Welcome..! Join us to Develop your Humanity
ஒரு நாள்௯ட ஓய்வெடுக்காமல் கடந்த 28 ஆண்டுகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்தவர் டாக்டர் செரிங் நோர்பூ
லே லடாக் பகுதியில் யாரிடமேனும் சென்று டாக்டர் செரிங் நோர்பூ அவர்களைப் பற்றி கேட்டுப் பார்த்தால் சேவைக்காக அவர் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்ததை அவ்வளவு ஆர்வத்துடன் விவரிப்பார்கள். தனது வாழ்க்கையை சிறிதும் நொந்து கொள்ளாமல் மக்களுக்கு சேவையாற்றுவதையே செயலாகக் கொண்டிருக்கிறார் அவர். 30 ஆண்டுகளாக எந்த ஒரு நவீன மருத்துவ வசதியும் இல்லாத லே லடாக் மற்றும் கார்கில் பகுதியில் அனுதினமும் மக்களுக்காக சேவை செய்து வருகிறார். சொல்லப்போனால் இத்தனை பெரிய நிலப்பரப்பிற்கு ஒரே ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பது மிகப்பெரிய சவாலான அதே நேரத்தில் சொந்த வாழ்விற்கு நேரம் கொடுக்க முடியாத அளவிற்கு அசௌகரியமான பொறுப்பாகும். இப்படிப்பட்ட ஓர் பொறுப்புடனும் நவீன கருவிகள் இல்லாத சூழ்நிலையிலும் அவர், கடந்த முப்பது வருடங்களில் ஏறத்தாழ பத்தாயிரம் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார் என்பது அசாத்தியமான சாதனையாகும். இந்த சாதனையே அவரது சேவையில் அவர் காட்டும் அர்ப்பணிப்பின் சாரத்தை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
1941-ம் வருடத்தில் லே பகுதியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிம்மோ என்ற கிராமத்தில், ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த நோர்பூ, தனது பன்னிரண்டாம் வகுப்பு வரை அங்குள்ள உள்ள அரசு பள்ளியில் படித்து முடித்து அதன்பின் தனது இளநிலை அறிவியல் பட்டத்தை ஸ்ரீநகரில் பெற்று, அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நுழைவுத்தேர்வு மூலம் 1959 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார்.
எம்பிபிஎஸ் படிப்பை முடித்தபின் மக்களுக்கு சேவை செய்வதை தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாத நோர்பூ, 1965இல் நூப்ரா பள்ளத்தாக்கில் அரசு சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக சேர்ந்தார், அந்த காலத்தில் லே பகுதியிலிருந்து நூப்ரா பள்ளத்தாக்கு செல்வதற்கு எந்த ஒரு சாலை வசதியும் இருக்கவில்லை. கார்துங்ளா கணவாய் வழியாக மூன்று நாட்கள் நடந்து சென்றால் மட்டுமே அந்த இடத்தை சேர்ந்து அடைய முடியும். நோர்பூ அவர்களுக்கு 1970இல் தனது சொந்த ஊரான லே பகுதியில் பணி இடமாற்றம் கிடைத்ததன் மூலம் அந்த கடினமான பயணத்திலிருந்து விடுப்பு கிடைத்தது. அங்கு அவர் 1975 வரை பணியாற்றி வந்தார்.
பிறகு 1978 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சையில் முதுநிலைப் பட்டம் பெற்று, அறுவை சிகிச்சை நிபுணராக லே பகுதியில் உள்ள சோனம் நோர்பூ மெமோரியல் ஹாஸ்பிடலில் பணியாற்ற துவங்கினார். அந்த மருத்துவமனை அவர் சேர்ந்த காலத்தில் மாவட்ட மருத்துவமனையாக 20 படுக்கைகள் மட்டுமே கொண்டு செயல்பட்டு வந்தது.
தொடர் மின்வெட்டு, மருத்துவமனையில் தடையில்லா மின்சார வசதி இல்லாமை, தேவையான ஆய்வகம், துணை மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாத சூழ்நிலையில், டாக்டர் நோர்பூ அவர்களுக்கு அங்கு கிடைத்த பொருட்களை வைத்து மக்களுக்கு சிகிச்சை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்தது. பல தருணங்களில் மிகவும் கடினமான அறுவை சிகிச்சைகளையும் வெறும் கை விளக்கின் வெளிச்சத்தில் செய்யும் சூழ்நிலைகள் இருந்திருக்கின்றன. லே பகுதிக்கு வெளியில் இருக்கும் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசனை செய்யும் அளவிற்கு அந்த காலத்தில் தொலைபேசி மற்றும் அலைபேசி வசதிகளும் இருந்திருக்கவில்லை.
அந்த மொத்த மாவட்டத்திற்கும் ஒரே ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக அவர் நம்பியது எல்லாம் அவருடைய சிறப்பான படிப்பறிவும் அவர் கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்களும் தான். அவசரகால சிகிச்சைகளுக்கு டெல்லி அல்லது சட்டீஸ்கர் அனுப்பி வைப்பது சாத்தியம் இல்லாதது என்பதால் அவர்தான் செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது.
இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் டாக்டர் நோர்பூ தனது இத்தனை கால சேவையில் ஒரே ஒரு நோயாளியை தான் சிகிச்சை பலனளிக்காமல் திரும்ப அழைக்க நேர்ந்துள்ளது. நவீன மருத்துவம் படித்த எவரும் அவர் செய்த சிகிச்சைகளை பட்டியலிட்டுப் பார்த்தால் ஆச்சரியம் தான் அடைவர். ஏனெனில் ஏறத்தாள அறுவை சிகிச்சையில் உள்ள அனைத்துத் துறைசார்ந்த சிகிச்சைகளையும் அவர் தனித்தே கையாண்டுள்ளார்.
டாக்டர் நோர்பூ அவர்கள் எத்தனை அனுபவம் மிக்கவர் என்பதை எடுத்துக்காட்ட நவீன வசதிகள் ஏதும் இல்லாத தருணத்திலும் கடினமான சூழ்நிலைகளை கையாண்ட பல ஆச்சரியமூட்டும் சம்பவங்கள் இருக்கின்றன. அவரது உண்மையான சேவை மனப்பான்மையினால், ஒரு கருவி கிடைக்கவில்லை எனில் அதை காரணம் காட்டாமல் வேறு என்ன செய்யலாம் என்பதை சரியான காலத்தில் சிந்தித்து செயலாற்றவும் செய்திருக்கிறது. தனது அர்ப்பணிப்பாலும் அன்பாலும் பணிவாலும், ஒற்றையாக இருந்து லடாக் பகுதியில் மருத்துவ சரித்திரத்தை மாற்றி எழுதியுள்ளார். அதுவரை இப்படிப்பட்ட ஒரு மருத்துவரை அந்த மாவட்டம் பார்த்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை என்று இந்திய தூதரகத்தை சார்ந்த சோனம் வேங்ஹக் நெகிழ்ந்து கூறுகிறார்.
நல்ல காலமாக 1980களில் சூழ்நிலை நல்ல மாற்றத்தை சந்தித்தது. மாவட்ட மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டு நவீன அறுவை சிகிச்சை அறை கட்டப்பட்டு, தடையில்லா மின்சாரம் தேவையான நவீன வசதிகள், மருத்துவமனை வளாகம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட வெப்பமாக்கும் கருவி, தேவையான அளவு செவிலியர்கள் அதைவிட முக்கியமாக டாக்டர் நோர்பூ உடன் சேர்ந்து வேலை செய்ய மயக்க மருந்து நிபுணர் ஆகியவை கிடைத்தன. அதாவது 1980கள் வரை ஏறத்தாழ ஐந்து வருடங்கள் மயக்க மருந்து நிபுணர்கள் உதவி கூட இல்லாமல் அத்தனை அறுவை சிகிச்சைகளை தன்னிச்சையாக செய்திருக்கிறார் என்பது மற்றவர்களுக்கு அசாத்தியமானதாகும்.
எஸ்என்எம் மருத்துவமனையில் அவர் வேலை பார்த்து வரும் இந்த தருணத்தில் பல தலைமுறை மருத்துவர்களுக்கு வழிகாட்டியாகவும் உத்வேகம் கொடுப்பவராகவும் அவர் விளங்குகிறார். அவருடைய அர்ப்பணிப்பு எத்தகையது என்றால், கடந்த முப்பது வருடங்களில் ஒருநாள்கூட மருத்துவ வேலைகளிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்ளவில்லை. சில வருடங்களில் லடாக் மக்களின் புத்தாண்டு பண்டிகையான லோசர் நாளன்றுகூட வீட்டுக்குச் செல்லாமல் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
லே பகுதி மக்களிடமும் விசாரித்துப் பார்த்தால் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு நபராவது டாக்டர் நோர்பூ-விடம் சிகிச்சை பெற்று இருப்பர், மக்களிடையே அவர் இப்படிப்பட்ட ஒரு உறவை காத்து வருகிறார் என்று சோனம் வேங்ஹக் கூறுகிறார்.
1999ஆம் ஆண்டு தான் அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை எஸ்என்எஸ் மருத்துவமனையில் அவர் வேலை பார்த்தார், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதை அவர் நிறுத்தவில்லை. சொல்லப்போனால் 2001 முதல் 2006ஆம் வருடம் வரையிலான காலகட்டத்தில் மகாபோதி கருணா சாரிட்டபிள் மருத்துவமனையில் தொலைதூர கிராமங்களில் வசித்துவரும் ஏழை-எளிய மக்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளித்து வந்தார்.
இப்பொழுது டாக்டர் நோர்பூ, தனது 80 வயதிலும் வாரத்தில் ஆறு நாட்கள் ஒன்றரை மணி நேரம் நோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார் தேவைப்பட்டால் உயர் சிகிச்சைகளுக்கு பரிந்துரைகளும் செய்கிறார்.
2019 ஆம் வருடத்தில், தனது ஒப்பற்ற சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் நோர்புவின் வழிகாட்டுதலில் வளர்ந்த லடாக் பகுதியின் முதல் மகப்பேறு மருத்துவர் டாக்டர் செரின் லோண்டல் (Tserin landol) அவர்களும் 2006 ஆம் வருடம் பத்மஸ்ரீ விருது மற்றும் 2020 ஆம் வருடம் பத்ம பூஷன் விருது பெற்றிருக்கின்றார்.
இப்பொழுது நாடு சந்தித்து வரும் கொரோனா நோய்த்தொற்று தாக்குதல் சிகிச்சைகளுக்கு எஸ்என்எம் மருத்துவக்கல்லூரியில் இடவசதி பற்றாக்குறையால், பௌத்த துறவியான துப்சான் சோக்யல் அவர்கள் துவங்கி வைத்த லடாக் ஹார்ட் பவுண்டேஷனில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது, இந்த மருத்துவமனையில் செரின் நோர்பூ மற்றும் செரின் லோண்டல் இருவரும் தன்னார்வலர்களாக தொண்டாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.