உன் காதோர....

Post date: Feb 15, 2011 12:06:01 PM

உன் காதோர முடியை என்

சுண்டு விரலால் ஒதுக்கிவிட்டு

உன் காதில் என் காதலை நான் சொல்ல

அந்நேரம்....

உன் உதட்டோரம் நீ தவழவிடும்

புன்னகையை ரசிப்பதற்காகவே

ஆயிரம் முறைகூட சொல்லலாமடி

"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று !!!!!

 

வலிக்கின்ற எனது கைகள்...

பத்து நிமிடங்கள் எழுதினால் வலிக்கின்ற எனது கைகள் பல லட்சம் தடவை உனது பெயரை எழுதினாலும் வலிப்பதில்லையே ஏன்????  

 

 

 

உறவுகள்...

 

 

உரிமை சொல்ல உறவுகள் இருந்தாலும் ... உள்ளத்தை புரிந்து கொள்ள ஒரு உயிர் போதும்... 

 

 

 

எதிர்பார்ப்பில்லாமல்...

 

எதிர்பார்ப்பில்லாமல்

வாழ

கற்றுக்கொள்கின்றேன்! ...

ஏமாற்றங்களை

சந்தித்தபின்!....

 

மரணம்...

 

" மரணம் " கூட எனக்கு மறந்து போகலாம்

மனதிற்கு பிடித்த " நீ " அருகில் இருந்தால் .... !!!

 

 

 

 

 

<<<... கண்ணீராக ... >>>

 

பிரிந்து போன உன் நினைவுகள் ஒவ்வொரு நாளும் என் கண்களுக்குள் வந்து கொண்டு தான் இருக்கின்றன ... ??? ... கனவாக அல்ல ... ??? <<<... கண்ணீராக ... >>>