Welcome..! Join us to Develop your Humanity
சத்யநாராயண் முண்டயூர் - வாசிப்புப் பழக்க வழக்கங்களை ஊக்குவிப்பதில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் அர்ப்பணிப்பு வாழ்க்கை.
ஸ்ரீ சத்தியநாராயண் முண்டயூர்- பெரியவர்களால் சத்தியநாராயண்ஜி என்றும் இளைஞர்களால் (சாசா) மாமா மூசா என்றும் அழைக்கப்படுபவர். இவர் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் 32 ஆண்டுகளாக வாழ்ந்து, கல்வி மற்றும் வாசிப்பு இயக்கங்களை பல்வேறு மட்டங்களில் நடத்திவருகிறார். அவர் 1979 ஆம் ஆண்டில், அரசு பணியான வருமான வரித் துறையில் தனது வேலையை விட்டு விலகினார், பணத்தை விட அதிக அர்த்தமுள்ள தன் வாழ்க்கை நோக்கை கண்டறிந்தார். ஒரு வேலை வாய்ப்பு விளம்பரம் அவரை விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி இயக்கத்தில் ஒரு பதவிக்கு விண்ணப்பிக்க வழிவகுத்தது, அச்சமயம் அது வடகிழக்கில் அதன் வேர்களை பரப்பத் தொடங்கி இருந்தது . அவர் 1996 வரை விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளிகளின் கல்வி அதிகாரியாக பணியாற்றினார், அங்கு அவர் பல இளைஞர்களை தனது கருத்துக்களால் தாக்கத்தை ஏற்படுத்தினார்; அவருடைய பணிகளை பறைசாற்ற சாட்சியங்கள் கண்டுபிடிப்பது கடினம் அல்ல, நடைமுறையில் எந்த விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளியிலும் உள்ள அனைவருக்கும் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை நினைவு கூறுகின்றனர். விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளிகளே கல்வியின் மிகச்சிறந்த நினைவுச்சின்னமாகும், தற்போது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 34 விவேகா னந்த கேந்திர வித்யாலயா பள்ளிகள் தொடர்ந்து பல இளம் மாணவர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்கின்றன, அவை இல்லையெனில் படிப்பு வாசனையை அந்த மண் கண்டிருக்காது.
இதற்கிடையில், கற்பனைதிறனை ஊக்குவிக்காத நம்முடைய பள்ளி பயிற்றுவிக்கும் முறைகளால் சோர்வடைந்த மாமா மூசா அவற்றின் பிடிக்களிலிருந்து கல்வி பயிற்றுவிக்கும் முறையை மீட்டு எடுக்க முடிவு செய்தார். பல வருட சோதனைகள் மூலம், மருத்துவ தாவரங்களை வளர்ப்பதற்கு முறைசாரா கல்வியில் ஒரு வருட வேலைத்திட்டம் போன்ற மாறுபட்ட விஷயங்களைக் கொண்டு வந்தார். அதேசமயம், குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவும் கற்பனை ஆற்றலைக் கண்டறியவும் அவர்களை ஊக்கப்படுத்தவது அவசியம் என்பதை அவர் உணர்ந்தார். இந்த சிந்தனை புத்தக கண்காட்சி வடிவத்தை எடுத்தது; பழங்குடி குழந்தைகளிடையே வாசிப்பை ஊக்குவிக்கும் முயற்சியில்,மாநில போக்குவரத்து மோசமானதாக இருந்தபோதும் அதனை பயன்படுத்தி தொலைதூர கிராமங்களுக்கு அவர் டிரங்குகளில் புத்தகங்களை எடுத்துச் சென்று அங்குள்ள குழந்தைகளை படிக்கச் வைப்பார். இதற்கிடேய அவர் வேறு வகையான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார் . 2007 ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கான "எழுத்தாளர்கள் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர்கள் சங்கம்" (AWIC) மற்றும் "விவேகானந்த அறக்கட்டளை" (அவர் உறுப்பினராக உள்ளார்) ஆகிவற்றோடு இணைந்து, குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளின் நூலகம் ஒன்றை தொடங்கினார் . அது "லோஹித் இளைஞர் நூலக இயக்கத்தின்" ஒரு அங்கமாகவும் அமைந்தது. " தேசுவில்" என்ற நகரத்தில் மூங்கில் வகை ஒன்றின் பெயரான banbooza என்ற பெயரைய்க்டகொண்டு ஒரு நூலகம் தொடங்கப்பட்டது . இன்று, இதுபோன்ற 13 நூலகங்களை வக்ரோ, சோங்காம், அஞ்சாவ், மற்றும் லத்தாவோ போன்ற ஊர்களில் ஆரம்பித்துள்ளார்.
இந்த நூலகங்களில் உள்ள புத்தகங்களை நலம் விரும்பிகள் மற்றும் வெளியீட்டு நிறுவனங்கள் நன்கொடையாக வழங்குகின்றன. இந்த புத்தகங்களைப் பெறுவதற்கு உண்டான அனைத்து விதமான ஒருங்கிணைப்பு வேலைகளையும் ஒற்றை மனிதனாய் மாமா மூசா ஈடுபடுகிறார். நூலகங்கள் "நூலக ஆர்வலர்கள்" அல்லது படிக்க வரும் குழந்தைகளால் நடத்தப்படுகின்றன; நூலகத்தைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பொறுப்பு உணர்வை கற்பிப்பதே இதன் நோக்கம் . கதை சொல்லல், வினாடி வினாக்கள், வாசிப்பு மற்றும் சிறுவர் செயல்பாடுகளின் மையமாக இந்த நூலகங்கள் விளங்குகின்றன.
ந்த வாசிப்பு மற்றும்அது தொடர்பான நடவடிக்கைகளின் வட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சின் பயனாக பல்வேறு நிபுணர்களின் கதை சொல்லல் மற்றும் வாசிப்பு குறித்த பட்டறைகள் நடந்தன. 2009 ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற குழந்தைகள் நூலகங்களுக்கான சர்வதேச மாநாட்டில் பங்குபெற அனுமதிக்கப்பட்டதின் மூலம் இந்த நூலக இயக்கத்திற்கு பெரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டது , அங்கு அவர்கள் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முன்னிலையில் நாடகம் , கவிதை பாராயணம் மற்றும் நடனங்களை நிகழ்த்தினர், பின்னர் அவருடன் உரையாடினர். நூலக இயக்கத்தின் தாக்கம் அருணாச்சல பிரதேச ஆளுநர் ஸ்ரீ ஜே.ஜே.சிங், அமைச்சர்கள் மற்றும் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்உட்பட பல சிறந்த புரவலர்களை ஈர்த்துள்ளது.
வாசிப்புப் பழக்கம் குழந்தையின் சுயமதிப்பை எவ்வாரு உயர்த்தும் என்பதற்கு இது ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. காடுகளை அழிப்பதனால் ஏற்படும் தீமைகளை விளக்குவதில் குழந்தைகள் தங்கள் முழுத்திறனையும் காண்பித்தனர்.
நூலகங்கள் வொவொன்றும் மிகுந்த ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது . "தேசு" மற்றும் "வக்ரோவில்" தலா சுமார் 1000 புத்தகங்களின் தொகுப்பு இருகிறது . கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் அமர் சித்ரா கதா மற்றும் எழுந்தார்கள் ரோல்ட் டால், ரஸ்கின் பாண்ட் , டாக்டர் சியூஸ் ஆகியோரின் புத்தங்களை உள்ளடக்கியது. இந்த புத்தகங்கள் நிச்சயமாக யாருக்கும் ஒரு கல்வியை போதிக்கும்
மாணவர் அரசியல், இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம், ஆளுகைக்கு எதிராக பழங்குடியினரின் மோதல்கள், பெண்கள் முன்னேற வாய்ப்பின்மை ஆகியவை சமூகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. அத்தகைய ஒரு சவாலான நேரத்தில், நூலக இயக்கம் இளைஞர்களின் மனதில் வாசிப்பு மற்றும் கல்வியின் விதைகளை நட்டு சமுதாயத்தில் ஒரு அற்புதமான சேவையை செய்து வருகிறது. மேலும், நம்முடைய சமூகம் ஒரு சுயநல, நுகர்வோர் வாழ்க்கை முறையை நோக்கி நகரும்போது இந்தியாவில் நமக்குத் தேவையான மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக மாமா மூசா மற்றும் அவரது வேலை பணிகள் திகழ்கின்றன. இத்தகைய நபர்களும் அமைப்புகளும் சமூகம் அறிய வேண்டிய நல்ல செய்தி ஆகும்.
திரு.சத்யநாராயண் முண்டயூர் அவர்களுக்கு 2020 ஜனவரியில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.