மணிமேகலை காதை 30

மணிமேகலை முகப்பு Manimekalai Home

மணிமேகலை Manimekalai

காதை 30 Canto 30

வரிகள் 51-63 Lines

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை


"பேதைமை என்பது யாது?" என வினவின்

ஓதிய இவற்றை உணராது மயங்கி

இயற்படு பொருளால் கண்டது மறந்து

முயற்கோடு உண்டு எனக் கேட்டது தெளிதல்

உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம்

அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்

மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்

தொக்க விலங்கும் பேயும் என்றே

நல்வினை தீவினை என்று இரு வகையால்

சொல்லப்பட்ட கருவில் சார்தலும் 30-060

கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி

வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு

மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும்


To the question, "What is ignorance?"

Not understanding what was described so far (the four noble truths etc.) and being deluded

Forgetting what was learnt from having seen and the essence of what was seen

Asking someone if hares have horns and believing them when they say, yes

The three worlds have beings innumerable.

The many beings are of six kinds.

Humans, Devas, Brahmas, Hell beings

Assembly of animals and ghosts

Depending on the two types of our actions - good and bad

We associate with said (the six types of beings) womb

At the appropriate time we take those births.

When the results of our kamma bears fruit

It will be reflected in the mind as great joy or worry.


51. "பேதைமை என்பது யாது?" என வினவின்

பேதைமையெனச் சொல்லப்படுவது யாதென்று கேட்டால்;

பேதைமை – அறியாமை, Ignorance, Delusion


52. ஓதிய இவற்றை உணராது மயங்கி,

ஓதிய இவற்றை உணராது - நால்வகையாகக் கூறிய வாய்மைகளையும், நிதானங்களையும் உணர்ந்து கொள்ளாமல்;

மயங்குதல் - அறிவு கலங்குதல், அறிவின் திரிபு, 1. Mental delusion; stupor, bewilderment; aberration of mind, as from ignorance, fascination, etc.; 2. Spiritual ignorance; அவித்தை

Not understanding what was described so far (the four noble truths, the 12 links of dependent origination) and being deluded


53. இயற்படு பொருளால் கண்டது மறந்து,

காட்சியாலும், கருத்தளவையாலும் அறிந்தவற்றை மறந்து;

இயற்படு பொருள் - இயல்பால் அறிந்தவை;

Essence, as of a treatise; true object or significance; உண்மைக் கருத்து.


54. "முயற்கோடு உண்டு எனக் கேட்டது தெளிதல்"

முயலுக்குக் கொம்பு உண்டா, இல்லையா என்பதைப் பிறரைக் கேட்டு, உண்டெனின் அதை நம்புவதாம்.

முயற்கோடு – முயற்கொம்பு, இல்பொருள்,

hare's horns. [முயலின் கொம்பு] Non-existent thing, unreality;


55, 56. "உலகம் மூன்றினும் உயிராம் உலகம் அலகு இல"

உலகம் மூன்றினும் - மூவகையுலகங்களிலும்; உயிராம் உலகம் அலகில - உயிர்களின் கூட்டம் அளவில்லாதனவாகும்;

There are three worlds - Middle World (Human Realm - where we do kamma), World Above (heavens, result of good kamma), World Below (Hell, result of bad kamma). வினை செய்தற்குரியது நடுவுலக மெனவும், நல்வினைப் பயனை நுகர்தற்குரியது மேலுலக மெனவும், தீவினைப் பயனை நுகர்தற்குரியது கீழுலக மெனவும் முக்கூறுபடுவதுபற்றி, "உலக மூன்றினும்" என்றார்.


56. "பல் உயிர் அறு வகைத்து ஆகும்"

பல் உயிர் - பலவாகிய உயிர்கள்; அறுவகைத்தாம் – ஆறு வகைப்படும்;

Six kinds of beings.


57. "மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்"

மக்கள், தேவர், பிரமர், நரகர் என்றும்;

Humans, Devas, Brahmas, Hell beings


58. "தொக்க விலங்கும் பேயும் என்றே"

புட்களோடு தொக்கிருக்கம் விலங்கும் பேயும் என்றும்; அறுவகைத்தாம் – ஆறு வகைப்படும்;

Assembly of animals and ghosts

புள் – பறவை, (from புட்களோடு) - Bird; fowl;

தொக்கி - தொகு - Assembly, company; கூட்டத்தார்.


59. "நல்வினை தீவினை என்று இரு வகையால்"

நற்செய்கையும் தீச்செய்கையுமாகிய இருவகைச் செய்கைகளால்;

Depending on the 2 types of our actions good and bad


60. "சொல்லப்பட்ட கருவில் சார்தலும் "

மக்கள் தேவர் முதலாகச் சொல்லப்பட்ட பிறப்பை யடைவதும் ;

We associate with said (the six types of beings) birth

கரு – பிறப்பு, Birth;


61. "கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி"

அப் பிறப்புக்களில் இயைந்த காலத்தே அவற்றோடே தோன்றி;

At the appropriate time we take those births


தோற்றி - தோன்றி

தோற்றரவு – உற்பத்தி, Coming into existence;. துன்பக்கதியிற் றோற்றரவின்றி (மணி. 26, 56)

இயைந்த - in accordance

62. "வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு"

வினைப்பயன் விளையுங்காலை - செய்வினைப் பயனாகிய கருமம் தோன்றும் காலத்தில்;

When the kamma fruits (results of the kamma appears)


63. "மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும்"

மனப் பேரின்பமும் - மனத்தின்கண் பெரிய இன்பத்தையும்; கவலையும் - துன்பத்தையும் : காட்டும் - காட்டச் செய்யும்.

It will be reflected in the mind as great joy or worry.