மணிமேகலை காதை 30

மணிமேகலை முகப்பு Manimekalai Home

மணிமேகலை Manimekalai

காதை 30 Canto 30

வரிகள் 148-158 Lines

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை


பிறப்பின் முதல் உணர்வு ஆதிச் சந்தி

நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம்

புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி 150

கன்மக் கூட்டத்தொடு வரு பிறப்பிடை

முன்னிச் செல்வது மூன்றாம் சந்தி

மூன்று வகைப் பிறப்பும் மொழியுங்காலை

ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே

தோன்றல் வீடெனத் துணிந்து தோன்றியும்

உணர்வு உள் அடங்க உருவாய்த் தோன்றியும்

உணர்வும் உருவும் உடங்கத் தோன்றிப்

புணர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும்


The cause for birth are Kammic formations and consciousness.

Their joining is the first connection.

The joining of Feelings and Craving

faultlessly known as the second connection

Between becoming and the coming birth

is the third connection

When we analyze the three types of birth

consciousness that confidently chooses to follow the excellent path of purification

which leads to the goal of liberation

takes birth in a form containing consciousness

consciousness and form appear together

as humans, gods and animals.


148. பிறப்பின் முதல் உணர்வு ஆதிச் சந்தி

பிறப்புக்கு காரணமாகிய செய்கையும் உணர்ச்சியும் பொருந்துவது முதற் சந்தியாம்;

The cause for birth are Kammic formations and consciousness. Their link is the first connection.

உணர்வு - consciousness

முதல் - Cause; காரணம்.

ஆதி – தொடக்கம், Beginning, commencement;

பொருந்துதல் – இணைத்தல், unite To join together,


149. நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம்

நுகர்ச்சியாகிய ஒழுக்கமும் வேட்கையும் கூடும் சந்தி;

The link between Feelings and Craving

ஒழுக்கொடு – ஒழுக்கத்துடன்,

விழைவு – ஆசை, வேட்கை

நுகர்ச்சி - feeling

கூட்டம் – கூடுதல், Union, combination, meeting;


150. புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி

குற்றமின்றி அறியப்படுவது இரண்டாஞ் சந்தி யாகும்;

faultlessly known as the second connection


151, 152. கன்மக் கூட்டத்தொடு வரு பிறப்பிடை

முன்னிச் செல்வது மூன்றாம் சந்தி -

கன்மத் தொகுதியும் அதனால் வரும் பிறப்பும் பொருந்திச் செல்வதாகிய சந்தி மூன்றாஞ் சந்தியாகும்

Between becoming and the coming birth

is the third connection


153. மூன்று வகைப் பிறப்பும் மொழியுங்காலை -

மூன்றுவகையான பிறப்புக்களையும் கூறுமிடத்து;

When we analyse the three types of birth


154, 155. ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே

தோன்றல் வீடு எனத் துணிந்து தோன்றியும் -

தூய்மை அமைந்த விசுத்தி மார்க்கத்து முடிவாகிய சமாதி ஞானமே வீடுபேறெனத் துணிந்து அதுவேயாய்த் தோன்றி நிற்பதும்;

Alternate Commentary: அமைதியுற்ற துன்ப நீக்கமார்க்கம் ஆகிய நெறியிலே இயங்கும் உணர்வு தலைசிறந்து தோன்றுவதே வீடுபேறாகும் என்று துணிந்து பிறந்தும்

following the excellent Path of purification which leads consciousness

to the formless realm which guarantees the goal of liberation

ஆன்ற – 1. Excellent, grand, splendid; மாட்சிமைப்பட்ட. 2. Who has grown calm owing to deep learning; அடங்கிய. 3. Which has ceased to exist; இல்லாமற்போன.

ஆய - ஆ ? (See kural 2)


Note: Refers to developing meditation to the formless jhanas which as per AN3.76 AN 3.76: Paṭhamabhavasutta—Bhikkhu Sujato (suttacentral.net) leads to birth in the formless realms. Those who have reached the 3rd stage of enlightenment the Anagami are said to be reborn here. In this realm there is only mind no body or form. They will never revert to lower realms.

for more on formless realms (highest heavenly realms)

Buddhist Cosmology (10): Formless Realm - YouTube



156. உணர்வு உள் அடங்க உருவாய்த் தோன்றியும் -

உணர்வாகவேயஆகாது அவ் வுணர்வு உள்ளே அடங்க உருக்கொண்டு நிற்பதும்;

Alternate Commentary: அவ்வுணர்வு உள்ளே அடங்குமாறு உருவமே தலைசிறந்து பிறந்தும்

takes birth in a subtle form along with consciousness


Note: This is the brahma realms where there is subtle form. These are also high heavenly states though lower than the formless realms.

See Buddhist Cosmology (7): Brahma Realms - YouTube


157. உணர்வும் உருவும் உடங்கத் தோன்றி -

உணர்வும் உருவும் உடனிகழத் தோன்றி;

Alternate Commentary: உணர்வாலும் உருவத்தாலும் சிறப்பின்றி அவையிரண்டும் ஒருபடித்தாகப் பிறந்தும்

consciousness and coarse form appear together in the sensual realm

உடங்கு – சேர, ஒத்து, ஒரு படியாக, Together, closely;.


158. புணர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும் –

கூடி வாழும் மக்களும், தெய்வமும் விலங்குமாகத் தோன்றி நிற்பதுமாம்.

Alternate Commentary: மக்களும், தெய்வமும், விலங்கும் ஆகின்ற இம்மூன்றுவகையும் ஆகும் என்றார்

புணர்தரு - புணர் + தரு – கூடி வாழும் when joined gives rise to

புணர்தல் – பொருந்துதல், To join, unite;

could mean sexual union. Since only in the sensual realm there are sexes - male and female.

This includes humans, animals and devas


ஞான நெறி நின்றியங்கி வீடு பெறுதற்கியன்ற நன்னர் நெஞ்சத்தோடு பிறக்கும் மக்கட் பிறப்பின்கண் உணர்வே தலைசிறத்தலின் அதுவே தலையாய பிறப்பென்னும் குறிப்புத் தோன்ற மக்கட் பிறப்பை இவ்வாறு விதந்தார். தெய்வப் பிறப்பில் வீட்டுணர்வு சிறவாமல் நுகர்ச்சியே சிறந்து நிற்றலின் அதனை உணர்வு அடங்கி உருவம் சிறந்த பிறப்பென்றார். விலங்குப் பிறப்பில் உணர்வும் உருவமும் மாகிய இரண்டும் சிறவாமை தோன்ற உணர்வும் உருவும் உடங்கத் தோன்றி என்றார். உடங்கு உடங்க என எச்சமாயிற்று. உடம்பொடு புணர்தரு மக்கள் முதலிய ஆகையும் என்க.

* * * * *

Notes:

Visuddhimagga (xvii, 289)

289. 1. Herein, between formations and rebirth-linking consciousness there is one link consisting of cause-fruit. Between feeling and craving there is one link consisting of fruit-cause. And between becoming and birth there is one link consisting of cause-fruit. This is how it should be understood that it has three links with cause, fruit, cause, as first parts.

First Connection

The connection between sankhara and vinnana constitutes the connection between Past causes and Present effects.

Second Connection

The connection between vedana and tanha

constitutes the connection between Present effects and Present causes.

Third Connection

The connection between bhava and jati

constitutes the connection between Present causes and Future effects.