ஹைக்கூ கவிதைகள்

Post date: Mar 10, 2011 8:08:00 AM

பயம்,

மனித உயிர்களோடு பிணைத்த இரசாயன மாற்றம்!  

 

 

 

உண்மை,

உணர்வுகளுக்கு ஊசி போடும் ஓர் மருத்துவன்! 

 

 

 

 

பசி,

வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட மனைவி ! 

 

 

 

 

தலையணை...!

சுகம், துக்கம் ,இரண்டையும் பகிர்ந்து கொள்ளும் ஓர் உறவு!  

 

 

 

கண்ணாடி,

மனித மனங்களின் மறுபக்கப் பிம்பம்! 

 

 

 

 

ஓவியம்....!

வெள்ளைத் தாள்களில்

கொள்ளை வைபோகம்

தூரிகைகளின் துள்ளலில் !

 

 

 

 

கால்,

உடலைத் தூக்கிச் செல்லும் இருசக்கர வாகனம்..... 

 

 

 

 

 

கொலுசு..!!!

அடிக்கடி காட்டிக் கொடுத்துவிடுகிறது !அவளை, என் கண்களில்.....! 

 

 

 

 

 

மேகம்,

வான் வீதியில் உலவும் வெள்ளித் தேர்! 

 

 

 

 

 

மது,

மெதுவாக உயிரைக் கொல்லும் போதை,

ஓர் இன்ப மருந்து !

 

 

 

 

 

 

 

இரவு,

 

மூளையை பட்டைத் தீட்டும்

ஓர் கருப்பு வைரம்!

 

 

 

 

 

 

மெழுகுவர்த்தி!!

என் உயிர் பிரியும்வரை

உனக்கு உதவிக்கொண்டே

முடிப்பேன் என்

வாழ்க்கையை!

 

 

 

 

 

நிலவு,

 

இரவின் புன்னகையில் சிதறிய உமிழ்நீர்ச்

சொட்டு !

 

 

 

 

 

 

 

 

சூரியன்,

 

வானின் வயிறு இன்னும் எரிந்து

கொண்டிருக்கின்றது !

 

 

 

 

 

 

 

 

கல்வி,

அனைவரும் சுவாசிக்கக் கிடைக்கவேண்டிய

மூச்சுக் காற்று !

 

 

 

 

 

 

 

தென்றல் ,

வளர்ந்து வரும் நகரங்களின் நீண்ட நாள்

கனவு!

 

 

 

 

 

 

 

சாரல் ,

குடையிருந்தும் முழுவதும் நனையும்

ஓர் சர்க்கரைப்பந்தல் !

 

 

 

 

 

 

 

காற்று ,

உலக உயிர்களின் பிரணவ

மந்திரம் !