பருத்திவீரன் (கிராமத்து கவிதை)...

Post date: Jul 28, 2011 4:36:53 AM

என்னவளே முத்தழகு.!.

கண் திறந்து உன்னோடு

கைகோர்த்து கண்ணாம்பூச்சி

ஆடிய நாள் முதலா

என் கனவோடு ஒழுஞ்சிகிட்டு

நெஞ்சோடு மறஞ்சுகிட்டு தினம்

என் நினைவோடு உரசிகிட்டு

நீதான் புள்ள வாழர....

என்னவளே முத்தழகு.!.

ஒத்த கல்லு மூக்குத்தியோட

ஒத்த ஜடை பின்னிக்கிட்டு

ஒத்த ரூபா பொட்டு வச்சு

நீ ஒத்தையில வர

ஓரமா நின்னு பாத்துட்டு

பின்னாடி ஓடிவந்து

முத்தம் கொடுத்தது

நினைவிருக்க முத்தழகு....

என்னவளே முத்தழகு.!.

கருவேலம் காட்டோரம்

கருவாச்சி உன்னை பாக்க

கால்கடுக்க நின்னுகிட்டு

உன் கனவோடு கதைபேசி

காத்திருந்த நேரமெல்லாம்

என் கண்ணுக்குள்ளே

நிக்கிதடி முத்தழகு.....

என்னவளே முத்தழகு.!.

என்னை குவாட்டர் அடிக்க வச்சு

குப்புற சாசுபுட்டு

என் நெஞ்சோடு உன் பெயரை

பச்சை குத்தி வச்சு என்

உடலோடு உன் பெயரை

உலவ விட்டாயே முத்தழகு....

என்னவளே முத்தழகு.!.

ஊரை பகசுகிட்டு

ஊதாரிய சுத்திகிட்டு

தண்ணிய குடுசுக்கும்

தறுதலையா திரிந்த என்னை

கண்ணாடி பாக்கவச்ச

கவிதையும் எழுதவச்ச

தனியே சிரிக்கவும் வச்சாயே முத்தழகு....

என்னவளே முத்தழகு.!.

கயிலிய மடுச்சு

கால் தெரிய கட்டிக்கிட்டு

அறிவால தூக்கிகிட்டு தினம்

போலிஸ்க்கு பின்னாடி நின்னு

போட்டோக்கு போஸ் கொடுத்து

போராச்சு சித்தப்பு

எவனாச்சையும் போட்டுட்டு

சென்ரல் ஜெயில பக்கனுமுன்னு

ஆசைப்பட்ட என்னை

உன் அன்பால கட்டிபோட்டு

நெஞ்சில் அம்புவிட

வைத்தாயே முத்தழகு.....

என்னவளே முத்தழகு.!.

ஊரையும் உதரிட்டு

உறவையும் மறந்துட்டு நீ

உயிரா நினச்ச என்னோடு

ஓடி வந்தாயே முத்தழகு....

என்னவளே முத்தழகு.!.

ஓடிவரும் வேலையிலே

ஒத்த வீட்டில் உன்னை

ஒத்தையிலே விட்டுபுட்டு

செவ்வால சித்தபாவை

கூட்டிவர நான் போக

நாலு பேரு உன்னை

நாசம் பண்ணிட்டாங்கலே முத்தழகு....

என்னவளே முத்தழகு.!.

ஊர் வந்து பாத்து

உண்மை அறியும் முன்பே

என்னை காணா பொணமாக்குனு

கடைசி மூச்சு விட்டாயே முத்தழகு....

என்னவளே முத்தழகு .!.

கருவாச்சி உன் பெயர் என்றாலும்

கண்ணகிய வாழ்ந்த

என்னை காதலுச்ச பாவத்தால

இன்று என் பாவத்தையெல்லாம்

நீ சுமந்து போனாயே முத்தழகு....

என்னவளே முத்தழகு.!.

உயிரோடு நீயிருந்த

எனக்கு உறவேதும் தேவையில்லை

பருத்திவீரனா நாயிருந்தும்

உன்னை பாதுகாக்க முடியல

உன்னை கானா பொணமாக்கி

நான் நடமாடும் பொணமாகிறேன முத்தழகு....

-பாலமுதன்