Welcome..! Join us to Develop your Humanity
படாலா பூதேவி - தனிப்பட்ட சோகம் இருந்தபோதிலும், அவர் பழங்குடி பெண்கள் விவசாயிகள் மற்றும் கிராமப்புற பெண்கள் தொழில்முனைவோருக்கு ஒரு முன்மாதிரியாக ஆனார்
இந்த ஆண்டு(2020) சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திடமிருந்து "நாரி சக்தி புரஸ்கார்" விருது பெற்ற படாலா பூதேவி, ஆந்திராவின் வடக்கு கடற்கரை பிராந்தியத்தில் பழங்குடியினரிடையே பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக பணியாற்றி வருகிறார்.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பழங்குடி கிராமப் பகுதியைச் சேர்ந்த ஒரு அனல் பறக்கும் ஆளுமை, சவரா பழங்குடியினரைச் சேர்ந்த படாலா பூதேவி. அவர், தனது பெயரின் உண்மையான பொருள் படி பூமித்தாயாக விளங்குகிறார். பாரம்பரிய விதைகளை சேகரித்து நடவு செய்வதில் ஒரு தனித்துவமான பயணத்தை மேற்கொண்ட அவர், அழிவின் விளிம்பிலிருந்து ஒரு பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்.
அவரது கதை சீதாம்பேட்டாவில் வசிக்கும் அவரது தந்தை சின்னாயாவுடன் தொடங்கியது. இந்த கிராம புற பகுதிகளில் அதற்கே உரிய பிரச்சனைகள் இருந்தன. இந்த கிராம புற பகுதிகள் எந்த ஒரு அமைப்புக்கும் கீழ் வராததால் அங்கு வசிப்போர் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருந்தது.
எந்த ஒரு பாதுகாப்பு இல்லாமலும் மற்றும் அரசாங்க அமைப்பின் ஆதரவு இல்லாததாலும், தங்கள் நில ஆவணங்கள் காணாமல் போதல், நில அபகரிப்பு மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுத்தது. விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், பல குடியிருப்புவாசிகள் சூழ்நிலைகளுக்கு பலியாக நேர்ந்தது. கிராமவாசிகளின் இந்த அவலநிலையியை கண்ட திரு. சின்னையா, ஒரு மாற்றத்தை ஏற்படுத்திட உறுதி பூண்டார். அவர்களின் நலனுக்காக பணியாற்றத் தொடங்கி, 1996 இல் ஆதிவாசி விகாஸ் அறக்கட்டளையை உருவாக்கினார். இதனால் அவர் அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் இடையிலான விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் மக்களுக்கு உதவினார்.
இதற்கிடையில், பூதேவி 11 வயதில் வேறொரு கிராமத்தில் உள்ளவருக்கு மணம் முடிக்கப்பட்டார். தம்பதியருக்கு மூன்று மகள்களின் பிறப்பு அவரது கணவர் வீட்டில் சர்ச்சையானது. இறுதியில், பூதேவியின் கணவர் அவளையும் மகள்களையும் கைவிட்டார். 2000 ஆம் ஆண்டில் தனது மூன்று மகள்களுடன் தனது பெற்றோரின் வீட்டிற்கு திரும்பினார். அவள் தந்தை, இவர் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்பியதால், தினக்கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த பூதேவி இறுதியில் அவர் தந்தையின் அறக்கட்டளையில் ஒரு திறம்பட்ட பங்கேற்பாளராகவும், மற்றும் நிர்வாக உறுப்பினராகவும் ஆனார்.
2007 ஆம் ஆண்டில் திரு. சின்னாயா காலமானார், வேலையின் பொறுப்பு பூதேவியின் தோள்களில் விழுந்தது. தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெயரை, சின்னயா ஆதிவாசி விகாஸ் அறக்கட்டளை என்று மாற்றி, அதன் பணிகளில் தீவிர அக்கறை செலுத்தத் தொடங்கினார். "கிராமங்களின் பிரச்சினையை தூரத்திலிருந்து தீர்க்க முடியாது, எனவே அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு நான் சென்று கிராமங்களில் வாழ்ந்து வந்ததோடு மட்டுமல்லாமல் மூன்று மண்டலங்களில் உள்ள 62 கிராமங்களுக்கு பயணம் செய்தேன்."
சரியான சாலைகள் இல்லாதது முதல் குடிநீர், சுகாதார விழிப்புணர்வு மற்றும் கல்வி வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் கிடைப்பது வரை பல சிக்கல்களை அவர் அடையாளம் கண்டார். அவர் அரசாங்கத்தை அணுகத் தொடங்கினார் மற்றும் ஒருங்கிணைந்த பழங்குடி மேம்பாட்டு நிறுவனம் (ITDA) உதவியுடன், கிராமத்தில் உள்ள மக்களுக்கு இந்த விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்பத் தொடங்கினார். அரசாங்க ஆதரவு தேவைப்படும் ஒவ்வொரு பிரச்சினைக்கும், அவளுடைய கருத்துக்களைப் புரிந்துகொள்வதற்கும் செயல்படுத்துவதற்கும், அரசு அலுவலகங்களில் உட்கார்ந்து காத்திருப்பார், "பல அரசாங்க அலுவலகங்களைச் சுற்றிச் சென்று, அவர்களோடு உட்கார்ந்து அவர்களை என் கோரிக்கைகளை கேட்க வைப்பதற்கு எனக்கு மூன்று ஆண்டுகள் பிடித்தன." இது எளிதானது அல்ல, ஆனாலும் மக்கள் அவளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கத் தொடங்கினர், அதனால் விரைவில் சிக்கல்களுக்கான தீர்வுகள் வர ஆரம்பித்தன.
சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் தங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தன. மக்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சுகாதார பிரச்சினைகள் எவ்வாறு உள்ளன என்பதை அந்த முகாம்கள் வெளிக்கொண்டு வந்தன. உண்மையில், ஒரு கிராமத்தில், குழந்தைகள் கடுமையான குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள். சிக்கலை ஆழமாக ஆராயும்போது ஆரோக்கியமான உணவு இல்லை என்று தெரியவந்தது.
உள்ளூர் பிரச்சினைக்கு உள்ளூர் தீர்வு காண முயன்ற பூதேவி கிராமத்தின் பெரியவர்களுடன் கலந்துரையாடினார். வயதானவர்கள் தங்கள் நல்ல பழைய நாட்களைப் பற்றி பிரதிபலித்ததால் பேச்சுக்கள் மற்றும் விவாதங்கள் வந்தன. அவர்கள் எவ்வாறு அதிக ஆற்றல் மிக்க வாழ்க்கையை நடத்தினார்கள் என்பதையும், எந்தவொரு உடல்நலப் பிரச்சினையும் இல்லாமல் மூன்று முதல் நான்கு குழந்தைகளைப் பெற்றதையும் பற்றி அவர்கள் பேசினர். இன்றைய உணவில் காணப்படாத பழைய ஊட்டச்சத்து, சிறுதானியங்கள் இல்லாதது மற்றும் தற்போதைய தானியங்கள் கடந்த காலங்களில் உள்ளது போன்ற வலுவான வகைகளாக இல்லாதது ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட்டன.
பாரம்பரிய விதைகளை சேகரிப்பதற்கான ஒரு தீர்வு வந்தது. வெவ்வேறு வீடுகளுக்குச் சென்று, பூதேவியும் அவரது குழுவும் சில குடும்பங்கள் பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த விதைகளை சேகரிக்கத் தொடங்கின. பின்னர் இவை மற்றவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு விதைக்கப்பட்டன. வந்த அறுவடை மேலும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அவளுடைய சிறிய அமைதியான மற்றும் உறுதியான வழியில், ஒரு புரட்சி முளைக்கத் தொடங்கியது. இதை செயல்படுத்த பல தடைகளை கடக்க வேண்டியிருந்தது. முதலில் ஒரு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட வேண்டியிருந்தது, ஹைதராபாத்தில் உள்ள வாசன் (WASSAN) (நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு அமைப்பு) மற்றும் நபார்ட் (NABARD) போன்ற அமைப்புகள் இந்த செயல்முறையின் மூலம் தங்கள் ஆதரவை வழங்கின. இன்று பூதேவி விவசாயிகளிடமிருந்து 125 விதமான விதைகளை சேகரித்துள்ளார், மேலும் நெடு நாள் உயிரோட்டத்துடன் இருக்க இவை ஒவ்வொன்றும் பயிரிடப்படுகின்றன.
இது மட்டுமல்லாமல், அவளும் அவரது 25 உறுப்பினர்களும் அடங்கிய குழு, வன விளைபொருட்களை பதப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வது குறித்து கவனித்து வருகிறது, இது ஒரு நல்ல வருமான ஆதாரத்தை வழங்கும் அதே வேளையில் கிராம மக்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. இதனால் அவர்கள் புளி, மஞ்சள், தினை மற்றும் பிற உற்பத்திகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை உருவாக்குகிறார்கள். சிறு தானியங்கள் அவற்றின் முக்கிய மையப்பொருளாக இருப்பதால், செலவுகள், திட்டமிடல் மற்றும் மதிப்பு கூட்டல் போன்ற அம்சங்கள் வாஸனால் (WASSAN) கவனிக்கப்படுகின்றன. நீலமட்டள்ளி தினை பிஸ்கட் மற்றும் பல பொருட்கள் இப்பொழுது தயாரிக்கப்படுகின்றன. பூதேவியால் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட விரிவான சிறு தானிய புத்துயிர் திட்டம் (CRMP- The Comprehensive Revival of Millets Programme), இப்போது ஒரு தேசிய திட்டமாகவும் உள்ளது. 47 விடுதிகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கட்கள் வழங்கப்படுகிறது, மேலும் ஒவ்வொரு நாளும் 15000 பிஸ்கட்கள் நகரத்திற்கு அனுப்பப்படுகின்றன.
இவ்வளவு சாதித்த பிறகும் திரு.பூதேவி தனது விருதுகளினால் திருப்தியடையவில்லை. அவர்கள், பாரம்பரிய தானியங்களை எவ்வாறு பயிரிடுகிறார்கள் என்பதை ஆய்வு செய்ய 2013 இல் சீனா சென்றார். தனது அறிவுத் தளத்தை விரிவுபடுத்துவதற்காக, நெதர்லாந்திற்கும் சென்று அவர்களின் விவசாய உத்திகளைப் பற்றி அறிந்து கொண்டார். அவருக்கான பாதை இன்னும் நீண்டது, மேலும் செய்ய வேண்டியது அதிகம் என்பதை அறிந்தார். பழங்குடி மருத்துவத்தை புதுப்பிக்க முயற்சிப்பது, அதற்கான முறையான அங்கீகாரத்தை கொண்டு வருவது என்பது அவருக்கு ஒரு ஒரு கனவு. காப்பு காடுகளில் ஏராளமாகக் கிடைக்கும் மருதாணியில்லிருந்து பயன் பெறமுடியும் என்பது அவரின் கனவிற்கு செயல்வடிவம் நோக்கி அழைத்து சென்றது. 30 பெண்களுக்கு மெஹெண்டி (மருதாணி) கூம்புகள் மற்றும் முடி பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பதில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 15 பேர் ஏற்கனவே இந்த திட்டத்தின் மூலம் வருமானத்தை ஈட்டுகின்றனர் என்கிறார் பூதேவி. கருத்துக்களை விதையாக விதைத்து, பூதேவி தனது சமூகத்தில் உள்ள மக்களுக்கும் நம்பிக்கையை நட்டுள்ளார்.
அவரது முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் மோடி, "உங்கள் முயற்சிகளுக்கு நான் உங்களை வாழ்த்துகிறேன். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்காக (FPOs) இந்த ஆண்டு அரசாங்கம் மிகப் பெரிய பணியை மேற்கொண்டுள்ளது, அதன் நன்மைகளை நீங்கள் பெற வேண்டும்." என்று கூறியுள்ளார்