ஆயிரத்தில் ஒருத்தி ......!!!
Post date: Mar 2, 2011 5:31:53 PM
ஒரு அந்திமாலையில் ...அங்காடிதெருவே தன்னை
அழகாக ....!
அலங்கரித்துக் கொண்டது ..
உன் வருகைக்காக ......!
வளர்ந்து நிற்கும் ...
விடலைப்பருவ மின்கம்ப
விளக்குகள் அவ்வப்போது
கண்ணடித்தன -இது
அரசியல்வாதிகளின் பிழை அல்ல
அப்சராவையே அதிரவைக்கும் -உன்
பேரழகின் பிழை ...!!!
என் பிறந்த நாளுக்கு
முதல் நாள் ...
பரிசுப்பொருள் கடையில் நின்றிருந்தாய்
நீயும் ஒரு பரிசாய் ...!
உன்னை வாங்கும் ஆசையில்தான்
உள்ளே வந்தேன் -என்ன ஆச்சர்யம்
"ஒரு பரிசு பொருளே இன்னொரு பரிசை வாங்குகிறதே "...!
அந்த கணம் ...
உன் ஒரு நொடி ஓரக்கண் பார்வையின்
அர்த்தம் புரியவில்லை என்றாலும்
அன்றே அந்த பரிசை பெற்றுக்கொண்ட
மகிழ்ச்சியில் துள்ளியது மனம் ...!!
என் பிறந்த நாளன்று
இரண்டாவது முறை -அந்த
பரிசை வாங்க ஆவலோடு
வந்தேன் -அனால்
"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
என்று சொல்லி
உன் தோழிக்கு நீ அதை அளித்தாய் ..!
இப்போது தான் அந்த
ஒரு நொடி ஓரக்கண் பார்வையின்
அர்த்தம் புரிந்தது......!!.
மகா பெரிய புத்திசாலிதான் நீ ...!
ஒரே பொருளை இருவருக்கு
பரிசளிக்கும் ...!!!
வித்தையை அறிந்தவள் -என்பதால்
நீயும் ஆயிரத்தில் ஒருத்தி தான்........!!!