந்த மூர்த்தி ஒத்தான் - துடித விமானத்தினின்றும் போந்து இந்நிலவுலகத்திற் றோன்றியருளிய புத்த பெருமானையே ஒத்தவனாய்த் திகழ்ந்தான் என்பதாம்.
(வி - ம்) இச் செய்யுள் தொடங்கிவருகின்ற செய்யுள்கள் குண்டலகேசி என்னும் பெருங்காப்பியத்திற் பேசப்படுகின்ற அரசன் மாண்புகள். இந்த அரசனுடைய பிற மாண்புகள் இச் செய்யுளின்முன் பல செய்யுட்களிற் பேசப்பட்டிருத்தல் வேண்டும் என்று நினைத்தற்கிடனுளது அவையெல்லாம் கிடைத்தில. இச் செய்யுளின் முற்போந்த செய்யுட்களில் அந்த அரசனுடைய அறமாண்புகளை வருணித்து இச் செய்யுளில் இவ்வாற்றால் இம் மன்னவன் புத்தபெருமானையும் ஒப்பாவான் என்று கூறுகின்றார் போலும்.
புத்தபெருமான் உலகின்கண் அறங்கள் கெட்டு மக்கட்பண்பு அழிந்த காலத்தே உலகிற்றோன்றி அவ்வறங்களை மீண்டும் உலகில் நிறுவினன் என்பகவாகலின் “இறந்த நற்குணம் எய்தற்கரியவா யுறைந்த தம்மையெல்லாம் உடனாக்குவான் பிறந்த மூர்த்தி” என்று புத்தரைச் சுட்டினார். மக்கள் மேற்கொள்ளாவிடினும் அறம் அழிந்தொழியாமையின் எய்தற்கரியவாய் உறைந்த தம்மையெல்லாம் என்றார். உறைந்த தம்மையெல்லாம் என்றது உறைந்தவற்றை யெல்லாம் என்றவாறு. புத்தர் உலகில் அறமுதலியன நிலைகுலைந்துழி வந்து தோன்றுவர் என்பதனை,
“பூமகளே முதலாகப் புகுத்தமரர் எண்டிசையும்
தூமலரா லடிமலரைத் தொழுதிரந்து வினவியநான்
காமமும் கடுஞ்சினமுங் கழிப்பரிய மயக்கமுமாய்த்
தீமைசால் கட்டினுக்குத் திறற்கருவி யாய்க்கிடந்த
தாமஞ்சார் நமர்களுக்கு நயப்படுமா றினிதுரைத்துச்
சேமஞ்சார் நன்னெறிக்குச் செல்லுமா றருளினையே வீரசோழியம்
எளிமையாக:
பூமகளே முதலாகப் புகுத்த அமரர் எண் திசையும்
தூ மலரால் அடிமலரைத் தொழுது இரந்து வினவிய நான்
காமமும் கடுஞ்சினமுங் கழிப்பரிய மயக்கமுமாய்த்
தீமை சால் கட்டினுக்குத் திறக் கருவி யாய்க்கிடந்த
தாமஞ்சார் நமர்களுக்கு நயப்படுமாறு இனிதுரைத்துச்
சேமஞ்சார் நன்னெறிக்குச் செல்லுமாறு அருளினையே
பூமகள் - Goddess of Earth; பூதேவி. or
Laksmī, as flower-born; இலக்குமி
தூ = தூய
இரத்தல் - To beg; to ask alms; to solicit; வேண்டுதல்
வினவு- தல் - வினா-. 1. To question, enquire; உசாவுதல்
கழி¹- தல் - To be removed; ஒழிதல்.
கழிப்பரிய - ஒழிக்க முடியாத
சால் - சார்ந்த
கட்டு² - 1. Tie, band, fastening, ligature; பந்தம். Bond, tie, attachment; பாசம்.
தாமம்: transmigration, birth, பிறப்பு
நமர்² - 1. Our relations; நம்முடைய சுற்றத்தார்.
நயப்படுதல் - பலப்படு²- தல் To become profitable;
சேமம் - 1. Safety, well-being, welfare; நல்வாழ்வு.
எண்ணிறந்த குணந்தோய்நீ யாவர்க்கு மரியோய்நீ
உண்ணிறைந்த வருளோய்நீ யுயர்பார நிறைந்தோய்நீ
மெய்ப்பொருளை யறிந்தோய்நீ மெய்யறமிங் களித்தோய்நீ
செப்பரிய தவத்தோய்நீ சேர்வார்க்குச் சார்வுநீ
நன்மைநீ தின்மைநீ நனவுநீ கனவுநீ
வன்மைநீ மென்மைநீ மதியுநீ விதியுநீ
இம்மைநீ மறுமைநீ இரவுநீ பகலுநீ
செம்மைநீ கருமைநீ சேர்வுநீ சார்வுநீ வீரசோழியம்
எளிமையாக:
எண்ணிறந்த குணந்தோய்நீ யாவர்க்கும் அரியோய்நீ
உள் நிறைந்த அருளோய்நீ உயர் பாரம் நிறைந்தோய்நீ
மெய்ப்பொருளை அறிந்தோய்நீ மெய் அறம் இங்கு அளித்தோய்நீ
செப்பரிய தவத்தோய்நீ சேர்வார்க்குச் சார்வுநீ
நன்மைநீ தின்மைநீ நனவுநீ கனவுநீ
வன்மைநீ மென்மைநீ மதியுநீ விதியுநீ
இம்மைநீ மறுமைநீ இரவுநீ பகலுநீ
செம்மைநீ கருமைநீ சேர்வுநீ சார்வுநீ
உள் - உள்ளத்தில்
நனவு - Wakefulness, opp. to kaṉavu; சாக்கிரம். நனவோ கனவோ வென்பதை யறியேன் (மணி. 8, 21).
மதி - Understanding, intellect; இயற்கை யறிவு.
அருளாழி நயந்தோய்நீ அறவாழி பயந்தோய்நீ
மருளாழி துரந்தோய்நீ மறையாழி புரந்தோய்நீ
மாதவரின் மாதவனீ வானவருள் வானவனீ
போதனருட் போதனனீ புண்ணியருட் புண்ணியனீ
ஆதிநீ யமலனீ யயனுநீ யரியுநீ
சோதிநீ நாதனீ துறைவனீ யிறைவனீ
அருளுநீ பொருளுநீ அறவனீ யநகனீ
தெருளுநீ திருவுநீ செறிவுநீ செம்மனீ” வீரசோழியம்
எனவரும் பழம் பாடலானும் (வீரசோழியம் : யாப்புப் படலம் 11 - ஆம் கவித்துறையின் உரையிற்கண்டவை)
அருள் ஆழி (கடல்) நயந்தோய் (கொடுத்தவர்) நீ அறம் ஆழி பயந்தோய்நீ
மருளாழி துரந்தோய்நீ (மருள்தல்- மயங்குதல்) மறையாழி புரந்தோய்நீ (மறை - வேதம்)
மாதவரின் மாதவன் நீ (மாமனிதருள்) வானவருள் வானவன் நீ (தேவருள்)
போதனருட் போதனன் நீ (அறிவாளி) புண்ணியருட் புண்ணியன் நீ
ஆதிநீ யமலன் நீ யயனுநீ யரியுநீ
சோதிநீ நாதன் நீ துறைவன் நீ யிறைவன் நீ
அருளுநீ பொருளுநீ அறவன் நீ யநகன் நீ
தெருளுநீ திருவுநீ செறிவுநீ செம்மன் நீ”
அமலன்: சிவன். அழுக்கற்றவன்
அயன் -. Brahmā, as not born; பிரமன்
அரி - ஹரி - விஷ்னு
நாதன் - Master, lord, superior; தலைவன்.
துறைவன் -Chief of a maritime tract; நெய்தனிலத் தலைவன்.
தெருள்² -1. Know- ledge, intelligence, clear perception, comprehension, அறிவின் தெளிவு.
இன்னும்,
“தரும தலைவன் றலைமையி னுரைத்த
பெருமைசால் நல்லறம் பெருகா தாகி
இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி
அறுகையு நெருஞ்சியு மடர்ந்துகண் ணடைத்தாங்கு
செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்
றுயிர்வழங்கு பெருநெறி யொருதிறம் பட்டது
தரும தலைவன் தலைமையின் உரைத்த - தரும முதல்வனாகிய புத்தன் முதன்மையாகக் கூறிய, The Buddha first proclaimed
பெருமை சால் நல்லறம் பெருகாதாகி - பெருமையமைந்த நல்லறம் வளர்தலின்றி, the good Dhamma - if it does not spread
இறுதிஇல் நற்கதி செல்லும் பெருவழி - அழிவில்லாத நற்கதியாகிய நிருவாணத்திற்குச் செல்லும் பெருநெறி, In the end the Path that leads to the deathless (i.e. Nibbana)
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண் அடைத்தாங்கு - அறுகம்புல்லும் நெருஞ்சியுஞ் செறிந்து இடத்தை யடைத்தாற்போல, will narrow - like going to a place full of tall grass and shrubs (with no space to move).
அறுகை - Cynodon grass. அறுகம்புல், நெருஞ்சி Cow's thorn, a small prostrate herb; முல்லுள்ள ஒரு செடிவகை.
உயிர்வழங்கு பெருநெறி - மக்கட் பிறப்பெய்திய உயிர்கள் செல்லுதற் கமைந்த பெரிய வழியானது (Thus) instead of the Right Path that leads people to salvation
செயிர் வழங்கு தீக்கதி திறந்து - துன்பத்தையுடைய தீக்கதிக்கண் செல்லும் வழி திறக்கப்பட்டு நெருக்குதலின், (குற்றங்களே பயில வழங்கும் தீய வழியாகத் திறக்கப்பட்டு) the (wrong) path that leads to bad destinations opens
கல்லென்று ஒருதிறம் பட்டது - உயிர்கள் துன்பத்தால் ஆரவாரஞ் செய்தற் கியன்றதொரு தன்மையை உடைத்தாயிற்று என்றார் என்க. leading to a state where people cry in distress.
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டென வுணர்த லல்ல தியாவதுங்
கண்டினிது விளங்காக் காட்சி போன்றது
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் - குளிர்ந்த பனியால் மூடப்பட்ட சிவந்த ஞாயிற்று மண்டலம், (Therefore the Right Path) is like the red Sun that is blocked by a cold mist
உண்டுஎன உணர்தல் அல்லது - உண்டு என்று அறிகின்ற அளவினை அன்றி, to the extent we know the (indestructible) Sun exists
யாவதும் கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது - சிறிதும் தெளிவாகக் கண்டறியப்படாத காட்சியைப் (மானதக்காட்சி) போன்றது ; we can't see it, we merely intuitively know it is there. (Thus even though we know it (The good Dhamma) is there - like the Sun covered by mist - we don't see the Dhamma clearly)
மானதக்காட்சி perception through the functioning of the intellect; புத்தி தத்துவத்தில் நின்று சவிகற்பமாய் அறியும் அறிவு
This simili is deep. Even though the mist may cover the Sun the strong rays of the Sun will eventually come through. Likewise those who may not understand clearly the Dhamma even though they know such a Truth exists will eventually begin to see and benefit from it. Source
சலாகை நுழைந்த மணித்துளை யகவையின்
உலாநீர்ப் பெருங்கட லோடா தாயினு
மாங்கத் துளைவழி யுகுநீர் போல
வீங்கு நல்லற மெய்தலு முண்டெனச்
சொல்லலு முண்டியான் சொல்லுத றேற்றார்
மல்லன்மா ஞாலத்து மக்களே யாதலின்
சலாகை நுழைந்த மணித்துளை அகவையின் - சிறிய நாராசம் நுழைந்த மணிகளின் துளையாகிய உள்ளிடத்தே, In the space made by a needle in a bead சலாகை - Needle-like tool of steel; சிறு நாராசம். அகவை - Inside; உள்ளிடம்
உலா நீர்ப் பெருங் கடல் ஓடாதாயினும் - பெரிய கடலில் உலாவுகின்ற நீர் முழுவதும் ஓடாதானாலும், All the waters of the sea would not flow through
ஆங்கத் துளைவழி உகுநீர்போல - அச் சிறிய துளையின் வழியே சிந்துகின்ற நீரைப்போல, But (a pot of the same sea water with) even that small hole allows water to seep through
ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டு எனச் சொல்லும் உண்டுயான் - இவ்வுலகில் நல்ல அறங்களை அடைதலும் உண்டு என்று யான் மொழிவதும் உண்டு, Likewise I (Aravana Adigal) say that the Good Dhamma reaches some in this world.
சொல்லுதல் தேற்றார் மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் - அங்ஙன முரைப்பதை வளப்பம் மிக்க பெரிய பூமியின்கணுள்ள மக்கள் தெளியார் ஆகலின்; When the people in this abundant world were not clear about this Dhamma proclaimed
வளப்பம் - Abundance, fulness; மிகுதி.
Aravana Adigal says that though spreading the Dhamma is difficult (like all the occeans water going through a small hole in a bead) he is doing what he can (like water seeping though a pot with a similar sized hole).
சக்கர வாளத்துத் தேவ ரெல்லாம்
தொக்கொருங் கீண்டித் துடித லோகத்து
மிக்கோன் பாதம் விழுந்தன ரிரப்ப
விருள்பரந்து கிடந்த மலர்தலை யுலகத்து
விரிகதிர்ச் செல்வன் றோன்றின னென்ன 12,57-76
சக்கரவாளத்துத் தேவர் எல்லாம் - சக்கரவாளத்திலுள்ள தேவரனைவரும், All the Devas residing in Mt. Cakkaravāḷa (A mythical mountain range)
தொக்கு ஒருங்கு ஈண்டித் துடிதலோகத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப - சேர்ந்து ஒன்றாகக்கூடித் துடிதலோகத்துள்ள சிறந்த தேவன் திருவடிகளில் விழுந்து இரக்க, went to the good Deva (The Buddha to be) in Thuditha heaven and besieged him.
இருள் பரந்து கிடந்த மலர்தலை உலகத்து - இருளாற் பரவப்பட்டுக் கிடந்த அகன்ற இடத்தையுடைய பூமியின்கண், And amidst the darkness in the wide world
விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன - விரிந்த கிரணங்களையுடைய பரிதிவானவன் தோன்றினாற்போல The radiant Lord appeared.
புத்த ஞாயிறு தோன்றுங் காலை” 12,58-86
புத்தஞாயிறு தோன்றும் காலை - புத்தனாகிய ஞாயிறு தோன்றும்பொழுது, The time that the Buddha appeared
எனவரும் மணிமேகலையானும், (12; 57 - 86) உணர்க, இதற்கான உரை இங்கே தேடவும்
இன்னும்,
“துடித விமானத்தினின்றும் போந்து குயிலாபுரத்துத் தோன்றி உலும்பினி
வனத்துப் பிறந்து சுபிலாபுரத்துப் புத்த தத்துவம் பெற்றுத் தர்மோப தேசம்
பண்ணி மகாபோதிப் பிரதேசத்துப் பொன்றக் கெடுதல் புத்தனுக்கு நியதி“
(மொக்கலவாதச் சருக்கம் 160 ஆம் பாட்டுனர) எனவரும் நீலகேசி
யுரையாசிரியர் கூற்றும் ஈண்டு நினைக. (15)