Welcome..! Join us to Develop your Humanity
சுமர் வர்மா - ஆழ்கடல் உலகின் அதிசயங்களை மக்களுக்கு புகைப்படமாகவும் காணொளியாகவும் வழங்கும் சாகச கலைஞர்-சுற்றுசூழல் ஆர்வலர்
சுமர் வர்மாவின் வாழ்க்கை, லட்சத்தீவில் ஒரு டைவிங் பள்ளியை நடத்துவதில் இருந்து சுறாக்கள் மற்றும் மந்தா கதிர்களுடன் நீந்துவது வரை, பல சாகசங்களை கொண்டது. அதற்கு அவர் நீருக்கடியில் எடுத்த படங்களே சாட்சி.
சிதறிய மஞ்சள்-வெள்ளை சூரிய ஒளியால் ஆன நில உலகை மட்டுமே பார்த்து சலித்துப்போன சுமர் வர்மா நீருக்கடியில் நீல நிறத்தின் பல நிழல்களை (shades) கண்டு பிரமித்தார். உலகில் பல நாடுகளின் ஆழ்கடலில் மூழ்கி படமெடுத்தினார். இச்சாகசம் விரைவில் அவருக்கு பழகிப்போன ஒன்றானது.
அவர் 1997 முதல் டைவிங் செய்து கொண்டுயிருக்கிறார், அவரது ஒவ்வொரு அனுபவமும் சஜகமான ஒன்றுதான் ஆனாலும் ஒவ்வொன்றும் வித்தியாசமானது, தனித்துவமானது. 2014 ஆண்டில் அவர் மேற்கொண்ட dive வும் இதே போன்று தான் இருந்தது.
நீருக்கடியில் சென்றடையும்போது சுமர் எப்போதும் ஆழ்ந்த அமைதியை உணர்ந்தாலும், ஈக்வடாரில் இந்த டைவ் ஒரு சிலிர்ப்பை தந்தது . தண்ணீரில் சுறாக்கள் இருந்தன அவை அவரிடமிருந்து வெகு தொலைவில் கடலில் ஆழமான பகுதியில் இல்லை. அவரால் அவற்றை எளிதாக பார்க்க முடிந்தது, ஒன்று அல்ல, இரண்டல்ல, நூற்றுக்கணக்கான சுறாக்களை கண்டார்.
"நான் ஆயிரக்கணக்கான முறை டைவ் செய்திருக்கிறேன், ஆனால் இந்த குறிப்பிட்ட அனுபவம் மிகவும் மறக்க முடியாத என் இதயத்திற்கு நெருக்கமான அனுபவமாகும்" என்றார் இந்தியாவின் முதல் நீருக்கடியில் படம் எடுக்கும் புகைப்படக் கலைஞரும் ஒளிப்பதிவாளருமான சுமர்.
மும்பையைச் சேர்ந்த சுமர், 1997ல் ஒரு உல்லாச பயணத்திற்காக லட்சத்தீவுக்குச் சென்றார். அங்கே, அவர் தனது வாழ்வின் லட்சியத்தை கண்டுகொண்டார், அன்று முதல் அவர் தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதிலேயே முழுமையாக ஈடுபடுகிறார்
“நான் தீவுகளை மட்டும் சுற்றிப்பார்க்கச்சென்ற ஒரு நகரவாசி, ஆனால் எதிர்பாராதவிதமாக ஆழ்கடல் டைவ் மூலம் இந்த கிரகத்தின் அதிசய அழகைக்கண்டேன், அவை என் கண்களைத் திறந்தன. நான் தீவுகளை அடைந்தவுடனேயே இந்த அனுபவங்கள் தொடங்கியது, டைவ்வின் போது, அழகான பவளப்பாறைகள் மற்றும் மீன்களை கண்டு மெய்சிலிர்த்துபோனேன். என் உடல் மிதக்கும் போது என் எடை குறைவானதை உணர்ந்தேன். இது கிட்டத்தட்ட விண்வெளியில் இருப்பது போல இருந்தது! ” என்றார் சுமர்.
ஸ்கூபா டைவிங்கில் அன்றுமுதல் அவர் கட்டுண்டு போனார். எல்லோரையும் போல் அவர் தனது அனுபவங்களைய தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். இருப்பினும், அந்த நேரத்தில் நீருக்கடியில் வீடியோக்களையோ புகைப்படங்களையோ எடுக்கும் உபகரணங்கள் அவரிடம் இல்லை. இருந்துஇருந்தால் அந்த கண்கொள்ளா காட்சிகளை படமாக்கி காட்டியிருப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் அவர் அனுபவித்து வரும் இந்த அற்புதமான சாம்ராஜ்யத்தின் புகைப்படங்களை அவரது அன்புக்குரியவர்கள் பார்க்க ஆசைப்பட்ட போது, சுமர் வீடியோக்களைப் பிடிக்க உதவும் ஒரு அடிப்படை கேமராவை வாங்கினார் . இது அவரது இரண்டு பொழுதுபோக்குகளான வனவிலங்கு புகைப்படம் எடுத்தல் / ஒளிப்பதிவு மற்றும் ஸ்கூபா டைவிங் ஆகியவற்றை இணைத்தது!
ஆனால் இத்தொழில் கவர்ச்சியாக இருந்ததேயன்றி வாய்ப்புகள் நிறைந்ததாக இல்லை.
மிக சமீப காலமாகவே இத்தொழில் லாபகரமாக மாறத் தொடங்கியது. எனக்கு தெரிந்த ஒரே தொழில் இதுதான் நான் இருபது ஆண்டுகளாக போராடியபின், இப்போது தான் ஓரளவு தாக்குப்பிடிக்க முடிகிறது. முதலாவதாக, உபகரணங்கள் வாங்க பல லட்சம் செலவாகிறது, இது ஒரு பெரிய சுமை . மிக முக்கியமாக, நான் இன்னும் கமிஷன் அல்லது வாடிகளையாளர்களைப் பெறவில்லை என்பதால், பயணத்திற்கும் டைவ்ஸுக்கும் நான் முதல் பணம் போட வேண்டியுள்ளது ” என்றார் , 44 வயதான சுமர்.
இங்குள்ள ஒரு ஹோட்டல் மற்றும் வனவிலங்கு ஆர்வலர் ஒருவரும் அவரது படங்களை வாங்குவதன் மூலம் உதவுகின்றனர். ஆனால் இந்த பொருளாதார பின்னடைவு சுமரை கடல்களில் அற்புதமான புகைப்படங்களை எடுப்பதை தடுக்கக்கவில்லை.
இது மனித நடவடிக்கைகளால் மாற்றமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ள ஒரு அழகான கிரகம் என்று அவர் குறிப்பிட்டார்.ஒவ்வொரு நாளும் கடல்களில் கொட்டப்படும் நமது பிளாஸ்டிக், ரசாயனங்கள் மற்றும் அமிலங்களைக் கொண்டு, நாம் எதைக் கொல்கிறோம் என்பதை படம் பிடித்துக் காட்ட சுமர் விரும்பினார்.
இதைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, புகைப்படக் கலைஞர் கூறுகையில் “நான் எவ்வளவு அதிகமான படங்களை பகிர்ந்து கொள்கிறேனோ, அவ்வளவு அதிகமான மக்கள் அற்புதமான உலகத்தைப் பற்றி அறிந்துகொள்கிறார்கள். ஒரு படம் அதைப் பார்க்கும் அனைவரையும் மாற்ற முடியாது என்பதை நான் அறிவேன், ஆனால் நம்பிக்கை இருக்கிறது. கடல் வனவிலங்குகளைப் பார்க்க என்னைப் போன்று வாய்ப்பு இல்லாதவர்களுக்கு நான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். எங்களால் மக்களை மாற்ற முடியாது, ஆனால் அவர்களின் இதயங்களில் ஒரு தாக்கத்தை ஏற்கடுத்த முடியும் . அதுவே எனது நோக்கம். ” என்றார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அயராது உழைத்ததன் விளைவாக இன்று சுமேரை இந்தியாவின் முதல் நீருக்கடியில் புகைப்படக் கலைஞர் / ஒளிப்பதிவாளர் என்று அழைக்கலாம்.
தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு நீருக்கடியில் உலகின் அதிசயங்களை காண்பிக்கும் , அதே நேரம் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்கடுத்த முடியும் என்று அவர் நம்புகிறார்.