இருண்டது இதயம்!!!

Post date: Feb 16, 2011 7:31:50 AM

மிருகங்கள் வாழும் காட்டில் மின்மினியாய் வாழ்ந்தேன்.

வெண்ணிலவை மணக்க ஆசைகொண்டேன்

ஒரு வளர்பிறையில் - வளர்ந்தது

நிலவு மட்டும் அல்ல -எனது

காதலும்தான்.....

மண்ணிலிருந்து விண்ணிற்கு குடியேரும்

எனது காதல் கனவு

மண்ணிற்குள் புதைந்து போனது

ஒர் அமாவாசையில் - இருண்டது 

உலகம் மட்டும் அல்ல -எனது

இதயமும்தான்....

                                 ---ராஜபிரியன்