Welcome..! Join us to Develop your Humanity
முக்தாபென் தக்ளி – தன்னுடைய 7வது வயதில் தன் கண்களை இழந்தாள்; பிற்காலத்தில் 200 பார்வை இழந்த பெண்களுக்கு ஒளிமயமான வாழ்வை அளித்தாள்
2019 - பாரதத்தின் மக்களுக்கான நான்காம் உயர் விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டு முக்தாபென் தக்ளி மேடையில் இருந்து நடந்து செல்லும் போது கூடியிருந்தோர் அனைவரின் பாராட்டுகளையும் பெரும் கைதட்டல் மூலம் பெற்றார். விருதை பாரத குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் அவர்களிடம் இருந்து பெறும்போது “எல்லா பெற்றோரையும் போல்தான் என் மகள்களுக்காக உழைத்தேன் ; இதற்கு எதற்கு விருது? “ என முணுமுணுத்தது, குடியரசு தலைவருக்கு புன்முருவலை வரவழைத்தது.
1995 ல் தக்ளி மற்றும் அவர் கணவர் இருவரும் ப்ரஞாசக்ஷு மகிளா சேவா குஞ் (PMSK) என்ற லாப நோக்கிலா ஒரு நிறுவனத்தை குஜராத்தின் சுரேந்திர நகர் என்ற இடத்தில் நிறுவினார். அது பார்வை இழந்த பெண்களுக்கான கல்வி, உணவு, இருக்க இடம் ஆகியவைகளை வழங்கும் நிறுவனமாகும்.
இதுகாறும், 58 வயதான இந்த பெண்மணி கிட்டத்தட்ட 200 பார்வையற்ற பெண்களின் எதிர்காலத்தை சீரமைத்து இருக்கிறார். இது மட்டுமல்லாமல் வெவ்வேறு குறை உள்ள 30 மாற்று திறனாளிகள் மற்றும் தங்கள் குடும்பங்களால் நிராகரிக்கப்பட்ட 25 முதியோர்களையும் பாரமரிப்பதையும் ஏற்று கொண்டு உள்ளார்.
தக்ளி-யை பரவையற்ற பெண்களுக்காக சேவை செய்ய தூண்டிய நிகழ்வு:
தனது 7வது வயதில் தக்ளி மூளைக்காய்ச்சல் வியாதியால் பீடிக்கபட்டு தன் இரு கண் பார்வையையும் இழந்தாள். அதனால் அவளின் பள்ளி படிப்பும் இடையிலேயே நின்றது. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள அங்காடியா நானா என்ற சிறு கிராமத்தில் வசித்து வந்த தக்ளி , கல்விதான் நல்லதொரு வாழ்விற்கு நுழைவாயில் என்பதை உணர்ந்து இருந்தாள். அதனால் அவள் தன் பெற்றோரை, பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள உத்யோக் ஷாலா என்ற பார்வையற்றோருக்கான பள்ளியில் தன்னை படிக்க வைக்க சம்மதிக்க வைத்தாள்.
தன் 14வது வயதில் அவள் கேள்வியுற்ற ஒரு துயர செய்தி அவள் வாழ்க்கையை மாற்றியது.
கோடை விடுமுறைக்கு பின் அவளின் மிக நெருங்கிய தோழி பள்ளிக்கு திரும்பவில்லை. பள்ளி நிர்வாகிகள் ஏன் என்று விசாரித்ததில் அவள் இறந்து விட்டாள் என்ற செய்தி கிடைத்தது. துயரம் என்னவென்றால் அந்த பெண் பார்வையற்றவள் என்பதால் அவளை, அவளின் பெற்றோர்களே விஷம் வைத்து கொன்று எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
“இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. என் ஆருயிர் தோழியை இழந்துவிட்டது என்னுள் பெருங்கோபத்தை உண்டாக்கியது. அப்போழ்து முடிவு செய்தேன் என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று. பெற்றோர்களுக்கு பாரமாக இருக்கும் பார்வையற்ற ஏதாவதுஏதாவதுஏதாவதுஏதாவதுஏதாவதுஏதாவதுஏதாவதுஏதாவது செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.” என்கிறார் தக்ளி.
“என்னை வித்யாசமாக பார்க்காத பெற்றோரும் , நண்பர்களும் கிடைத்தது என் அதிர்ஷ்டம். ஆம் இவர்களின் மிகப்பெரிய உதவி மற்றும் ஊக்கத்தால்தான் என்னால் மேலும் படிக்கவும், பார்வையற்ற பெண்களுக்கான உறைவிடத்துடன் கூடிய பள்ளியை நிறுவவும் முடிந்தது “ என்கிறார்.
“நான் எனக்காக வாழும் பெண்ணாக இல்லாமல் பார்வையற்ற பெண்களுக்காக என் வாழ்வை அர்பணிக்க நினைத்தேன். இந்திய பெண்களின் வாழ்வில் திருமணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். 1980ல் இந்த தருணத்தில் எனக்கு பங்கஜ் கிடைத்தார் என்பது நினைத்து பார்த்தாலும் நம்பவே முடியவில்லை, அவர் எனக்கு கிடைத்த மிக பெரிய தூண். “ ஆம் அவளுக்கு அவள் லட்சியத்தோடு ஒத்து போகும் ஒரு வாழ்க்கை துணை கிடைத்தது ஒரு பெரும் அதிசயமே.
இந்த மனம் ஒத்த தம்பதியர் தங்களின் வாழ்நாள் கனவான பார்வையற்ற பெண்களுக்கான உறைவிட பள்ளியினை 1995 ல் துவங்கினர், அதற்கு முன் புதுமண தம்பதியான இவர்கள் இருவரும் 12 வருடம் அம்ரேலி-யில் உள்ள ஒரு பார்வையற்றோர் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தனர். பள்ளி ஆரம்பித்த உடன் நான்கு பார்வையற்ற மாணவிகளை தத்தெடுத்து கொண்டனர். சுரேந்திரநகரில், தாங்கள் வாடகைக்கு குடியிருந்த ஒரு-படுக்கைஅறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் அந்த பெண்களையும் தங்க வைத்து கொண்டனர்.
இந்த மாணவிகளுக்கு வார நாட்களில் கல்வி கற்று கொடுத்து, வார விடுமுறைகளில் இந்த தம்பதியர் நட்பு, சொந்தம், மற்றும் முகம் தெரியோதோர் பலரையும் சந்தித்து நன்கொடை கேட்பதை வழக்கமாக கொண்டனர்.
மாற்றம் கொணர்தல், வாழ்க்கையில் ஒரு முறையே
பல தொழிற் நிறுவனங்கள், பள்ளிகள், அரசு நிறுவனங்கள் என நன்கொடைக்காக அலைந்த இந்த இருவரால் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பள்ளி மற்றும் உண்டு உறைவிடம் நிறுவ கிட்டத்தட்ட 13 வருடம் பிடித்தது.
இந்த வளாகத்தில் 1-12 ம் வகுப்பு வரை உள்ள ஒரு பள்ளி, விருந்தினர் மாளிகை, இசை பள்ளி, கணிப்பொறி ஆய்வகம் , ஹாஸ்டல், கூட்ட அரங்கம், விளையாட்டு மைதானம் மற்றும் மாற்றுதிறனாளி மற்றும் கைவிடப்பட்ட முதியோர்க்கான இல்லம் ஆகியவை இருந்தது. மேலும் இங்கு கல்லூரி செல்லும் பார்வையற்ற மாணவிகளுக்கான ஒரு ஹாஸ்டலும் இருந்தது. அங்கு தங்கியிருந்த அனைவரின் உணவு உறைவிடம் அனைத்திற்கான செலவுகளை .. தக்ளி-யே ஏற்று கொண்டாள்.
இங்கு மாணவிகளுக்கு வீட்டு பராமரிப்பு, தையல், கணிப்பொறி போன்றவைகளும், வாழ்க்கை கல்வியான சமையல், நுகர்தல், ஆவணப்படுத்துதல் போன்றவையும் போதிக்க பட்டன. இதனால் அவர்கள் சுய சார்பு பெற்றனர்.
கலைகல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் பூமி என்ற பெண் நினைவு கூர்கிறாள் “ PMSK வில் என் பெற்றோர் என்னை கொண்டு வந்த பொது என் வயது 2. வாழ்கையியலை இங்கு கற்றது போல் நான் என் வீட்டில் இருந்து இருந்தால் கற்றிருக்க முடியாது. ஆசிரியர் ஆக வேண்டும் எனும் லட்சியத்தோடு என்னால் அச்சமின்றி வாழ முடிகிறது என்றால் அதற்கு முழு காரணமும் தக்ளி மேடம் தான் “
பூமியை போல பல பெண்கள் இங்கு மிக சிறிய வயதிலேயே வந்து விடுகின்றனர், ஆனால் தங்கள் கல்வியை முடித்த பின்னரே வெளியேறுகின்றனர். இங்கு பெற்றோரால் கைவிடப்பட்ட பெண்களும் உள்ளனர், போலிசால் கொண்டு வரபெற்ற பெண்களும் உள்ளனர்.
கல்லூரி படிப்பை முடித்த பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விருப்பபட்டால் , PMSK-வே அவர்களுக்கு பொருத்தமான ஒரு இணையை கண்டு பிடிக்கிறது. அந்த ஆடவனின் கல்வி மற்றும் குடும்ப சூழல் பற்றிய சரியான தகவல் அறியப்பட்டு இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அதிலும் மணமகனின் குடும்பம் பொருளாதாரத்தில் வலுவாக இல்லை என்றால் தக்ளி திருமண செலவையும் தானே ஏற்கிறார்.
இந்த பள்ளி, மாணவர்களை - விளையாட்டு, சமையல் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க ஊக்குவிக்கிறது. இந்த நிறுவனத்திற்கென தனி பார்வையற்றோருக்கான கிரிக்கெட் அணி உள்ளது. இந்த அணி பார்வையற்றோருக்கான மாநிலங்களுக்கு இடையேயான பல போட்டிகளில் வெற்றியும் பெற்று இருக்கிறது.
இந்த தன்னலமற்ற சேவையை தக்ளி தொடங்கி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இந்த பாதையில், நெஞ்சுரம் மிக்க தக்ளி, ஏதேனும் சவால்களை சந்தித்தாலும் அவைகளையும் வாய்ப்புகளாக மாற்றி அதை பலரின் வாழ்க்கையை மாற்றும் சாதனமாக ஆக்கி விடுவார்.
“நான் சிரித்தும் இருக்கிறேன் அழுதும் இருக்கிறேன். பாதிக்கப்பட்டதையும் உணர்ந்து இருக்கிறேன், அதிகாரம் பெற்றதையும் உணர்ந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் பெற்ற படிப்பினை, அனுபவம் இரண்டும் கொண்டு எனக்கு நானே என் வளர்ச்சியை கண்டுள்ளேன்.. நான் பெற்ற எந்த விருதுகளும், பாராட்டுகளும் ; என் பிள்ளை செல்வங்களும் அவர்தம் குடும்பமும் அளிக்கும் வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிக்கும் என்றுமே ஈடாகாது “ என திண்ணமாக உரைக்கிறார் தக்ளி.