காதல் என்பது என்ன சுவை...
Post date: Feb 14, 2011 12:37:01 PM
காதல் என்பது என்ன சுவை
காதல் என்பது சுவயானது என்று ஒரு நண்பன் சொன்னான் !
எனக்கு அது தெரியது தேட போனேன்
இதோ வருகின்றான் இவனிடம் கேட்போம்
காதலின் சுவை என்ன நண்பா ?
கசப்பு !
ஏன் அப்படி சொல்லுகிறாய்?
பிரிவும் துயரும் தருகிறதே !அதுதான் என்றன் ?
பாவம் அவனுக்கு காதல் தோல்வியாம்
போகட்டும் விடு அவனுக்கு அப்படி
இன்பமாய் வரும் இவனிடம் கேட்போம்
காதலின் சுவை என்ன நண்பா ?
இனிப்பு !!
ஏன் அப்படி சொல்லுகிறாய்?
காதலில் களிப்பு உண்டு ,
கவிதை உண்டு கற்பனை உண்டு ,
கனவு உண்டு அதுதான் என்றன்
மீசைமுழிக்கும் பருவம்
இவன் முதல் காதல் இதுதானாம்
இவனுக்கு காதல் இப்படி !
வானை முறைத்தபடி
வரும் இவனிடம் கேட்போம்
காதலின் சுவை என்ன நண்பா ?
காரம்!!!
ஏன் அப்படி சொல்லுகிறாய்?
கண்களை கலங்க வைக்கும,
சுவாசத்தில் தீ பிடிக்கும்
எரிச்சல் கொடுக்குமட காதல்
இவன் காதல் மறுக்கப்பட்டதாம்
அதுதான் இந்த கோபம்
தெருவில் நின்று திசை பார்க்கும் நண்பா நீ சொல்
காதலின் சுவை என்ன ?
புளிப்பு !.!.!!
என்ன புளிப்பா ?
ஆம் எட்டி எட்டி பார்த்தும்
கிட்டவில்லையென்றால்
ச்சீ சீ அது புளிப்பு தான்
சொல்லிவிட்டு சென்றுவிட்டான்
அதோ பார் வாழ்கையை வாழ்ந்து விட்ட முதுமனிதன்
அவனிடம் கேட்போம் காதலின் சுவை என்னவென்று?ஐயா சொலுங்கள் என்ன சுவை காதல் என்று ?
உவர்ப்பு !..!..!..!!
இது இல்லைஎன்றால் வாழ்வில் ஒன்றும் இல்லை
இது குறைந்து போனால் வாழ்வில் சுவை இல்லை
இது கூடிபோனால் இதுபோல் கசப்பும் இல்லை
அளவான காதல் போல் இன்பம் இல்லை
அனுபவ சுருக்கங்கள் அவர்முகத்தில் கையெழுத்தாய்
அவர் சொன்ன சொல் அத்தனையும் மெய் எழுத்தாய்
நம்பலாம் என்று நான் நினைத்த நேரம்
நேராக வந்தார் ஓர் துறவி
துணிந்தே சொன்னார் காதல் சுவை ??????..........
துவர்ப்பு என்று
எப்படி என்று நான் கேட்பதுற்குள்
செப்படி வித்தை போல் மறைந்தே போனார் ........
எதுதான் உண்மை என்று புரியவில்லை .......
எவரிடம் கேட்பது என்று தெரியவில்லை