அணு அணுவாய் உன்னழகில்..!
Post date: Mar 22, 2011 4:00:11 AM
இரு புருவமும் ஒரு சேர மேலே தூக்கிக் காட்டி... என்னவென்று எனை நோக்கி உன் கண்ணாலே வினவுகிறாய்..? கன்னி உன்றன் அழகைப்பார்த்து என் கண்ணிமைகள் அசையவில்லை... அனிச்சை செயலை மறந்தபடி அணு அணுவாய் உன்னழகில் ஆழ்ந்து போகிறேனே... அதை நீ அறியாயோ பெண்ணே..?