Welcome..! Join us to Develop your Humanity
சக்தி ரமேஷ் - தனது நரிக்குறவ சமுதாயத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வியின் கதவுகளை திறந்த பன்னிரெண்டு வயது சிறுவன்.
தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர்கள் என்ற நாடோடி சமூகத்தைப் பொறுத்தவரை அவர்களின் ஒரே வாழ்வாதார முறை தெருக்களில் மணிகளை விற்பனை செய்வதாகவோ அல்லது மோசமான தருணங்களில் பிச்சை எடுப்பதாகவோ அமைகிறது. மாநிலத்தில் உள்ள பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு மத்தியில், நரிக்குறவர்கள் ஒரு கவனிப்பாரற்ற இனமாகும், அவர்கள் தொடர்ந்து பிரதான சமூகத்திலிருந்து விலக்கப்பட்டு இருக்கிறார்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை வாய்ப்புகளுக்குத் தேவையான ஏற்பாடு இல்லாமல் இருக்கிறார்கள்.
எவ்வாறாயினும், உலகத்தை தனது சமூகத்திற்கு சிறந்த இடமாக மாற்றுவதில் ஒரு சிறுவனின் விடாமுயற்சி அவருக்கு நரிக்குறவர்களின் கொடி தாங்கி என்கிற அடையாளத்தைப் பெற்றது மட்டுமல்லாமல், 2017 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான சர்வதேச அமைதி பரிசுக்கான பரிந்துரையையும் பெற்றது. தங்கள் சமூகத்தின் தலைவிதியை மாற்ற சுமார் 25 குழந்தைகளை கல்வியின் பாதையை பின்பற்றுமாறு சம்மதிக்க வைத்தது மூலம் அவர் இதை அடைந்துள்ளார்.
அந்த சமூகத்தில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலம் கல்வி கிடைப்பதில்லை என்று யாரும் முழுமையாகக் கூற முடியாது. உண்மையில், பலர் தங்கள் பெற்றோர்களால் ஊராட்சி அல்லது நகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். ஆனால் நாடோடி பரம்பரையை சேர்ந்தவர்கள் என்ற காரணித்திற்காக பள்ளியின் ஊழியர்களிடமிருந்து பலமுறை கொடுமைகள் மற்றும் மோசமாக நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வெளியேறினர்.
ஐந்து குழந்தைகளில் ஒருவரான சக்தி ரமேஷ், அவர் அனுமதிக்கப்பட்ட பல்வேறு அரசு பள்ளிகளிலும் இதேபோன்ற கொடுமைகளால் பாதிக்கப்பட்டார். அவர் இனிமேல் அவமதிப்பை ஏற்க முடியாது என்று முடிவு செய்து பள்ளியை விட்டு வெளியேறும்போது அவருக்கு எட்டு வயதுதான். சமுதாயத்தால் தோல்வியுற்ற அவர், அவருடைய சமூகம் தலைமுறை தலைமுறையாக செய்யும் தொழிலான மணிகளை விற்பதைத் தவிர வேறொரு வாழ்க்கையை அவரால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை, ஆனால் 12 வயதானவருக்கு வாழ்க்கையில் வேறு ஏதோ ஒன்று இருந்தது.
2014 ஆம் ஆண்டில், ஒரு இலாப நோக்கற்ற அமைப்பின் தலையீட்டின் வடிவத்தில் வாய்ப்பு கதவைத் தட்டியபோது, விரைவில் தனது சமூகத்தின் முன்னேற்றத்தை நோக்கி ஒரு உந்து சக்தியாக இருப்பார் என்று சக்தி அறிந்திருக்கவில்லை.
கல்வி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஒருங்கிணைந்த சமூக மேம்பாடு ஆகியவற்றின் மூலம் வறுமையை ஒழிப்பதற்காக செயல்படும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, என்கிற பிரிவின் கீழ் ஒரு பிரத்யேக திட்டத்தை கொண்டுள்ளது, அங்கு கைவிடப்பட்டவர்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு தங்கிப் பயிலும் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வியைத் தொடர உற்சாகம் தந்தது.
கைவிடப்பட்ட குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்கும் நோக்கத்துடன் நரிக்குறவர்களை அணுகிய இந்த அமைப்பு ஒரு மந்தமான வரவேற்பை சந்தித்தது. சக்தி குடும்பம் போன்ற ஒரு சில குடும்பங்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை அனுப்ப முன்வந்தன. பள்ளிப்படிப்பின் ஆரம்ப நாட்களில் அவனுக்கு உட்படுத்தப்பட்ட மோசமான நடத்தை இன்னும் சக்திக்கு வடுவாக இருந்ததால், ஆரம்பத்தில் இந்தத் திட்டத்தைப் பற்றி அவன் மிகவும் பயந்தான்.
இருப்பினும், கல்விப் பயிற்சி சக்திக்கு குறிப்பிடத்தக்க நடத்தை மாற்றத்தைக் கொண்டு வந்தது. உண்டு உறைவிடப் பள்ளியில் அவர் வெளிப்படுத்திய நேர்மறையான கற்றல் நடத்தை, திறந்த கரங்களுடன் பள்ளியைத் தழுவுவதற்கு வழி வகுத்தது, ”என்கிறார் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியாவின் உறுப்பினர் தீபா.
கல்வியுடன் மட்டுமே, தங்கள் சமூகத்தின் பாதகமான வாழ்க்கை நிலைமைகளுக்கு ஒரு முடிவு இருக்கும் என்பதை சக்தி விரைவில் உணர்ந்தார். இதனால், அவர் பொறுப்பேற்று, தனது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோருடன் சேர்ந்து பள்ளிப்படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்ல தொடங்கினார்.
“பெரியவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து , உலகத்துடன் மாறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவேண் ,மேலும் தங்கள் குழந்தைகள் வெப்பமான வெயிலில் குதிகால் வெந்து , எதிர்காலத்தில் நடைபாதைகளில் தங்கள் இரவுகளை கழிக்க விரும்ப மாட்டார்கள் என்று கூறுவேன் " என்று சக்தி கூறுகிறார்.
உறைவிடப் பள்ளியில்ல் தனது அனுபவத்தை விவரிப்பதன் மூலம் அவர் மக்களை மேலும் ஊக்குவிப்பார், அது குழந்தைகளை படிக்க அனுப்புவதற்கு பெற்றோரை தூண்டக்கூடும் , அங்கு அவர்களுக்கு புதிய உடைகள், சோப்பு மற்றும் குளிக்க தண்ணீர் மற்றும் ஒரு நாளைக்கு நான்கு வேளை உணவு போன்ற ஏற்பாடுகள் உண்டு.
“ஒவ்வொரு முறையும் நான் எனது சொந்த ஊருக்கு செல்லும்போது, என் சமூக மக்கள் என்னுள் கண்ட மாற்றங்களை விவரிக்கும்படி கேட்டுக்கொள்வேன், மேலும் சிலர்,‘ நீங்கள் சுத்தமாகவும், நல்ல முறையில் உடையணிந்தவராகவும் இருக்கிறீர்கள் ’என்று பதிலளிப்பார்கள், அவர் தனது நண்பர்கள் பலரை மீண்டும் படிப்பைத் தொடங்க முயன்றாலும், சக்தி பெரும்பாலும் கருத்து வேறுபாட்டைக் காண்பார்.
"நான் அவர்களை பயிற்சி கூடத்தில் சேர்ந்து படிக்க கட்டாயப்படுத்தும் அளவிற்கு கூட சென்றிருந்தேன். அதற்கு பதிலாக, அவர்கள் என்னிடம் தன்னை திரும்பி வந்து மீண்டும் வீதிகளில் அலங்காரப் பொருட்களை விற்பனை செய்வதைத் தொடங்க சொல்வார்கள் , ஏனென்றால் படிப்புகளும் பள்ளியும் பயனில்லை என்றும்,வாழ்க்கையை வாழ்வதற்கு தந்திரமும் வர்த்தகமும் மட்டுமே தேவை என்றும் அவர்கள் நம்பினர், ”என்று அவர் சோகமாகக் கூறுகிறார்.
இருப்பினும், அவரது விடாமுயற்சி முற்றிலும் வீணாகவில்லை. சக்தியின் வெளிப்படையான பார்வை மற்றும் நடத்தை ஆகியவற்றில் காணக்கூடிய மாற்றத்தால் தூண்டப்பட்ட பல பெற்றோர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொள்ளத் தொடங்கினர், மேலும் தங்கள் குழந்தைகளுக்கும் அதே நன்மைகள் மற்றும் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்று விரும்பினர். இன்று நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 25 மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பக்கத்தைத் திருப்புகிறார்கள், சக்தியின் திடமான உறுதியால் இது சாத்தியமானது. அவரது சாதனையின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, குடும்பங்களை சமாதானப்படுத்தும் போது தன்னார்வலர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஹேண்ட் இன் ஹேண்ட் அமைப்பு ஒரு படி மேலேசென்று , சர்வதேச விருதுக்கு அவரது பெயரை பரிந்துரைத்தது.
அத்தகைய மதிப்புமிக்க விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், பரிந்துரைக்கப்பட்ட 169 பேர்களில் இளையவரான சக்தி, அவரது முயற்சிகளுக்கு எந்த ஒரு அங்கீகாரத்தையும் எதிர்பாக்கவில்லை , மேலும் அவரது இதயத்தின் நல்லெண்ணத்தால் மட்டுமே தூண்டப்பட்டு இதை செய்கிறார் . அவரைப் பொறுத்தவரை, அவரது முழு சமூகத்தையும் ஒரு நல்ல வாழ்க்கையை நோக்கி உயர்த்துவதே அவருடைய குறிக்கோள்.
இதை அடைந்த பின்னர், சக்தி எந்த நேரத்திலும் தனது பணியை விட விரும்பவில்லை. ஒவ்வொரு நரிக்குறவர் குழந்தைக்கும் எந்த தடையும் இல்லாமல் கல்வி கிடைக்கக்கூடிய நாளுக்காக அவர் ஆசைப்படுகிறார்.
“இந்த குழந்தைகளை என்னால் சம்மதிக்க வைத்த முடிந்த விதத்தில், அவர்கள் ஒவ்வொருவரும் உறவினர்களையும் நண்பர்களையும் தங்கள் சொந்த ஊர்களில் சம்மதிக்க வைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். நேரம் எடுப்பதால் அது சாத்தியமற்றது என்று அர்த்தமல்ல. எங்கள் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் முதலில் யாருமே படிக்க வராத நிலையில் இருந்து என்று 25 குழந்தைகள் வரை வருகிறார்கள் நாளை 50 ஆகவும் மாறக்கூடும் ”என்று முன்மாதிரியாக விளங்கும் இளைஞர் சக்தி நம்புகிறார்.
தற்போது 17 வயதாக இருக்கும் சக்தி, அவர் வளர்ந்து தனது குடும்பத்திற்காக கடினமாக உழைக்கும்போது ஒரு மென்பொருள் பொறியாளராக மாற வேண்டும் என்று விரும்புகிறார். “அவர்கள் வாழ்வாதாரத்திற்காக இனி கஷ்டப்படுவதை நான் பார்க்க விரும்பவில்லை. நான் வளரும்போது, என் பெற்றோருக்கு வழங்கக்கூடிய அளவுக்கு நான் வெற்றிகரமாக இருக்க விரும்புகிறேன், ”என்று அவர் ஆர்வத்துடன் கூறுகிறார்.
சமூக மற்றம் ஏற்படுத்துவதற்கு வயது ஒரு பொருட்டு இல்லை என்பதற்கு சான்றாக சக்தி ரமேஷ் திகழ்கிறார்.