காதலின் பின் கதவு....

Post date: Feb 13, 2011 9:37:49 AM

உனக்காக வைத்திருந்தமுத்தத்தில்ஃப்ளோரைட் வாசம்!உனக்காகப் பறித்த பூவில்

டீசல் தூசி!

உனக்காக வாங்கிய

வாழ்த்து அட்டையில்

மரத்தின் இரத்தம்!

எனது உலகத்திலிருந்து

ஏதுவுமில்லை உனக்கு!

காற்றை

அழுக்குபடுத்தாமல் ஓடும்

உனது குட்டிக் கார்!

வன்முறை அறியாத

இராணுவ வீரன்!

சிரிக்கக் கற்றுக்கொடுக்கும்

சீனத் தங்கை!

விபத்துகளைச் சந்திக்காத

விமானம்

ரயில்!

மதங்களற்ற

உனது பொம்மைகளின்

உலகத்திலிருந்து

முடிந்தால் கொடு

எனக்கொரு சிரிப்பை!