உன்னை தேடும் மனம்..........

Post date: Jun 7, 2011 12:24:22 PM


உன்னை தேடும் மனம்..........

இரவுகளில் நிலவுகளில்

நிலைகெட்டு மனம்

உன்னைத் தேடும்...

இரவினில் கனவினில்

இதயம் ஒன்றிக் காதலில்

உன்னோடு கலக்கும்...

காலையில் கனவுகள்

கலைந்த கண்கள்

உன்னைத் தேடும்...

மாலைநேர மயக்கத்தில்

இதமான இளந்தென்றலில் மனம்

உன்னைத் தேடும்...

அந்தி சாயும் நேரம்,

ஆழியும் ஆதவனை

அணைக்கும் நேரம்,

நொந்து போகும் மனம்

உன்னைத் தேடும்...

"எங்கே நீயோ நானும் அங்கே

உன்னோடு..."