உன் பிம்பங்கள்...

Post date: Feb 13, 2011 9:42:31 AM

இசைத் தட்டின் ஞாபகத்தில்கடிகாரத்தில் படுத்துக் கிடக்கும்முட்கள் நாம்!பசி தீர்ந்த நகங்கள் பற்கள்அபரிமிதமாய் விட்டுச் சென்றஇறைச்சித் துண்டின் தனிமை நம் காலம் !

தழுவும் அலைகளின் லயிப்பில்

பேசத் திணறிய நம் பாறைகளின்

உன் பிம்பங்கள்

உருவாக முடியாமல்

உடைந்து நொறுங்கின!

வண்ணத்துப் பூச்சிகள்

மாமிசம் உண்ணும் கனவுகளுக்கு

நீ உன் உறக்கத்தை

விட்டுக் கொடுத்திருக்கிறாய்!

கோபுரத்தில் புறாக்களும்

பிரகாரங்களில் வௌவால்களும்

ஒரே கோயிலில்

எப்படி வாழ்கின்றன என்று

நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!