Five Subjects for Frequent Recollection
அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டிய ஐந்து செய்திகள்
1. I am of the nature to age, I have not gone beyond aging.
வயதாவது மனித இயல்பு. நான் வயதாவதைக் கடந்துப் போகவில்லை.
2. I am of the nature to sicken, I have not gone beyond sickness.
நோய்வாய்ப்படுவது மனித இயல்பு. நான் நோய்வாய்ப்படுவதைக் கடந்துப் போகவில்லை.
3. I am of the nature to die, I have not gone beyond dying.
மரணமடைவது மனித இயல்பு. நான் மரணமடைவதைக் கடந்துப் போக வில்லை.
4. All that is mine, beloved and pleasing, will become otherwise, will become separated from me.
எனக்குப் பிடித்த சுகம் தரும் என் பொருட்களெல்லாம், அப்படி அல்லாமல் ஒருநாள் மாறிப் போய்விடும். என்னை விட்டுப் பிரிந்து செல்லும்.
5. I am the owner of my kamma, heir to my kamma, born of my kamma,
Related to my kamma, abide supported by my kamma.
Whatever kamma I shall do, for good or for ill -
Of that I will be the heir.
என் செய்கைக்கு நானே உரிமையாளன்.
என் செய்கைக்கு நானே வாரிசு
என் செய்கையினால் நான் பிறந்தவன்
என் செய்கைக்கு நான் சொந்தக்காரன்.
என் செய்கையின் ஆதரவோடு நான் நிலைத்து நிற்கிறேன்.
நல்லதோ கெட்டதோ என் செய்கைக்கு நான் வாரிசாகிறேன்.
செய்கை - கம்மா(பாலி மொழியில்), கர்மா (சமஸ்கிரதம்), நடத்தை
"உடலாலும், பேச்சாலும், அறிவோடும் நோக்கத்தோடு செய்வதுதான் கர்மா."
Thus we should frequently recollect.
இவைகளை நாம் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
English Source: Birken Buddhist Monastery Chanting Book
திரிபிடக ஆதாரம்; அங்குத்தர நிகாயம் 5.57
https://suttacentral.net/an5.57/en/bodhi