தம்மபதம் - ஜோடிகள்

1. யமக வர்க்கம் - ஜோடிகள்

Yamakavagga - Pairs

1 - 2

எண்ணங்கள் (தர்மங்கள் அல்லது சேதசிகங்கள்) மனதிலிருந்து உண்டாகின்றன. அவைகளுக்கு மனதே முதன்மையானது.

எண்ணங்கள் மனதினாலே உண்டாக்கப் படுகின்றன. ஆகையினால் ஒருவன் தீய எண்ணங்களோடு பேசினாலும் சரி, தீய செய்கைகளைச் செய்தாலும் சரி, அவற்றினால் உண்டாகும் துக்கங்கள், இழுத்துச் செல்லும் எருதுகளைப் பின் தொடர்ந்துபோகும் வண்டிபோல, அவனுடைய அடிச் சுவடுகளைப் பின்பற்றித் தொடர்கின்றன.

Phenomena are preceded by the heart, ruled by the heart, made of the heart. If you speak or act with a corrupted heart, then suffering follows you — as the wheel of the cart, the track of the ox that pulls it.

எண்ணங்கள் மனதிலிருந்தே தோன்றுகின்றன. எண்ணங்களே முக்கியமானவை. அவை மனத்தினாலே உண்டாக்கபடுகின்றன. ஒருவன் தூய எண்ணங்களோடு பேசினாலும் சரி, செய்தாலும் சரி அவற்றினால் உண்டாகும் நன்மைகள், எப்போதும்நீங்காத நிழல் போன்று அவனைப் பின் தொடர்கின்றன.

Phenomena are preceded by the heart, ruled by the heart, made of the heart. If you speak or act with a calm, bright heart, then happiness follows you, like a shadow that never leaves.

3 - 6 ''அவன் என்னை இகழ்ந்து பேசினான், அவன் என்னை அடித்தான், என்னை வென்றான், என் பொருள்களைக் கவர்ந்து கொண்டான்' என்பது போன்ற எண்ணங்களை ஒருவன் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய பகைமை (வைரம்) ஒருபோதும் தணியாது.

'He insulted me, hit me, beat me, robbed me' — for those who brood on this, hostility isn't stilled.

'அவன் என்னை ஏசினான், என்னை அடித்தான், வென்றான், பொருளைக் கவர்ந்து கொண்டான்' என்று எவன் ஒருவன் மனத்தில் கொள்ளாமல் இருக்கிறானோ அவனுடைய வைரம் (பகைமை) சாந்தப்படுகிறது.

'He insulted me, hit me, beat me, robbed me' — for those who don't brood on this, hostility is stilled.

ஏனெனில், பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. பகைமையை அன்பினாலேயே தணிக்க முடியும். இதுதான் தொன்றுதொட்டு வருகின்ற தர்மமாகும்.

Hostilities aren't stilled through hostility, regardless. Hostilities are stilled through non-hostility: this, an unending truth.

கலகம் செய்ய விரும்புவோர் 'தாங்கள் என்றைக்காவது இறப்போம்' என்பதை அறிகிறதில்லை. அறிந்தால் அவர்கள் கலகம் செய்வதை நிறுத்தி விடுவார்கள்.

Unlike those who don't realize that we're here on the verge of perishing, those who do: their quarrels are stilled.

7 - 8

சிற்றின்பத்தை அடைய விரும்பியும், பஞ்சேந்திரியங்களை அடக்காமலும், மிதமிஞ்சிய உணவை உண்டும், சோம்பல் கொண்டும், சுறுசுறுப்பில்லாமலும் இருக்கிறவனை மாரன் (மன்மதன்) பலமற்ற மரத்தைச் சூறாவளிக் காற்று பெயர்த்து வீழ்த்துவதுபோல, வென்று விடுவான்.

One who stays focused on the beautiful, is unrestrained with the senses, knowing no moderation in food, apathetic, unenergetic: Mara overcomes him as the wind, a weak tree.

சிற்றின்பம் அசுகி (கெட்டது) என்று கண்டும், பஞ்சேந்திரியத்தை அடக்கியும், மித உணவு கொண்டும், பக்தியும் சுறுசுறுப்பும் அடைந்தும் உள்ள ஒருவனை, கற்பாறை யாலான மலையைச் சூறாவளிக் காற்று அசைக்க முடியாததுபோல, மாரன் அசைக்கமுடியாது.

One who stays focused on the foul, is restrained with regard to the senses, knowing moderation in food, full of conviction & energy: Mara does not overcome him as the wind, a mountain of rock.

9 – 10

யாரேனும் ஒருவர் மஞ்சள் (சீவர) ஆடையை உடுத்திக் கொள்ள விரும்புவாரானால், அவர் மாசுள்ள மனமுடையவராய் தன் அடக்கமும் உண்மையும் இல்லாமலிருப் பாரானால், மஞ்சள் (சீவர) ஆடை உடுப்பதற்கு அவர் தகுதியுள்ளவர் ஆகமாட்டார்.

He who, depraved, devoid of truthfulness and self-control, puts on the ochre robe, doesn't deserve the ochre robe.

மனமாசுகளை நீக்கி, ஒழுக்கத்தில் நிலைபெற்று நின்று, தன்னடக்கமும் மெய்யுணர்வும் ஒருவர் பெற்றிருப்பாரானால், திண்ணமாக அவரே மஞ்சள் (சீவர) ஆடையுடுக்கத் தகுதி உடையவர் ஆவார்.

But he who is free of depravity, endowed with truthfulness and self-control, well-established in the precepts, truly deserves the ochre robe.

11 - 12

சாரம் அற்றவைகளைச் சாரம் உள்ளவையென்றும், சாரம் உள்ளவைகளைச் சாரம் அற்றவையென்றும் கொண்டிருப்பவர், தவறான காட்சியையுடையவராய் இருப்பதனால், சாரத்தை (மெய்க் காட்சியை) அடைய மாட்டார்.

Those who regard non-essence as essence and see essence as non-, don't get to the essence, ranging about in wrong resolves.

சாரமுள்ளதைச் சாரம் என்றும், சாரம் அற்றதைச் சாரம் அற்றது என்றும் காண்கிறவர், மெய்க் காட்சியைக் கொண்டிருப்பதனானாலே, சாரத்தை (மெய்யை) அடைகிறார்.

But those who know essence as essence, and non-essence as non-, get to the essence, ranging about in right resolves.

13 - 14

நன்றாக வேயப் பெறாத கூரை வீட்டில் மழை நீர்புகுவது போல, பண்படுத்தப்படாத மனத்தில் காம எண்ணங்கள் (ராகம்) புகுந்துவிடுகின்றன.

As rain seeps into an ill-thatched hut, so passion, the undeveloped mind.

நன்றாக வேயப் பட்ட கூரை வீட்டுக்குள் மழை நீர் இறங்காதது போல, பண்படுத்தப்பட்ட மனத்திற்குள் காம எண்ணங்கள் (ராகம்) புக முடியாது.

As rain doesn't seep into a well-thatched hut, so passion does not, the well-developed mind.

15 - 18

பாவஞ் செய்தவன் இம்மையிலும் துக்கம் அடைகிறான்; மறுமையிலும் துக்கமடை கிறான்; அவன் இரண்டிடங்களிலும் துக்கமடைகிறான். தன்னுடைய தீய செய்கை களைக் கண்டு அவன் விசனமடைந்து அழிந்து போகிறான்.

Here he grieves he grieves hereafter. In both worlds the wrong-doer grieves. He grieves, he's afflicted, seeing the corruption of his deeds.

புண்ணியம் செய்தவன் இம்மையிலும் மகிழ்ச்சியடைகிறான்; மறுமையிலும் மகிழ்ச்சி யடைகிறான்; அவன் இரண்டிடங்களிலும் மகிழ்ச்சியடைகிறான். தன்னுடைய நல்ல செய்கைகளைக் கண்டு அவன் மகிழ்ந்து மேன்மேலும் இன்பமடைகிறான்.

Here he rejoices, he rejoices hereafter. In both worlds the merit-maker rejoices. He rejoices, is jubilant, seeing the purity of his deeds.

பாவஞ் செய்தவன் இம்மையிலும் அழங்குகிறான்; மறுமையிலும் அழங்குகிறான்; அவன் இருமையிலும் அழங்குகிறான். 'நான் பாவம் செய்தேன்' என்று அவன் மனம் புழங்கு கிறான். நரகத்திற் சென்று அவன் மேலும் மேலும் அழுது புலம்புகிறான்.

Here he's tormented, he's tormented hereafter. In both worlds the wrong-doer's tormented.He's tormented at the thought, 'I've done wrong.' Having gone to a bad destination, he's tormented all the more.

நன்னெறியில் நடப்பவன் இம்மையிலும் உவகை கொள்கிறான்; மறுமையிலும் உவகை கொள்கிறான்; அவன் இருமையிலும் உவகை பெறுகிறான். 'நான் நல்லதைச் (புண்ணியத்தைச்) செய்தேன்' என்று நினைத்து அவன் இன்புறுகிறான். சுவர்க்கத்திற்குப்போய் நன்மைகளைத் துய்த்துக் கொண்டே இன்பமடைகிறான்.

Here he delights he delights hereafter. In both worlds the merit-maker delights. He delights at the thought, 'I've made merit.' Having gone to a good destination, he delights all the more.

19 - 20

ஒருவர் திரிபிடக புத்த தர்மங்களை முழுவதும் கற்று மிக உரக்க ஓதி உபதேசித்தாலும், அவர் அச்சூத்திரங்கள் கூறுகிறபடி நடக்கவில்லையானால், பிறருடைய பசுக்களைக் கணக்கெண்ணிக் கொண்டிருக்கும் இடையனையொப்ப, துறவிகள்அடையவேண்டிய பலனை அடையமாட்டார்.

If he recites many teachings, but, heedless man, doesn't do what they say, like a cowherd counting the cattle of others, he has no share in the contemplative life.

திரிபிடக புத்த தர்மங்களைச் சிறிதளவு ஓதினாலும், அவை கூறுகிறபடி ஒருவர் நடந்து, ஆசை, பகை, மோகம் முதலியவைகளை அகற்றி, நற்காட்சி பெற்று மனமாசு அற்று இருவகைப்பற்றுக்களையும் விட்டிருப்பாரானால், அவரே உண்மையில் துறவிகள்அடையும் தூய பயனை அடைவார்.

If he recites next to nothing but follows the Dhamma in line with the Dhamma; abandoning passion, aversion, delusion; alert, his mind well-released, not clinging either here or hereafter: he has his share in the contemplative life.