மணிமேகலை காதை 30

மணிமேகலை முகப்பு Manimekalai Home

மணிமேகலை Manimekalai

காதை 30 Canto 30

வரிகள் 159-168 Lines

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை


காலம் மூன்றும் கருதுங்காலை

இறந்த காலம் என்னல் வேண்டும் 30-160

மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை

நிகழ்ந்த காலம் என நேரப்படுமே

உணர்வே அருஉரு வாயில் ஊறே

நுகர்வே வேட்கை பற்றே பவமே

தோற்றம் என்று இவை சொல்லுங்காலை

எதிர்காலம் என இசைக்கப் படுமே

பிறப்பே பிணியே மூப்பே சாவே

அவலம் அரற்று கவலை கையாறுகள்


When analyzed there are three periods

Ignorance that causes forgetfulness and kamma formations are two of the links

should be considered as past period.

Consciousness, name and form, sense bases, contact,

feelings, craving, clinging, becoming and

birth when considered

belong to the present period.

Birth and disease, aging, death

sorrow, lamentation, worry and helplessness

belong to the future period.


159. காலம் மூன்றும் கருதுங்காலை

காலம் மூன்றும் - காலவகை மூன்றனையும்; கருதுங்காலை - ஆராயுமிடத்து;

When analyzed there are three periods


161. மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை -

மறத்தலைச் செய்யும் பேதைமையும், செய்கையும் என்ற இரண்டு நிதானங்களையும்;

Ignorance that causes forgetfulness and kamma formations are two of the links

160. இறந்த காலம் என்னல் வேண்டும் -

இறந்த காலமென அறிய வேண்டும்;

should be considered as past period.


163, 164, 165. உணர்வே அருஉரு வாயில் ஊறே

நுகர்வே வேட்கை பற்றே பவமே

தோற்றம் என்று இவை சொல்லுங்காலை -

உணர்ச்சியும், அருவுருவும், வாயிலும், ஊறும், நுகர்ச்சியும், வேட்கையும், பற்றும், பவமும், தோற்றமும் என்ற இந் நிதானங்களை;

சொல்லுங்காலை - கால வகையிற் கூறுபடுத்தி உரைக்குமிடத்து;

Consciousness, name and form, sense bases, contact

feelings, craving, clinging, becoming and birth when considered

162. நிகழ்ந்த காலம் என நேரப்படுமே -

இவை நிகழ்காலமெனக் கொள்ளப்படும்;

belong to the present period.


167, 168. பிறப்பே பிணியே மூப்பே சாவே

அவலம் அரற்று கவலை கையாறுகள் -

பிறப்பும், பிணியும், முதுமையும், சாக்காடும், அவலமும், அரற்றும் கவலையும், கையாறும் என்ற இவைகள்;

The birth mentioned here refers to future births.

Birth and disease, aging, death

sorrow, lamentation, worry and helplessness

166. எதிர்காலம் என இசைக்கப்படுமே -

எதிர்காலத்தனவாம் என்று சொல்லப்படும்.

belong to the future period.

Alt Comm.

(விளக்கம்) பிறந்துழலும் உயிர் பற்றியது இக்கால வாராய்ச்சி. முற்பிறப்பிலே உண்டான பேதைமையும், செய்கையுமே இப்பிறப்பை உண்டாக்கின. ஆதலின் அவை இறந்த காலத்தவை எனப்பட்டன. உணர்வு முதலாகத் தோற்றம் ஈறாக அமைந்த இந்நிதானங்கள் ஒன்பதும் பிறந்தவனுக்கு யாண்டும் நிகழ் காலத்தனவேயாக இருத்தலுணர்க. இனிப் பிறப்பு என்றது வழிமுறைப் பிறப்பினை. அப்பிறப்பும், பிணியும் அதற்குரிய மூப்பும், சாவும், அவலமும், அரற்றும் கவலையும், கையாறுகளும் எதிர்காலத்தனவே ஆதலும் அறிக. இத்தகைய துன்பங்களை மறந்தமையாலே நிகழ்காலத்தனவாகிய இவை வருகின்றன, எதிர்காலத்தும் வரவிருக்கின்றன என்னும் வாய்மையை மறந்த பேதைமையும், செய்கையும் என்று பேதைமையின் இழிவு தோன்ற விதந்தோதினர் எனக் கொள்ளுதலுமாம்.

வழிமுறை – சந்ததி, Descendant;

* * * * *

Notes:

Visuddhimagga (xvii, 287)

287. The past, the present and the future are its three times. Of these, it should be understood that, according to what is given as such in the texts, the two factors ignorance and formations belong to the past time, the eight beginning with consciousness belong to the present time, and the two, birth and ageing-and-death, belong to the future time. [579]