Welcome..! Join us to Develop your Humanity
அஜய் தண்ணீர்குளம் - 1500 விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்காக தனது பிரெஞ்சு ஃபெல்லோஷிப் கல்வியையே விடுத்த வானியற்பியலாளர்
வானியற்பியலாளராகத் தொழில் புரிவது அவரது வாழ் நாள் கனவு. ஆனால் அஜய் நூற்றுக்கணக்கான கஷ்டப்படும் விவசாயிகள் தங்களின் லாபம் இருபது சதவிகிதம் அதிகரிக்க அதை விட்டுக் கொடுத்தார்.
2008 ம் ஆண்டில் அஜய் தண்ணீர்குளம் தனது வாழ்நாள் கனவான சூரியன். நட்சத்திரங்கள், கோள்கள், விண்மீன்திரள்கள், புவி சாரா வடிவங்களின் நிகழ்வுகள் பற்றிக் கற்பதற்காக பிரான்ஸைச் சேர்ந்த நைஸ் என்னும் இடத்துக்குச் செல்ல ஆயத்தமானார். அவருடைய உற்சாகம் வானளாவ உயர்ந்திருந்தது. அவருக்கு நெருக்கமானவர்கள் பெருமிதம் கொண்டிருந்தனர்.. ஏனென்றால் ராஞ்சியைச் சேர்ந்த இந்த இளைஞர் வானியல் மற்றும் வானியற்பியல் துறையில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று பின் ஃபெல்லோஷிப்பும் பெற்றவர்.
வாழ்வில் புது வழியில் பயணிக்கும் முன்பு சற்று இடைவெளி எடுத்துக் கொண்டு அஜய் தனது அறிவையும் திறனையும் ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடிவு செய்தார். அவர் நிதி மேலாண்மை மற்றும் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சிப் படிப்புக்காக விண்ணப்பித்து அதைச் சென்னையில் பெறவும் செய்தார். தமிழ் நாட்டைச் சேர்ந்த தஞ்சாவூர் ஊரகப் பகுதியில் வங்கிகளை பற்றிய படிப்பும் அதன் திட்டத்தில் ஒன்று.
அஜய்க்கு இது அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்பமாகவும் அவரது லட்சியத்தையே மாற்றுவதாகவும் நூற்றுக்கணக்கான சிறு விவசாயிகளின் வாழ்க்கையையே மாற்றி அமைப்பதாகவும் இருக்கும் என்று சிறிதும் அறிந்திருக்கவில்லை.
தன் ஃபெல்லோஷிப் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக அஜய் தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். அங்கே அவர் விவசாயிகள் நெல் பயிரிடுவதற்கு தரம் குறைந்த விதைகள், முறையற்ற காலநிலை மாறுபாடுகள், தண்ணீர் பற்றாக்குறை, தேவை அதிகமான விவசாயத் தொழிற் கூலி எல்லாவற்றினாலும் கஷ்டப் படுகிறார்கள் என்பதை அறிந்தார்.
"விவசாயிகளுடனான எனது தொடர்பு அவர்களது நிதிநிலை மேலாண்மை மட்டுமே சம்பந்தப் பட்டது. ஆனால் அவர்கள் தனது மற்றைய கஷ்டங்களையும் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள்.அவை தீர்க்க முடியாதவைகளல்ல. அவர்களுக்குத் தேவையானது என்னவென்றால் மூலதன செலவைக் குறைப்பது குறித்தும் மகசூலை அதிகரிப்பதுமான சரியான தொழில்நுட்பம்" என்கிறார் அஜய்.
பாரதத்தில் விவசாய சூழ்நிலையின் கடினமான நிதர்சனங்களைக் கற்றறிந்த அஜய் தனது லாபகரமான ஃபெல்லோஷிப் கல்வியையும் துறந்து மகசூல் என்ற பெயரில் 2012 ஆம் ஆண்டு ஜெயராம் வெங்கடேசன் என்பவருடன் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். மகசூல் நிறுவனம் முதலீட்டு செலவு , அறுவடை அடக்க விலை, நச்சுத்தன்மையுடைய உரம் , நீர், மனித சக்தி ஆகியவற்றைச் சரிப் படுத்தும் தொழில் நுட்ப உதவி செய்கிறது. இதன் விளைவாக மகசூல் அதிகரித்து தமிழ் நாட்டின் ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த கிட்டத்தட்ட 1500 விளிம்பு நிலை விவசாயிகளுக்கு லாபம் 20 சதவிகிதம் அதிகரித்தது.
நெல் வயல்களில் முதலில் நெல் பயிரிடப்பட்டு எடுத்து நாற்றங்கால்/நாற்றுப் பண்ணையில் தனியாக வளர்க்கப் பட்டது. இந்த நாற்றுகள் பாத்திகளில் அங்குலம் வரை வளரும்.பெரும்பான்மையான விவசாயிகள் அதை நேரிடை முறையாகவே அனுப்பிவைக்கின்றனர்.நெல் நடவுக்கு குறைந்த அளவே நெல் தேவை என்றாலும் அது அதிக மனித உழைப்பு சார்ந்ததாகவும் அதிக கால அவகாசம் எடுப்பதாகவும் இருக்கிறது.ஒரு ஏக்கர் நிலப் பரப்புக்கு 14 உழைப்பாளர்களையும் ஒரு முழு நாளையும் பயன்படுத்த வேண்டியதாய் இருக்கிறது.
நடவு நடும் போது இரண்டு நாற்றுகளுக்கு நடுவில் கணிசமான இடைவெளி தேவை. இல்லையென்றால் ஒரு நாற்று இன்னொன்றின் சத்தையும் நீரையும் உறிஞ்சும் அபாயம் இருக்கிறது. இதனால் சராசரிக்கும் குறைவான பயிர் வளர்ச்சியே நிகழும். திறனுள்ள விவசாயத் தொழிலாளர்களை ஏற்பாடு செய்வதும் ஒரு முக்கிய சவாலாக இருக்கிறது.. ஏனென்றால் அவர்கள் பெரிய பண்ணை நிலங்களில் அதிக ஊதியத்திற்கு வேலை செய்யவே விரும்புகின்றார்கள். விவசாயத் தொழிலாளர்கள் மணி நேர ஊதியத்துக்கு வேலைக்கு அமர்த்தப் படுவதால் விவசாயிகள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கிறது. குறிப்பாக நடவு வேலை செய்யும்போது இது மீண்டும் நிகழ்வதால் இரட்டிப்பாகிறது. இந்த வழியில் அவர்கள் பணம் இழப்பதோடு மகசூல் குறைவையும் சந்திக்க வேண்டிவருகிறது.
"நாம் முன் அனுபவத்தில் கண்டதென்னவென்றால் அரிசியில் லாபம் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 3500 முதல் 7000 வரை அதாவது கிட்டத்தட்ட 40% உயர்வு மாற்றியமைக்கப்பட்ட எளிய விவசாயத் திட்டத்தின் மூலம் உண்டாகும் " என்கிறார் அஜய்.
மகசூல் நிறுவனம் மாற்றியமைக்கப்பட்ட அரிசி அதிகரிப்பு இயந்திரங்களை, இயற்கை உரங்களைக் கலந்து பயிர் வளர்ப்பதற்காக ஒப்பந்த முறையில் தருகிறது. இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு இலவசமாகத் தரப்பட்ட போதும் பயன்படுத்தும் விவசாயிகள் இயந்திரம் இயக்கும் தொழிலாளிக்கு ஊதியத்தையும், இயக்கும் செலவையும், பராமரிப்புச் செலவையும் மாத்திரம் செலவாகச் செய்ய வேண்டும் . இயந்திரத்தை இயக்குபவர் உள்ளூர் நபர் என்பதால் இது வேலை வாய்ப்பையும் ஏற்படுத்துவதாகிறது.
" நாங்கள் விவசாயிகளுக்கு நேரடியாக இயந்திரம் இயக்கும் பயிற்சி தரவில்லை.ஏனென்றால் ஒரே கிராமத்திலிருந்தே பல விவசாயிகளுக்கு ஒரே இயந்திரம் தேவைப்படும். அவர்கள் அதை இயக்கும் நபரிடம் தொடர்பு கொண்டு வேலையை முடித்துக் கொள்வர்." என்று விளக்குகிறார் அஜய். சற்றேறக் குறைய 120 கிலோ எடையுள்ள அந்த இயந்திரம் 20 நாள் வளர்ந்த நாற்றை வேரையும் பயிரையும் பறிக்காமல் பெயர்த்து எடுத்து சமமான இடைவெளி தூரம் விட்டு சூரிய ஒளி , நீர், வேர் வளர்ச்சி ஆகியவற்றைப் பெறும்படி நடுகிறது. அதுவே களைகளை பிடுங்குவது, மண்ணை நெகிழச் செய்வது ஆகியவற்றையும் செய்து விடுவதால் அதிக காற்றோட்டம் அதிக உழவுக்கு வழி வகை செய்கிறது. மாற்று வகை அரிசி அதிகரிப்பு திட்ட விளை நிலங்கள் முதல் பத்து நாட்களில் 25% குறைவான நீர்வரத்தையே உபயோகிக்கிறது.
வாணி முத்தையா என்கிற தமிழ் நாட்டின் பெரியகுளத்தைச் சேர்ந்த விவசாயி முதல் முறையாக இயந்திரத்தை பயன்படுத்திய சிறு விவசாயிகளுள் ஒருவர், இவர் தனது ஏழு ஏக்கர் நிலத்துக்கு இதைப் பயன் படுத்தினார்.
" நான் முன்பு 1.26 லட்ச ரூபாய் விதைகளுக்காகவும் , விதை விதைப்பது, நாற்று நடவு முதலிய விவசாயக் கூலிக்காகவும் செலவு செய்தென். அதுவும் அப்போது லாபத்துக்கு உத்தரவாதமில்லாமலிருந்தது. இவ்வளவு செலவு செய்தும் ஒரு ஏக்கருக்கே பத்து தொழிலாளிகள் நடவு செய்வதில் ஈடுபடுத்த வேண்டியிருந்தது" என்று பகிர்கிறார் வாணி.
மகசூல் அமைப்பு வந்த பிறகு வாணியின் மூலதனச் செலவு கிட்டத்தட்ட 4000 ரூபாய் குறைந்தது. மகசூலும் ஒரு ஏக்கருக்கு 15% உயர்ந்தது. கூடுதலாக விவசாயிகள் 10% முதல் 20% அதிக உற்பத்தியும் வருமானத்தில் ரூபாய் 2500 முதல் 5000 வரையும் அதிகம் பெற்றார்கள் என்கிறார் வாணி. நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக கிராமப் புறங்களில் ஊடுருவும்போது மாறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. ஒரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால் விளை நிலங்களில் பயிர் வளர்ச்சிக்காகவும் பூச்சிக்கொல்லிக்காகவும் பயன்படுத்தப் பட்ட கண்மூடித்தனமான நச்சு உரப் பயன்பாடு.
"மழை சார்ந்த விளை நிலங்களில்பாதிப்பு ஏற்படுத்தும் உரங்கள் பரவலாகப் பயன்படுத்துவது கண்டறியப் பட்டது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதியில் விவசாயிகள் பருவமழை காலங்களில் மாத்திரம் ஒரு போக விளைச்சலைச் செய்து வந்தார்கள். கோடைக்காலம் முடிந்து பெய்யும் திடீர் கன மழையில் பூச்சிகள் பெரிய அளவில் உருவாகின்றன. ஒரு போக விளைச்சல் வருமானத்தைக் காப்பதற்காக விவசாயிகளும் அதிக வீரியமுள்ள பூச்சிக் கொல்லி உரங்களை நிலத்தில் அடிக்க வேண்டியதாகிறது" என்கிறார் அஜய்.
இது போன்ற விவசாயிகளுக்கு உதவுவதற்காக அமைப்பானது சுற்றுச் சூழல் பாதிக்காத பசுச்சாணம் சார்ந்த, இயற்கை சார்ந்த கரிம உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தப் பயிற்சி தருகின்றனர். அவர்கள் பரமேஸ்வரமங்கலம் என்னும் கடலூர் அருகிலுள்ள கிராமத்தில் இரண்டு மண்புழு உர உற்பத்தி பிரிவுகளை அமைத்திருக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் இரு பிரிவுகளும் ஐந்து டன் மண்புழு உரத்தை உற்பத்தி செய்து 400 விவசாயிகளுக்கு உதவுகின்றன. விவசாயிகள் முழுமையாக வேதியியல் உரங்களை புறக்கணிக்கவில்லையென்றாலும் அதன் பயன்பாடு பரவலாகக் குறைந்து விட்டது. தவிரவும் அவர்கள் ஒரு ஏக்கருக்கு 300 ரூபாய் வரை இயற்கை உரங்களால் சேமிப்பு அடைகிறார்கள்.
இவ்விதம் அஜய் தான் ஃபெல்லோஷிப் திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி செய்ய வந்திருந்தும் அதையும் மீறி தானே முன்மாதிரி விவசாய நடைமுறைகளை செய்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.