முதல்... காதல் கடிதம்  ...!

Post date: Feb 25, 2011 7:57:25 AM

ஒரு நட்சத்திர இரவில்நகம் கடித்து ....,

நண்பனின் கைழெழுத்தை 

கடன் வாங்கி..., 

எனக்காக அவன் எழுதிய 

முதல் காதல் கடிதத்தை 

உன்னிடம் சேர்க்கும் முயற்சியில்

 நான் இருக்கையில் -அதுவோ  

சிக்கியது உன் அண்ணனிடம்

அந்த களவாணியை தேடும் கூட்டத்தில் 

நானும் ஒருவனானேன்

                                                  -ஆம் 

என்னையே நான் தேடிய 

முதல் தருணம் அதுதான் ....!!!

தடயங்ககளை அழித்த திருப்தியில்

நான் இருக்கையில் ...,

திடீரென வந்து சேர்ந்தது ...

உன் புகைப்படம் ...  -புரியாமல் 

நான் தவிக்கையில்....  

புன்னகையோடு சொன்னான் -நண்பன் 

"மச்சி முடிஞ்சிடுச்சி " என்று 

பிறகு தான் புரிந்தது 

அது வெறும் புகைப்படம் மட்டும் அல்ல 

எனக்காக நீ அனுப்பிய 

முதல் காதல் கடிதம் என்று ...!!!

                                                            - ராஜப்ரியன்