பூக்களில் என் வாசமும்

Post date: Mar 29, 2011 3:12:32 AM

என் நினைவுகளை உன் தோட்டத்தில் செடிகளோடு சேர்த்தே புதைத்து விடு, பூக்களில் என் வாசமும் இருக்கும்! இரவுகளில் வரும் உன் கனவுகளில் நான் உன்னோடு பேசலாம், வீசும் காற்றில் என் சுவாசமும் கலந்து இருக்கலாம்! கேட்கும் பாடலில் என் நினைவு வரலாம் இப்படி நாம் பிரிந்து இருந்தாலும் சின்ன சின்ன நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும், உன்னையும் என்னையும் இணைத்து.....!