Welcome..! Join us to Develop your Humanity
கொலை மிரட்டல்களையும் மீறி 14 வருடமாக தீண்டாமையை எதிர்த்து போராடிய - சஞ்சீவ் குமார்
பல்வேறு துறைகளில் நமது நாடு பெரும் வளர்ச்சியை கண்டிருந்தாலும் எல்லா மக்களும் சமமாக நடத்தப்படவில்லை என்கிற உண்மையை மறுக்க முடியாது. நமது அரசியல் சாசனம் கொடுத்துள்ள அடிப்படை உரிமைகள் கூட சிலநேரம் பட்டியலின சமூகத்தினருக்கு மறுக்கப்பட்டு தான் வருகிறது. சாதி வேறுபாடுகளின் கொடூரத் தன்மையை நாம் எதிர் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து போராடியவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்.
தீண்டத்தகாதவர்களின் முன்னேற்றத்திற்காக பீகாரில் உள்ள தனது கிராமத்திலும் அருகில் இருக்கும் இடங்களிலும் தனது நகர வாழ்வையும் உடல் நோகா வசதியான வேலையும் உதறிவிட்டு 14 ஆண்டுகளாக போராடி வரும் மிகச்சிறந்த மனிதர் சஞ்சீவ் குமார்.
ககாரியா (Khagaria) மாவட்டத்தில் உள்ள பர்பட்டா (Parbatta) கிராமத்தில் பிறந்த சஞ்சீவ் எம்பிஏ பட்டம் பெற்று விளம்பர மாடலிங் ஐ தன் தொழிலாக கொண்டு பெரும்பாலும் வாழ்ந்தது டெல்லியில்தான்.
ஆனால் தனது சொந்த ஊருக்கு சென்ற அவரது பயணம் அவரது வாழ்க்கையே மாற்றியது. “தீண்டாமை இங்கே உள்ளது என்று எனக்குத் தெரிந்தாலும் அதை நேரில் பார்க்கும்போது மிகவும் அதிர்ந்து போனேன். ஒரு கிராமத்தின் உணவிற்காக லட்சமே செலவு செய்தாலும், அவர்கள் தூக்கி எறியப்பட்ட உணவையே உண்கிறார்கள் என்பதை நம்மால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என என் மைத்துனரிடம் கேட்டதற்கு அவர் என்னை கண்டித்து எனது வேலையை பார்க்கும்படி கூறிவிட்டார் என்பதனை நினைவு கூர்கிறார் சஞ்சீவ் .
ஆனால் சஞ்சீவ் தான் நேரில் பார்த்ததை மறக்க முடியவில்லை என்கிறார். அடுத்த நாள் அவர்களை தேடி போய் பார்த்ததில் அவர்கள் மூங்கில் கூடைகள் விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள அவர்களிடம் பேசியதில், அவர்களுக்கு பிணத்தை தூக்குவதற்கு மட்டுமே அங்கு அனுமதி இருந்தது என்ற அவலம் தெரிய வந்தது. அடிப்படை வசதிகளை விடுங்கள், கங்கை ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. எந்த ஒரு பாவமும் செய்யாத இந்த தனிப்பட்ட மக்களுக்கு தான் வாழும் பூமி இப்படி ஒரு அநீதியை இழைத்து கொண்டிருக்கிறது என்பதை சஞ்சீவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒருநாள் தனது வேலையை விட்டுவிட்டு தனது சொந்த ஊரில் உள்ள டாம்(Dom) மற்றும் பிற ஒதுக்கப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக வேலை செய்யப்போகிறேன் என்று தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் பீகாரில் சாதி ஒடுக்குமுறை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்றும் நாம் எது செய்தாலும் அது அரசியலாக்கப்படும் மற்றும் உயிருக்கே கூட ஆபத்தாக முடியும் என்றும் கூறினார்கள். ஏமாற்றமடைந்த நான் ஆறு மாதங்களுக்கு அவர்களிடம் பேசவே இல்லை. ஒருவழியாக அவர்கள் ஒப்புக் கொண்டபின், டாம் சமூகத்தினர் முன்னேற்றமடைந்து அவர்கள் மரியாதையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளுடன் அங்கிருந்து நான் ககாகாரியா (Khagariya) புறப்பட்டேன்.
2006ம் ஆண்டு தனது அக்காவின் புகுந்த வீட்டிற்கு சென்ற சஞ்சீவ், கிராமத்தை சுற்றிப் பார்க்கவும் அங்குள்ள மக்களே தெரிந்து கொள்ளவே வந்துள்ளேன் என்று கூறினாலும் என்னுடைய முக்கிய குறிக்கோள் டாம் மக்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது ஆகவே இருந்தது தினமும் அங்கு சென்று அவர்களிடம் பேசினேன். ஒரு மேல் சாதிக்காரன் தங்களிடம் இப்படி பழகுவதை கண்டு அவர்கள் அதிசயித்துப் போனார்கள் என்கிறார் சஞ்சீவ்
சஞ்சீவின் விடாமுயற்சி கண்டுகொள்ளாமல் விடப்படவில்லை. ஆம் இவரி செயலை கண்டு ஆச்சரியப்பட்ட தொகுதி மேம்பாட்டு அதிகாரி சஞ்சீவ் இடம் பேசினார்.
நான் அந்த மக்களை ஜாதி வேறுபாடிலிருந்து விடுவிக்க வேண்டும் எனில் அங்குள்ள குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும், அதுவே அவர்களை சாதி வேறுபாட்டில் இருந்து பாதுகாக்கும் என்று கூறினேன். அந்த அதிகாரி 2 அறைகளை கொடுத்து உதவினார். சஞ்சீவ், 25 குழந்தைகளை குளிக்க வைக்கவும் கல்வி கற்பிக்கவும் அந்த இடத்தை பயன்படுத்தினார்.
கிராமத்தின் ஒதுக்குப் புறங்களிலும் அரசாங்கத்தின் இல்லத்திலும் சட்டவிரோதமாக வாழ்ந்து வந்த பல டாம் மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக சஞ்சீவிக்கு அந்த அதிகாரி உதவினார்.
" அதே சமயம், நான் ஒரு நக்சலைட், சிபிஐ அதிகாரி, - ஏன் ஒரு தேடப்படும் கொலைகாரன் என்று கூட வதந்திகள் கிராமத்தில் பரவ ஆரம்பித்தன. எனது அக்கா வீட்டிற்கு இது தெரிந்தவுடன் அவர்கள் மிகுந்த கோபத்துடன் இந்த வேலையை விட்டு விடுமாறு அல்லது வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார்கள். எனது வேலையை விட சிறிதுகூட எண்ணம் இல்லாத நான் அங்கிருந்து சென்று பக்கத்து கிராமத்தில் உள்ள எனது மாமா வீட்டில் தஞ்சம் புகுந்தேன்" என்கிறார்.
அவமதிப்புகள், சமூகத்தில் புறக்கணிப்பு, அரசியல் நெருக்கடி கொலை மிரட்டல் என அடுத்த வருடம் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் அவரது வேலைகளில் துணிவாக இருந்த அவர் மெதுவாக டாம் மக்களிடையே மட்டுமல்லாமல் சமர்(Chamar) மற்றும் முசாஹர் (Musahar) என்று பிற தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்களிடமும் மெதுவாக ஆதரவைப் பெற அரம்பித்தார்.
2007இல் இதுபோன்ற சமூகத்தினரை ஒன்றிணைத்து Bahishkrit Hitkari Sangathan (BHS) எனப் பெயரிட்ட ஓர் அமைப்பை உருவாக்கினார். 40 கிராமங்களுக்கு இடையே 16 கிலோ மீட்டராவது நடந்து அவர்களிடம் பேசி அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து, அவர்களை முன்னேற்றுவது - அவரது தினசரி வழக்கமாக இருந்தது.
அதன் மூலம் அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உறுப்பினர் பதவி மறுக்கப்பட்டிருந்த பஞ்சாயத்துக்களில் கூட அடிப்படை உரிமைகளுக்கு வசதி செய்தார்.
அவர்களே அவர்களுக்கு தலைவரையும் அலுவலர்களையும் தேர்ந்தெடுத்து, அவர்களது பிரச்சனைகளை தீர்க்க கூட்டங்களை கூட்டவும் செய்தார்கள். பிணங்களை எரிப்பது, கழிவறையை சுத்தம் செய்வது, குப்பைகளை பொறுக்குவது என ஒரு கீழ் மட்டமான வட்டத்திற்குள்ளேயே அவர்கள் அடைக்கப்பட்டு இருந்தார்கள். அதிலிருந்து அவர்களை விடுவிப்பதே எனது முழு நோக்கம். தூக்கி எறியப்பட்ட உணவை சார்ந்து இருக்காமல் நல்ல வேலைகளை செய்து முன்னேறவும் அவர்களுக்கு உரிமை இருந்தது. இதற்கு ஒரு முடிவு கட்டவே நாங்கள் விரும்பினோம்.
அவரது இந்த சேவை மாநிலம் முழுவதும் பரவ தொடங்கியது. பெரும் பதவியில் இருப்பவர்கள் கூட இவருக்கு உதவ முன் வந்தார்கள். இருந்தாலும் சஞ்சீவ் உடைய பிரச்சனை முடியவில்லை. இப்போது அவர் நக்சல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
இந்த கிராமங்கள் பெரும்பாலும் நக்சல்கள் பாதிக்கப்பட்டவர்கள். அங்கிருந்த போராளிகள் நான் ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாக வேலை செய்யும் விதத்தை விரும்பவில்லை. மக்களிடையே அவர்களின் ஆதரவு குறையத் தொடங்கியது. ரத்தம் சிந்துவதை அவர்கள் விரும்பவில்லை. சில நேரங்களில் நேரடியாகவே எனக்கு மிரட்டல்கள் வந்தன. ஆனாலும் நான் அசையவில்லை. 2010 ஆம் ஆண்டு என்னை ஒரு நாள் கடத்தி இரவு முழுவதும் சித்திரவதை செய்தனர். அங்கிருந்த மக்கள் இதை கேள்விப்பட்டு வந்து அங்கே இருந்த போராளிகளிடம் சஞ்சீவிற்கு ஏதாவது நடந்தால் விளைவுகள் மிகக் கொடுமையாக இருக்கும் என்று கூறினர். அவர்களின் அன்பும் ஆதரவுமே என்னை காப்பாற்றியது" என்று அவர் நினைவு கூறுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக வெறும் 300 ரூபாய் வாடகை வீட்டில் அவர் வசித்து வருகிறார். சஞ்சீவின் பெற்றோர்கள் இவ்வாறு சமுதாய முன்னேற்றத்திற்கு பாடு படுவதையும் ஒரு நிரந்தர வருமானம் உள்ள வேலை இல்லாததை கண்டு சிறிதளவு பணம் கொடுத்து உதவி வருகிறார்கள்.
"நான் இந்த மக்களை கவனித்துக் கொள்கிறேன் அவர்கள் என்னை பார்த்துக் கொள்வார்கள். எனக்கு சமைக்கத் தெரியாது அதனால் அவர்கள் உணவு கொடுத்து விடுவார்கள். அதை வைத்து நான் மூன்று நாட்கள் வரை சாப்பிட்டதும் உண்டு" என்று சஞ்சீவ் கூறுகிறார்.
நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் பாடு பட்டதால் அவரது சொந்த வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டது. சஞ்சீவ் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டார் என்ற உண்மை தெரிந்தவுடன் இரண்டு ஆண்டுகள் அவருடன் வாழ்ந்த மனைவி 2010ஆம் ஆண்டு அவரிடமிருந்து பிரிந்து சென்றார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார். ஆனால் சஞ்சீவ் அவரது மகனை இதுவரை வரை சந்திக்க முடியவில்லை.
"எனது மகன் எங்காவது ஒரு இடத்தில் நன்றாக இருக்கிறான் என்று எனக்கு தெரியும் . நான் எடுத்த முடிவுகளுக்காக நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. துயரத்தை பொறுத்து கொண்டு எனது விதியுடன் வாழத் தொடங்கினேன்" என்கிறார் சஞ்சய்.
தன் மகனுடன் இருக்க முடியாவிட்டாலும் அவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு தந்தையாகவே திகழ்ந்தார். கடந்த 10 ஆண்டுகளாக அந்த குழந்தைகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்வதற்கு உதவினார். அதில் பலர் இன்று இன்ஜினியர் ஆகவும் இருக்கிறார்கள்.
சஞ்சீவ் பெருமிதத்துடன் "இவர்கள் ஒரு காலத்தில் முட்டை விற்றுக்கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள் இருக்கும் நிலையை பார்க்கும் போது எனக்கு கோடிக்கணக்கில் சம்பாதித்தது போன்று உள்ளது" என்கிறார்.
தற்போது சஞ்சீவ் முசாஹர்ஸ் (Musahars) என்ற சமூகத்தினரை முன்னேற்றுவதற்காக அவர்களுடன் இணைந்து, 150 கிராமங்களுக்காக வேலை செய்து வருகிறார். அரசியல் தரப்பில் இருந்தும் நக்சல் வாதிகளிடம் இருந்தும் உள்ள அச்சுறுத்தல் இருந்தபோதிலும் சஞ்சீவ் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.
உறுதியான நெஞ்சம் கொண்டு வருடக்கணக்கில் கொலை மிரட்டல்கள் சித்திரவதைகளுக்கும் இடையே பணிபுரிந்த இவர் பீகாரில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு ஒரு நிஜ ஹீரோவாகவே திகழ்கிறார். இவருக்கு பெரும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை