காதல்  காலங்கள்...

Post date: Feb 22, 2011 10:42:43 AM

காதல் ஒரு வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றுமில்லை 

என்பார்கள் சில புத்திசாலிகள் 

அவர்களுக்கு தெரியாது 

இருந்ததையெல்லாம் அவர்கள் 

உரித்துவிட்டார்கள் .......

உரித்ததையெல்லாம் அவர்கள் 

கையிலேயே , கண்ணெதிரிலேயே 

வைத்திருக்கிறார்கள் என்று ..!

காதல் , காதல் என்று சொல்லி 

எதிர்காலத்தை இழந்துவிடாதே 

என்று சொல்லும் 

உனக்கும் தெரியாது -ஆம் 

எதிர்காலம் மட்டும் அல்ல

                                    -என்

எல்லா காலங்களும் நீதான் என்று ..!

                                                                                                       -ராஜப்ரியன்