வெட்கத்தையே தருகிறாயே…

Post date: Jun 23, 2011 3:42:23 AM

காற்றோடு விளையடி கொண்டிருந்த உன்

சேலை தலைப்பை இழுத்து

நி இடுப்பில்  செருகி கொண்டாய்

அவ்வளவுதான்……

நின்று விட்டது காற்று.

நான் எது கேட்டாலும் வெட்கத்தையே

தருகிறாயே… வெட்கத்தைக் கேட்டால்

என்ன தருவாய்?

 

அழகான பொருட்களெல்லாம்

உன்னை நினைவு படுத்துகின்றன.

உன்னை நினைவுபடுத்துகிற

எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன

 

ஒரு வண்ணத்துப் பூச்சி

உன்னைக் காட்டி

என்னிடம் கேட்கிறது|

ஏன் இந்தப் பூ

நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!

நீ யாருக்கோ செய்த

மௌன அஞ்சலியைப்

பார்த்ததும்…

எனக்கும்

செத்துவிடத் தோன்றியது.

என்னை ஒரு

குடுகுடுப்பைக்காரனாய்

நினைத்துக்கொண்டு

ஓர் அதிகாலையில்

உன் வீட்டுமுன் நின்று

இந்த வீட்டில் ஒரு தேவதை

வாழ்கிறது

என்று கத்திவிட்டு

குடுகுடுவென

நான் ஓடிவந்திருக்கிறேன்.

 

உன் தோழிகளோடு

கைப் பந்து

ஆடுவதுதான்

எனக்குத்

திருவிளையாடல்.

நீஉன் கண்களின் பார்வையிலிருந்து…

விரல்களின் அசைவிலிருந்து… கொலுசின்

ஓசையிலிருந்துதான் காதலை நான் கற்றுக்

கொண்டேன். ஆனாலும் உனக்காக நான்

கற்று வைத்திருக்கும் காதலையெல்லாம்

உனக்கு வழங்க ஆரம்பித்தால் தாங்க

முடியாது உன்னால்…

உன்னை எப்படித்தான் உன் வீடு தாங்குகிறது?

நீ சிரிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?

நீ குளிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?

அதைவிட

நீ தூங்கும்போது என்னதான் செய்யும் உன் வீடு?

நீ உன் முகத்தில்

வந்து விழும் முடிகளை

ஒதுக்கி விடும் போதெல்லாம்

உன் அழகு முகத்தை

ஆசையோடு பார்க்க வந்த முடிகளை

ஒதுக்காதே என்று

தடுக்க நினைப்பேன்.

ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற

அழகைப் பார்த்ததும்

சிலையாக நின்று விடுகிறேன்.

நீ எப்போதும்

தலையைக் குனிந்தே

வெட்கப்படுவதால்

உன் மதிப்புமிக்க

வெட்கத்தையெல்லாம்

இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க

முடிகிறது!

நான் வழிபட

இந்த உலகத்தில்

எத்தனையோ கடவுள்கள்

இருக்கிறார்கள்.நான் பின்பற்ற

இந்த உலகத்தில்

எத்தனையோ மதங்கள்

இருக்கின்றன.

ஆனால்,

நான் காதலிக்க

இந்த உலகத்தில்

நீ மட்டும்தான் இருக்கிறாய்!

 

முனிவர்கள்

கடவுளைப் பார்ப்பதற்காகத்

தவம் இருக்கிறார்கள்.

நானோ,

ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு

தவம் இருக்கிறேன்.

எதற்காக

நீ கஷ்டப்பட்டுக் கோலம்

போடுகிறாய்..?பேசாமல்

வாசலிலேயே

சிறிது நேரம் உட்கார்ந்திரு,

போதும்!

 

ஒரேயரு முறை

கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி

வெட்கப்படேன்…

வெகுநாட்களாய்

உன் வெட்கத்தைத் தரிசிக்கத்

துடிக்கிறது

வானம்!

காதல்தான்

நான் செய்யும் தவம்.

என் கடுந்தவத்தைக் கலைத்து

என்ன வரம் வேண்டும் என்று

எந்தத் தெய்வமும்

என்னைக் கேட்காமலிருக்கட்டும்.

உன் கண்கள்

தானம் செய்ததுதான்

இந்தக் காதல்!

தெய்வமே,

உன்னை என் இதயத்திலிருந்து

வெளியேற்றிவிட்டு,

ஒரு பெண்ணைக்

குடிவைத்ததற்காகக்

கோபித்துக்கொண்டு

என்னைக் கைவிட்டு விடாதே!உன்னால்

தூணிலோ, துரும்பிலோகூட

வாசம் செய்ய முடியும்.

அவளால் முடியுமா?

யாராவது

ஏதாவது

அதிர்ச்சியான

செய்தி சொன்னால்

அச்சச்சோ என்று

நீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.

நான் அதிர்ச்சி அடைந்துவிடுவேன்!

நான் சமைத்த பாவக்காயை

நீ விரும்பிச்சாப்பிடும் போது

பாவக்காய்

புண்ணியக்காய் ஆகி விடுகிறது

-Courtesy தபு ஷங்கர்