Welcome..! Join us to Develop your Humanity
கரீமா பூனியா - அந்தமானை குப்பையற்ற இடமாக்குவதற்காக பிரிட்டன் பல்கலைக்கழகப் பட்டத்தைத் துறந்த பெண்மணி
நமக்கு இவ்வுலகை இன்னமும் மேன்மையான பகுதியாக்க என்ன அர்ப்பணம் தேவை ப்படும்? தூக்கத்தை விட வேண்டுமா?அதிக நேரம் செலவிட வேண்டுமா? இல்லை மேலும் ஒரு பொறுப்பான நடவடிக்கை தேவையா? கரீமா பூனியாவிற்கு அவரது கனவான பலகலைக்கழகப் படிப்பையே விலையாகத் தர வேண்டியிருந்தது.
அவர் குப்பைகளற்ற அந்தமான் என்ற இயக்கத்தை ஆரம்பித்ததால் அவரது விருப்பமான, வளர்ச்சியைப் பற்றிய பட்ட மேற்படிப்பை, அதுவும் மதிப்பு மிக்க பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் பெறுவது பின்னணிக்குச் சென்று விட்டது.
"'2017ம் ஆண்டு அவர் ஸ்கூபா என்கிற நீருக்கடியில் குதித்து முக்குளிக்கும் பயிற்சிக்காக தன் பெற்றோருடன் அந்தமானில் உள்ள நீல் தீவுக்குச் சென்றபோது அந்த அழகான தீவு குப்பைகளால் மூடப் பட்டிருப்பதைப் பார்த்து வருத்தம் அடைந்தார். அவர் அந்தத் தீவுக்குப் போனபோது சொன்னார் "நான் குப்பைகளான புட்டிகள், மீன் வலைகள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றைக் கடலோரத்தில் பார்த்தேன். இவை கடலிலிருந்து அடித்துக் கொண்டு வரப்பட்டவை. நான் உல்லாஸத் தங்குமிடங்கள் , வீடுகள் ஆகியவற்றிலிருந்து எப்படி குப்பைகளை வெளியிடங்களில் எரிக்கிறார்கள் என்று பார்த்தேன். நான் ஆழ் நிலை நீச்சல் பயிற்சியின் போது பார்த்த அழகான கடல் பகுதிகளைப் பற்றி சிந்தித்தேன். எப்படி இவை குப்பைகளால் பாதிக்கப் பட்டு வருகின்றன என்று யோசித்தேன். உண்மை என்னவென்றால் திடக் கழிவு மேலாண்மை இல்லாததால் தீவுகள் இன்னமும் அழுக்காக மாறி வருகின்றன.”
தீவு ஏழு கிலோமீட்டர் நீளமாகவும் 4000 உள்ளூர் மக்களையும் 1500 பேர்கள் வெளியூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களையும் கொண்டதாகவும் இருக்கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் படி சுற்றுலாவாலும் வணிகமயமாக்கலாலும் இரண்டு ஆண்டுகளாக குப்பை கழிவு சேர்வது அதிகரித்திருக்கிறது. இத்துடன் தீவுகளிலிருந்து குப்பைகள் அகற்றுவதும் கடினமாக இருக்கிறது. இதற்கும் மேலாக தீவுகளில் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் ஏற்பாடும் இல்லை. எனவே குப்பைகள் எரிக்கப்பட்டு காற்றின் மாசைக் கூட்டுவதாகவோ, குப்பை அகழிகளில் கொட்டபபட்டு அசுத்தப்படுவதாகவோதான் இருக்கிறது.
"குப்பைகளைத் தரம் வாரியாகப் பிரித்தெடுப்பதென்பது பெரிய சவால். ஆனால் இது முக்கியமான ஒன்று. ஏனென்றால் உல்லாசக் குடியிருப்புகள்தான் கழிவுகளை உற்பத்தி செய்யும் இடம்.. இந்தச் சிறிய தீவில் 42 பதிவு பெற்ற உல்லாசக் குடியிருப்புகள் இருக்கின்றன. குப்பைகளைத் தரம் வாரியாகப் பிரித்தெடுக்காவிட்டால் நீல் தீவு மற்றும் பல சுற்றுலாத் தீவுகள் தங்கள் குப்பைகளாலேயே மூழ்கிவிடும்" என்றார்
கரீமா தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாலும் குப்பைகளின் கழிவுகள் எப்படித் தீவை அழிக்கிறது என்பதையே சிந்தித்துக் கொண்டிருந்தார். அதனால் பல நாட்கள் தூங்காமலும் இருந்தார். கழிவுகள் அகற்றும் மேலாண்மைத் துறையில் முன்பு பணி செய்தபடியால் அவர் சுற்றுபுறச் சூழலின் விளைவுகளையும் அறிந்திருந்தார். அதற்காக எதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.
இந்தச் சமயத்தில்தான் அவருக்கு இங்கிலாந்தில் உள்ள சஸ்ஸேக்ஸ் பல்கலைக் கழகத்திலிருந்து மேற்கல்விக்கு நுழைவு அனுமதி கிடைத்திருந்தது. அவர் பகிர்கிறார் "அது கடினமான முடிவெடுக்கும் தருணமாக இருந்தது. என்னால் விவரிக்க்கக் கூட முடியாது. ஆனால் நான் இந்தத் தீவில் மாற்றம் கொண்டுவர விழைந்தேன்"
அவர் முன்பு செய்த வேலைகளில் ஒன்றில் குப்பைகள் சேகரிப்போருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். அவர்களது சுற்றுச்சூழல் நிலையம் கரீமாவின் குப்பைகளை ஆரம்ப நிலையிலேயே குறைத்துவிட வேண்டுமென்று முயற்சிக்கும். அதற்கு ஒரு காரணம்,. குப்பை சேகரிப்போர் சமூகத்தின் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து வந்து குப்பைகளைக் கிளறி தங்கள் வாழ்விற்கும் ஆபத்து ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். "குப்பைகளை பிரித்தெடுக்குப்பதால் அவர்களது சுற்றுப் புறமும் குறைந்த நச்சுள்ளதாக மாறும்" என்றார் .
தொலபேசித் தொடர்பும், இணையதளத் தொடர்பும் குறைவான தீவில் தன் இயக்கமே கடினமாக இருந்தது. அவருக்கு அந்தத் தீவில் யாரும் அறிமுகமாகியிருக்கவில்லை. அவர் தனிமையில் இருந்தார். "அது தெரியாததை நோக்கிய பயணமாயிருந்தது. பின்னர் என்ன நடக்குமென்றே தெரியாதிருந்தது" என்று நினைவு கூர்ந்தார்.
அவரது முதல் படி நாகரிகமான வாழ்க்கையை நடத்துவதாயிருந்தது. பென்னி ஜேக்கப் என்ற எமரால்டு ஜெக்கோ என்னும் உல்லாச விடுதியின் மேலாளர் அவருக்கு இருப்பிடமும் உணவும் தந்தார். முகம்மது ஜாட்வெட் என்கிற போக்குவரத்து ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் முதலாளி ஒரு உள்ளூர் பத்திரிகையில் வேலை வாங்கித் தந்தார். அவரது அடிப்படை பணத்தேவை பூர்த்தியானதும் அவர் உள்ளூர் நகராட்சியுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு ஆய்வு மேற்கொண்டார். அவர் விவரிக்கிறார் "இந்தக் கணக்கெடுப்பின் நோக்கம் உள்ளூர் மக்கள் கழிவு குப்பைகளை எப்படிக் கையாளுகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காகத்தான். கிட்டத்தட்ட அனைவருமே குப்பைகளை அகற்றும் வண்டி வந்தால் தரம் வாரியாகப் பிரித்துத் தரத் தயாராயிருந்தார்கள். “
அடுத்த இரண்டு மாதங்களில் அவர் ஒவ்வொரு உல்லாச விடுதிக்கும், உள்ளூர் பஞ்சாயத்துக்கும் , நீர் மூழ்கி வாழ்வாதாரம் தேடும் மீனவ சமூத்துக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். " நிதி ஆதாரத்தை விட சரியான தன்னார்வத் தொண்டர்களைத் தேர்ந்தெடுப்பதே என் அக்கறையாயிருந்தது. நான் என்னைப் போலவே இந்த நோக்கத்தில் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிடும் நபர்களைப் பெற விரும்பினேன்".
டிசம்பர் 2018 ல் முதல் முறையாக கரீமா ஒரு சுத்தம் செய்யும், கழிவு மேலாண்மை, பாதுகாப்பு முனைப்பை ஏற்பாடு செய்தார். வினீத் ஜோஷி என்பவர் பாதுகாப்பு திட்டங்கள் பற்றிய முன் அனுபவம் என்ற பலம் பெற்றவர். பயிலரங்கில் அவருடன் இணைந்து தன்னார்வத் தொண்டர்களுக்கு வனவிலங்கு மற்றும் கடல் சார் வாழ்வை பற்றி பயிற்சி தந்தார். வினீத் ஜோஷி இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகவே இருந்தார். கிட்டத்தட்ட 33 சிறுவர் சிறுமியர் பங்கேற்றார்கள். 100 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டன. போர்ட்ப்ளேர் கொண்டு செல்லப் பட்டது. கப்பல் சேவை இயக்குனர் இவற்றை தினசரி நீல் தீவிலிருந்து போர்ட்ப்ளேர் செல்லும் பயணிகள் அரசுப் படகுகளுடன் அனுப்பும் ஏற்பாட்டைச் செய்தார். தன்னார்வத் தொண்டர்கள் 80 பேர்கள் கரீமாவின் "கச்ரேவாலே" திட்டத்துடன் இணைந்திருந்தார்கள். இவர்களில் அநேகர்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர் சமூகத்தைச் சேர்த்தவர்கள். " கடற்கரை துப்புரவுப் பணியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயணிகளையும் சேர்த்துக்கொண்டோம்.. நாங்கள் சுற்றுலாப் பயணிகளும் சேர்ந்தே சுத்தம் செய்யும் மாதிரித் திட்டத்தையே மேற்கொண்டோம். ஏனென்றால் விடுதியைச் சார்ந்த குப்பைகள் அவர்களால் தான் உண்டாகிறது. உல்லாச விடுதிகளும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. சுற்றுலாப் பயணிகளையும் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட உற்சாகமூட்டின." என்கிறார் கரீமா . “கச்ரேவாலே திட்டத்தின் கீழ் ஐந்து தூய்மை முனைப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 200 கிலோ குப்பைகள் கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டன. கடற்கரைத் துப்புரவுப் பணி என்பது மிகப்பெரிய பிரச்சனையின் ஒரு பகுதி மாத்திரமே” என்று நம்புகிறார் கரீமா.
"கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து ஆறு உல்லாச விடுதிகளை சந்தித்து நம்ப வைத்து அவர்களிடம் சேரும் குப்பைகளை காகிதம், பிளாஸ்டிக், டெட்ரா பேக், உலோகம் என்று பிரித்து போர்ட்ப்ளேரின் மறு சுழற்சி மையத்துக்கு அனுப்ப வைத்தார்கள். இது போன்ற நிகழ்வுகள் முன்பு எப்போதும் இருந்ததேயில்லை. நாம் உடனடியாக தீமை பயக்கும் நெகிழி பிளாஸ்டிக், கடல் சார் சூழலை பாதிக்கும், தெருக்களை நாசம் செய்யும் குப்பைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.நாங்கள் தொடர்ந்து கச்ரேவாலே திட்டத்தில் வேலை செய்து அந்தமானைக் குப்பைகளாற்றதாய் மாற்ற உறுதி பூண்டிருக்கிறோம். சாஹித் த்வீப் தீவில் நாம் ஏற்கனவே புட்டிகள், டப்பாக்கள், டெட்ரா பேக் ஆகியவற்றைப் பிரித்தெடுத்து சுற்றுச் சூழல ஆதரவான மறு சுழற்சி மையங்களுக்கு அனுப்பி விட்டோம்" என்கிறார் பீட்டர் ஜான் என்னும் டி.எஸ்.ஜி ஹோட்டல் மற்றும் விடுதியின் பொது மேலாளர்.
"நமது மிகப் பெரிய சவால் தீவுகளிலிருந்து தரை வழிப்பகுதிகளுக்கு அனுப்பிவைப்பதுதான். இந்த முயற்சி தொடர்ந்து விடுதிகள் குப்பைகளைத் தரம் பிரித்து அனுப்பிவைப்பார்கள் என்று உள்ளூர் மக்களை நம்ப வைப்பதிலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு துறையிலும் அடித்தளத்திலிருந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்பதுதான். எனவே பார்த்தவுடன் பளிச்சென்று தெரியும் மாற்றம் உண்டாகச் சில காலம் பிடிக்கும்" என்கிறார் கரீமா
தன்னார்வத் தொண்டர்கள் குறைபாடு இன்னொரு பிரச்சனை . அவர் விவரிக்கிறார் " சுற்றுலாப் பயணிகள் தாற்காலிகமானவர்கள். அதனால் எங்கள் திட்டம் சிதைந்து போக விரும்பவில்லை. எனவே உள்ளூர் மக்களின் நம்பிக்கையையும் பெற விரும்புகிறோம். இது நெடு தூர பயணம் . ஏற்கனவே தொடங்கி விட்டோம். வெளிச்சம் தரும் ஆறுதல் என்னவென்றால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட வீடுகளிலிருந்து விடுதியின் சொந்தக் காரர்களிடமிருந்தும் மிருந்த ஆக்கபூர்வமான பதிலும் ஒத்துழைப்பும் கிடைத்திருக்கிறது. அவர்களும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்புகிறார்கள்"
கரிமா பூனியாவின் இந்த தன்னலம் கருதாத சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணியால் விரைவில் அந்தமான் தீவுகள் தங்களின் இழந்த பொலிவை திரும்ப பெறும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது