நினைவுகள் எட்டிப்பார்க்குது

Post date: Jul 1, 2011 4:39:48 AM


வளர்பிறை வந்தமர்ந்த உன் நெற்றி வேண்டும் !

வானவில்லை வளைத்து நிற்கும் உன் புருவங்கள் வேண்டும் !

கயல்விளையாடும் உன் கண்கள் வேண்டும் !

கடித்து விளையாட உன் காது மடல் வேண்டும் !

முக்கனி பூட்டிய உன் சர்க்கரை இதழ்கள் வேண்டும்!

நான் முத்தமிடுகையில் சிவந்து விடும் உன் செழிய கன்னங்கள் வேண்டும் !

அமாவாசை இரவையும் தடுமாறவைக்கும் உன் கரிய கார்கூந்தல் வேண்டும் !

சோகத்தையும் சுகமாக்கும் செல்லவார்த்தைகள் கூறும் உன் செவ்வாய் வேண்டும் !

தலையணையாய் தலைசாய்க்க உன் பஞ்சு நெஞ்சு வேண்டும் !

என் ஐவிரலில் அடங்கிவிடும் உன் சின்ன இடை வேண்டும் !

அன்பாய் என் தலைகோதும் உன் வெண்டை விரல்கள் வேண்டும் !

நான் புகைக்கும் போது என் பிடரியில் தட்டும் உன் பிஞ்சு கைகள் வேண்டும் !

காலமெல்லாம் விழுந்து கிடக்க உன் கந்தக கால்கள் வேண்டும் !

ஆனால்

நீ என்னிடத்தில் ஆசையாய் பேசும்போது இடையிடையே வெளிப்படும் ஆங்கில வார்த்தைகள் மட்டும் வேண்டாம் என்பேன் அன்பே

அவை எனக்கு புரிவதும் இல்லை !

பிடிப்பதும் இல்லை !

செந்தமிழ் கூறும் உன் பால் வார்த்தைகள் மட்டும் எனக்கு வேண்டும்..........

அதில் தேள் விழுந்த கள்ளாய் கலக்கும் ஆங்கிலம் மட்டும் அறவே வேண்டாம்...........