Welcome..! Join us to Develop your Humanity
மீனவச் சிறார்கள் புத்தகம் படிப்பதையும், சேகரிப்பதையும் வளர்த்து விடும் தன்னார்வலர் -மீனவராய் இருந்து புத்தகக் கடை உரினமயாளராக மாறியுள்ள - அப்போலோ குமரேசன்.
யுனெஸ்கோவின் (UNESCO) அங்கிகாரம் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று மகாபலிபுரம். சென்னையில் இருந்து 60km தூரத்தில் உள்ள மகாபலிபுரத்திற்கு உலகம் முழுவதும் இருந்து ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம. அங்கு உள்ள மீனவக் குடியிருப்பில் மீனவ சமுதாய மக்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள்
மீனவர் குடியிருப்பிற்கு அருகமையில் அமந்துள்ள ஒத்தவாடை தெரு எப்போதும் கூச்சலும் பல வேடிக்கைகளும் நிறைந்த இடமாகும். இங்குள்ள மலிவு விலை தங்கும் விடுதிகள், நவநாகரீக துணிக்கடைகள், நல்ல பில்டர் காப்பி கிடைக்கும் சிறு உணவகங்களுக்கு மத்தியில் அப்போலோ குமரசேன் நடத்தும் அப்போலோ புத்தகக்கடை அமைந்துள்ளது. மீனவராய் இருந்து புத்தகக் கடை உரிமையாளராக மாறியுள்ள அப்போலோ குமரேசன் புத்தகங்களை மிகவும் விரும்புபவர் ஆவார். அவருடைய புத்தகக் கடை அங்குள்ள மீனவச் சிறார்களுக்கு அள்ள அள்ளக் குறையாத உண்மையிலேயே ஒரு பொக்கிஷச் சுரங்கம்தான்.
மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகத் தொகுப்புக்களும் , குழதைகளுக்கான புத்தக திருவிழாவும், மீனவக் குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை வளர்க்கும் வழிமுறைகளாக அப்போலோ குமரேசன் கையாண்டார்.
ஒரு மீவைக் குடும்பத்தில் பிறந்து மீன்பிடித் தொழிலின் நுணுக்களையெல்லாம் கற்றுத் தேர்ந்த போதிலும், குமரேசன் சிறுவயதிலேயே புத்தகங்களை சேகரிக்க துவங்கினார். அவரது சகோதரர்கள் குடும்பத் தொழிலை கவனித்துக் கொள்ள, குமரேசன் 2007-ல் தனது பெயரோடு அப்போலோ என்ற பெயர் வரக்காரணமான புத்தகக்கடை ஒன்றை துவங்கினார்.
குமரேசனின் புத்தகம் படிக்கும் ஆர்வம், அவரை அவரது சமுகம் மற்றும் குடும்பத்திடம் இருந்து பிரிக்கவில்லை. மாறாக, அவரது புத்தக கடையும் அதன் நிகழ்வுகளும் மீனவ சமுதாயத்திடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்ட உதவியது.
துவக்கத்தில் இருந்தே, இந்த புத்தகக்கடை உள்ளூர் மக்களுக்கும் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க புத்தக மையமாக விளங்கி வந்துள்ளது. .சுயமுன்னேற்றம் மற்றும் செய்முறைப் புத்தகங்களில் இருந்து புனைவுக் கதைகள், புராணங்கள், உலக நடப்புகள் மற்றும் பலவகையான புத்தகங்கள் இக்கடையின் அலமாரிகளை அலங்கரிக்கின்றன. . இங்கு டாம் சாயர், புகழ் பெற்ற ஐவர் போன்ற ஆங்கில இலக்கியங்களும் கிடைக்கும், அதே நேரத்தில் சீதா, சன் சூ போன்ற உள்ளுர் விஷயங்களும் கிடைக்கும். மற்றும் உலகின் சிறந்த புத்தகங்களின் மொழிபெயர்ப்பு வடிவங்களும் இக்கடையில் கிடைக்கும்.
இக்கடையில் புத்தகங்கள் விற்பனைக்கும் மற்றும் வாடகைக்கும் கிடைக்கிறது - மேலும் இங்கே புத்தகங்களை நீங்கள் மாற்றி கொள்ளலாம். ஆங்கிலம், டச்சு, ஜெர்மன் மற்றும் ஹீப்ரு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் புத்தகங்கள் கிடைக்கிறது. கிடைக்காத புத்தகங்களை குமரேசன் முயற்சி செய்து தருவித்துக் கொடுக்கிறார்.
அப்பகுதி மக்களும், குறிப்பாக குழந்தைகளும் வாசிப்பில் ஆர்வம் கொண்டிட குமரேசன் தனது அப்போலோ கடையில் அதிக அளவில் முதலீடு செய்து கடையை நடத்தி வருகிறார்.
"நான் ஒரு மீனவ சமூகத்தில் வளர்ந்தவன், இங்கு பெரும்பாலான பெற்றோர்களும் பள்ளிக்கே சென்றதில்லை. என்று கூறும் குமரேசன், மேலும் அவர் கல்வியைப் பெற முடிந்தது தனது அதிர்ஷ்டம் என்றும் கூறுகிறார். "எனது இரண்டு மகன்களும் புத்தகம் படிக்க விருப்பம் உடையவர்கள், நான் நடத்தும் புத்தகத் திருவிழா என் மூத்த மகனின் தூண்டுதல்தான்:” - என்கிறார் அப்பல்லோ குமரேசன்.
முதல் புத்தகத் திருவிழா, 2017 ஜனவரியில் நடைபெற்றது. 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர், இதில் ஏராளமான பெரியவர்களும் கலந்து கொண்டனர். "எனது நண்பர் ஸ்டெபனோ பெக்காரி (ஸ்வீடன் நாட்டு சிற்பி மற்றும் குளோபல் ஸ்டோன் ஒர்க் ஷாப் நிறுவனர்) தனது கலைக்கூடத்தை நிகழ்ச்சிக் கூடமாகவும் வாசிப்புக்கான இடமாகவும் மாற்றி அவருக்கு உதவி செய்தார், மேலும் நண்பர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடமிருந்து நிறைய உதவிகளைப் பெற்றே தான் புத்தகத் திருவிழாவை நடத்துவதாகவும் அப்பல்லோ குமரேசன் தெரிவிக்கிறார்.
குமரேசனின் முயற்சிகள் கல்வியறிவு சவாலாக இருக்கும் அந்த ஊரில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. , மேலும் ஆங்கில புத்தகங்களை கையாள்வதே ஒரு கிடைக்காத சொகுசு என்கிற நிலையில் குமரேசன் நிறைய மேற்கத்திய ஆசிரியர்களின் புத்தகங்களை வைத்திருக்கிறார்.
மகாபலிபுரத்திற்கு ஆண்டு தோறும் நிறைய சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம், இவர்களுள் பெரும்பாலனோர் அப்போலோ புத்தகக்கடைக்கு வந்து குமரேசனுடன் நட்பு பாராட்டிச் செல்வது வழக்கம்.
மகாபலிபுரத்தின் மீதான இவரது அன்பு புத்தகங்கள் மீது அவருக்கு இருக்கும் பாசத்திற்கு அடுத்தபடியாகும். குமரேசன் பிறந்து வளைந்தது. எல்லாம் மகாபலிபுரத்திலேயே ஆனதால், அதுவே அவருடைய சொந்த ஊராகும். இவர் தனது ஊரை சுற்றிக் காட்டுவதையும் மகிழ்ச்சியான ஒரு பணியாகச் செய்கிறார். இவருடனான ஒரு சிறு சந்திப்பும், இந்த ஊரைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தந்து இவருடைய ஊரை யாரும் விரும்புவதைப் போல செய்து விடுகிறார். இவர் தனது ஊரில் ஆண்டு தோறும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உதவியோடு இங்குள்ள கடற்கரையைச் சுத்தம் செய்வது போன்ற பல சேவை காரியங்களையும் செய்து வருகிறார்.
குழந்தைகளின் முதல் புத்தகத் திருவிழாவிற்கு கிடைத்த வெற்றி குமரேசன் அவர்களை மேலும் பல விஷயங்களை செய்வதற்கு ஊக்குவித்தது. தனது ஊரில் உள்ள குழந்தைகளுக்கான கலை விழாவையும் தொடங்குவது இவரின் அடுத்த ஆசை.
மீனவ சமூகத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் குமரேசன், தனது முயற்சிகள் உள்ளூர் மக்களின் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க ஊக்குவிக்கும் என்று நம்புகிறார். "இந்த ஊரின் குழந்தைகள் புத்தகங்களைப் படிக்கவும், சேகரிக்கவும் விரும்பும் குழந்தைகளாக வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என அப்போலோ குமரேசன் கூறுகிறார்.