எங்கோ தொலைந்த வினோதங்கள்...!!

Post date: Mar 25, 2011 3:50:11 AM

உன்னோடு களித்த இனிய கிழமைகள்! உன் நினைவில் நான் பைத்தியமானது! நாம் பகிர்ந்து கொண்ட சந்தோசங்கள் ! அதிசயமாக எழுதிய கவிதைகள்! ஆழமாக எழுதிய, எழுதாத கடிதங்கள்! தொலைபேசியில் பேசி களித்த பொழுதுகள்! முத்தங்களிலே மகிழ்ந்த கணங்கள்! தூங்காமல், தூங்கிய இரவுகள்!

சேர்ந்து வாழ நினைத்த நேரங்கள்!

பிரிந்திருந்தபோது துடித்த நிமிடங்கள்!

அடுத்து என்று உன் வருகை,

என்று ஏங்கிய நாட்கள்!

எல்லாமே எல்லாமே, இன்று என்னுள்

எங்கோ தொலைந்த வினோதங்கள்...!!