Welcome..! Join us to Develop your Humanity
நாகபூஷணா - ஒரு கிராமத்தை மது மற்றும் புகையிலை இல்லாத மண்டலமாக மாற்றியவர் - முப்பது வருடங்களாக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு.
நல்ல வேலை வாய்ப்பு மற்றும் கல்வியை தந்து ஒரு கிராமத்தை மது இல்லாத மற்றும் புகையிலை இல்லாத கிராமமாக்கியது மட்டுமல்லாமல் அங்கு உள்ள பெண்குழந்தைகளின் திருமண வயதையும் உயர்த்தி அதன் தலை எழுத்தையே மாற்றியவரை சந்திக்க இருக்கிறோம். இன்னும் என்ன! இவை அனைத்தையும் அவர் எப்படி சாத்தியமாக்கினார் என்பதை அறிந்தால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள்.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி காடுகளின் மடிப்புகளின் உள்ளேயும், கர்நாடக மாநில எல்லையில் மறக்கப்பட்ட இடத்தில் இந்த பழங்குடி கிராமம் நூறுண்டுமலை இருக்கிறது.ஒப்பீட்டளவில் அனாமத்தாக இருந்தபோதிலும், நூறுண்டுமலைக்கு சில தனி சிறப்பு உண்டு.2002 இல் இருந்து இந்த கிராமம் மதுவற்ற புகையிலை அற்ற கிராமமாக உள்ளது. உண்மையாவே இங்கு புகையிலை அல்லது மது விற்கும் ஒருவர் கூட இல்லை. சொல்லப்போனால் அங்கு உள்ள உள்ளூர் புகை இலை கடை சொந்தக்காரர் சிவண்ணா புகையிலை பிடிப்பதை நிறுத்திவிட்டு தன் கடையை மூடி பதினான்கு வருடம் ஆகிறது! தனது கிராமத்தில் புகை இலை வாங்குபவர்கள் யாரும் இல்லை என்றும் நல்லது நடப்பதை இங்கு தடுக்கமுடியவில்லை என்றும் நாகபூஷணா கூறினார் .
இருபதாண்டுகளுக்கு முன்பு,நூறுண்டுமலையில் ஒரு பழங்குடி குடும்பத்தில் பிறந்த 23 வயதாகிய நாகபூஷணா சமூக சேவையில் முதுகலை படிப்பு முடித்து தன் கிராமத்திற்கு திரும்பினார்.இந்தியா நெடுகிலும் தான் செய்த பயணத்தின் மூலம் கிடைத்த அனுபவத்தால் உறுதியாக்கப்பட்ட மனதோடு தன் கிராமத்திற்கு திரும்பினார்.இந்தியாவின் சில மிகவும் பிற்படுட்டபட்ட கிராமங்களில் மக்களின் போராட்டங்களை அவர் பார்க்க நேர்ந்தது. தனது கிராமத்திலே தனது போராட்டத்தை துவங்க அவர் திரும்பி வந்தார்.
நூறுண்டுமலையில் லட்சக்கணக்கான விஷயங்களை நாகபூஷணா மாற்ற நினைத்தார்.அந்த கிராமத்தை பிடித்த ஒரு பெரிய பிரச்சனை எதுவென்றால் குடிப்பழக்கம்.எல்லா வயது ஆண்களும் அதன் பிடியில் இருந்தனர். அது அவர்கள் உடல்நலத்தை பாதிப்பது மட்டுமன்றி குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து வெளி வரமுடியாமல் தடுத்தது.தனது கிராமத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கான முதல் படியாக இந்த குடிப்பழக்கத்தை முதலில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தார்.இதை முதலில் அவர் நண்பர்களிடம் கூறியபோது இது சாத்தியமற்றது என்றும் இப்படி நீ எண்ணியதே பைத்தியக்காரத்தனமானது என்று கூறினர்.தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு எதிராக போராட முயற்சிப்பது கூட ஆபத்தானது மற்றும் பிரச்னைக்குரியது.
நாகபூஷணா வெறும் 1600 ரூபாய் சம்பளத்தில் வேலையில் இருக்கும் ஒரு 23 வயதானவர். நாகபூஷணாவிற்கு இது மிகவும் ஆபத்தான வேலை என்று அவர் நண்பர்கள் எண்ணினர். ஆனால் இதை பற்றி அவர் தாயிடம் கூறியபோது,அவர் இவரது முடிவை ஆதரித்தார்.அவர் இந்த வேலையை செய்ய ஊக்கம் தந்து தைரியம் ஊட்டிய ஒரே நபர் அவர் தாயே ஆவார்.நாகபூஷணா இந்த பிரச்னையை நுட்பமான முறையில் அணுகினார்.கிராமத்தில் உள்ளவர்களிடம் சாதாரணமாக பேசும்போது குடிப்பழக்கத்தை விடுவது பற்றி பேசுவார் மேலும் அவர்கள் உடல்நல பிரச்சனைகள் சரி ஆக மதுவை விடுவதே தீர்வு என்று அறிவுறுத்துவார்.
அங்கு உள்ள உள்ளூர் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லி தர ஆரம்பித்தார் விரைவில் அந்த குழந்தைகளின் கதாநாயகி ஆனார்.அவரது கிராமத்தின் சமூக மற்றும் முன்னேற்றம் சம்மந்தமான விஷயத்தில் அவர் காட்டிய ஈடுபாடு அவருக்கு கிராமத்தில் பாராட்டையும் ஏற்புத்தன்மையையும் கொடுத்தது.மெதுவாக ஆனால் திடமாக கொடிய பழக்கமான குடிப்பழக்கத்தை ஒழிப்பது தொடர்பான தனது பிரச்சாரத்தை வலுபடுத்தினார். சிலவருடங்களில் புகையிலை மற்றும் மது பழக்கம் இல்லாத கிராமத்து இளைஞர்கள் என்ற அமைப்பை தொடங்கி அந்த கிராமத்து இளைஞர்கள் அவர் பக்கம் வந்தனர்.இவர்கள் குடிப்பழக்கம் இல்லாதவர்களை ஒன்று சேர்த்து மற்றவர்களை மதுப்பழக்கம் மற்றும் புகையிலை பழக்கத்தை கடந்து செல்ல ஊக்குவித்தனர். சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இவர்கள் கிராமத்தில் ஒரு சக அழுத்தம் தரும் குழுவாக வேலை செய்து மது பழக்கம் இல்லாததை இயல்பானதாக மாற்றினார்.
நாகபூஷணா நூறுண்டுமலையை முழு மது விலக்குக்கு தயார் செய்துகொண்டு இருக்கும்போது அங்கு ஒரு பிரிவு உள்ளூரில் மது தயார் செய்யும் தொழிலை இழந்து வந்தது. அவர்கள் நாகபூஷணத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தோடு அவரது முயற்சியை நிறைய வகையில் தடுக்க முயற்சித்தனர்.இந்த தடைகளுக்கு அஞ்சாமல் நின்று 2002 இல் அவரது கிராமம் மது மற்றும் புகையிலை இல்லாத கிராமமாக அறிவிக்க வழிநடத்தினார். இந்த அசாதரணமான செயலை செய்ய கிராமத்தின் ஆதரவு மற்றுமல்லாமல் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவையும் பெற்றுஇருந்தார்.கிரிஷ்ணகிரியின் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் பாபு மதுவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் கிராம முன்னேற்றத்திற்கு, பள்ளிகள்,சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றிற்கு தாராளமாக நிதி அளிப்பது மூலம் உதவினார்.
தற்போது ஒரு பெரிய சவால் என்னவென்றால் எப்படி இந்த மாற்றத்தை தக்கவைப்பது.இலக்கை அடைந்ததால் மிதப்பு ஏற்படலாம் ஆனால் கெட்ட பழக்கங்கள் மீண்டும் வர நிறைய நேரம் எடுக்காது.ஆகவே இந்த உத்வேகம் தொடர்ந்து இருக்க வேண்டும். நாகபூஷணா போதை பழக்கம் நீக்கம் மற்றும் மறுவாழ்வு மையத்தை நூறுண்டுமலையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி உள்ள உரிகம் என்னும் இடத்தில தொடங்கினார்.அந்த மையம் நம்மனம் என்று பெயரிடப்பட்டு நூறுண்டுமலையை சுற்றி உள்ள கிராம மக்களுக்கு உதவியது.நம்மனம் படிப்படியாக அந்த கிராமங்களின் மாற்றத்திற்கான மையமாக மாறியது.
தன்னை தக்க வைத்துக்கொள்ள நம்மனம் தொழிலில் இறங்கியது, இறங்கி உள்ளூரில் கிடைக்கும் பொருட்களான புளி மற்றும் கற்றாழை மற்றும் மூலிகை பொருட்களை பயன்படுத்தி வணிக தயாரிப்புகளை செய்தது.மறுவாழ்வுக்காக வந்தவர்களுக்கு தொழிற்சாலையில் வேலை கொடுக்கப் பட்டது. அவர்ககள் நேரத்தை பயனுள்ள முறையில் செலவு செய்ததால் விரைவில் எளிதாக குணமடைந்தனர். கடந்த பத்து வருடத்தில் 10000 த்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நம்மனம் மூலம் வாழ்வில் புதிய பாதையை பெற்றுள்ளனர்.சுய முன்னேற்றம், வேலை மற்றும் சுகாதாரம் என அனைத்திற்கு காவேரி ஆற்றின் பக்கத்தில் இருக்கும் இந்த அழகிய வளாகத்தில் இடமுண்டு .பெங்களூரில் உள்ள நிறைய கல்லூரி மாணவர்கள் இங்கு கிடைக்கும் உருமாற்றம் அளிக்கும் அனுபவத்திற்காக வந்து முகாமிடுகின்றனர் .இங்கு வரும் குழந்தைகள் நாங்கள் வாழ்நாள் முழுவதும் புகையிலை மற்றும் மது பழக்கத்திற்கு இரையாக மாட்டோம் என்ற உறுதிமொழியை எடுப்பதை நாகபூஷணம் தவறாமல் உறுதி செய்கிறார்.
குடிப்பழக்கத்துக்கு எதிராக போராடுவது, வேலைவாய்ப்பை உருவாக்குவது,பெண்களுக்கு அதிகாரமளிப்பது போன்று ஒவ்வொன்றாக நாகபூஷணம் நூறுண்டுமலையில் மலைகளை நகர்த்திவருகிறார். தற்போது நூறுண்டுமலையில் நல்ல பள்ளி உள்ளது,இது முன்பு பாழடைந்து கிடந்தது.அங்கு உள்ள சிறுமிகளுக்கு முன்பெல்லாம் 12 வயதிலே திருமணம் செய்துவிடுவார்கள் ஆனால் தற்போது அவர்கள் தற்போது தங்கள் கல்விக்காகவும் அவர்களுக்காகவும் எழுந்துநிற்கிறார்கள். ஆண்டுகள் போக போக திருமண வயது 17 வரை உயர்ந்துள்ளது ஆனால் இன்னும் நிறைய தூரம் செல்வேண்டி இருக்கிறது.இதை மாற்ற நாகபூஷணா கடுமையாக உழைத்து வருகிறார் .சுகாதார நாப்கின்கள் செய்ய நூறுண்டுமலையில் ஒரு தொழிற்சாலையை அங்குள்ள பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் அங்குள்ள பெண்களாலே உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்துள்ளார், அவர்கள் 100% பருத்தி நாப்கின்களை உற்பத்தி செய்து பெண்களுக்கான சுகாதார புரட்சியை தாங்களே முன்னெடுத்து உள்ளனர்.
தற்போது உங்களுக்கு ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நாகபூஷணா இந்த மாற்றங்கள் அனைத்தையும் தனது கிராமத்தில் கடந்த இருபது வருட கடுமையான உழைப்பால் பெங்களூரில் முழுநேர வேலை ஒன்றில் இருந்து கொண்டே செய்துள்ளார்.நம்மனம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வேலையில் இருந்து வந்தார். நிறைய நேரம் அவரால் அவரது குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்தமுடியாமல் போனது இருந்தும் நாகபூஷணமோ அல்லது அவரது குடும்பமோ அவர்கள் முன்னெடுத்த பணியை கைவிடவில்லை . அவர் தற்போது ராபர்ட் பாஷ், பெங்களூர் நிறுவனத்தில் மனித வளத்துறை, துணை பொது மேலாளராக உள்ளார் கண்டிப்பாக இது ஒரு எளிதான பெருநிறுவன வேலை இல்லை.
நாகபூஷணா-சமூக சேவை செய்வதற்கு முழு நேர வேலை மற்றும் வேலையை செய்யும் இடம் ஒரு பிரச்சனை இல்லை என்பதே நமக்கு தனது சாதனையின் மூலம் எடுத்து சொல்லுகிறார்.
நாகபூஷணா போன்று கிராமத்துப் பெண்கள் தங்கள் கிராமங்களில் இத்தகைய சமூக மேம்பாட்டுப் பணிகளை ஈடுபாட்டுடன் செய்ய முன்வந்தால் நமது கிராமங்கள் விரைவில் தன்னிறைவு பெற்றுவிடும்.