உன் பெயர்...

Post date: Feb 15, 2011 11:57:50 AM

இந்த பேனா எழுதிய

முதல் வார்த்தை - உன் பெயர்

இப்பொழுது நன்றாக பார்...

உன் பெயர் எவ்வளவு அழகாக தெரிகிறது!

அதைவிட ஒரு ஆச்சர்யம்!!

முன்பு இருந்ததை விட அழகாகிவிட்டது

உன் பெயர் எழுதிய என் பேனா !!!!

 

நான் நானகவே...

ஆயிரம் இழப்புகள்....

ஆயிரம் தோல்விகள்.....

ஆயிரம் ஆயிரம் வலிகள் இருந்தாலும்

நான் நானகவே

பிறக்க விரும்புகிறேன்

என்னவளின் அன்புக்காக !!!!!

 

காதலையே உங்களுக்கு பிடிக்கும்...

இந்த வார்த்தையை

பலபேர் வெறுக்கிறார்கள்....

என்னவள் என்மீது வைத்திருக்கும்

காதலை பாருங்கள்....

அந்த வார்த்தையை மட்டுமல்ல

காதலையே உங்களுக்கு பிடிக்கும் !!!!

இனிமையாகவே இருக்க...

என்னால் ஆண்டவனை புரிந்துகொள்ளவே முடியவில்லை.... வாழ்கையை கற்றுக்கொள்ள கஷ்டங்களை கொடுத்தாலும்....... அந்த வாழ்க்கை என்றும் இனிமையாகவே இருக்க என்னவளையும் கொடுத்திருக்கிறானே!!!!!!