மௌன மொழி ...!

Post date: Feb 23, 2011 10:53:10 AM

தாய் ,தந்தை, தமிழாசிரியர் , சமூகம் என சொல்லித்தந்த 

தாய் மொழி ...!

தினமும் தேய்கிறது ..! -என் 

பேச்சிலும் ,எழுத்திலும் ...!

   ஒரு ஞாயிறு மாலையில் 

கூட்டம் மிகுந்த சாலையில் 

அறிமுகமானவர்கள் அருகில் இருக்க,

அழகாய் உன் கண்கள் பேசின -அந்த 

மௌன மொழி ....!

தினந்தோறும் வளர்கிறது....!  -நம் 

பேச்சிலும் ,எழுத்திலும் ....!

                                                 

                                                                                                            -ராஜப்ரியன்