உதாசீனப்படுத்தும் சொல் கூட..!

Post date: Jul 11, 2011 3:23:01 AM

“ச்சீ…” என்றுஉதாசீனப்படுத்தும் சொல் கூட

நீ வெட்கத்தில்

உதிர்க்கும் போது

மேலும் மேலும் உன்னோடு

உறவாடத்தான் தோன்றுகிறதே தவிர...

உனை விட்டுப் பிரியத் தோன்றவில்லை..!

-மோகனன்