Welcome..! Join us to Develop your Humanity
சந்தோஷ் – சக்திவாய்ந்த ஊடகமான மீம்கள் பயன்படுத்தி ஆக்கபூர்வமாக இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு பரப்புகிறார்
மீம்ஸ் கள் நம்மை சுற்றி உள்ளன மற்றும் அவைகளில் பெரும்பாலானவை வேடிக்கையானது. நாம் ஒரு மீம்ஸ் பார்த்து அதை விரைவில் தங்கள் நண்பர்களுக்கு பகிர தயங்க மாட்டோம் . சமூக வலைதளங்களில் அதிகம் வாசிக்கும் பெரும்பாலானவர்கள் மீம் கலாச்சாரத்தின் வளர்ச்சியால் வாசகர்களின் சராசரி கவனம் குறைந்து வருகிறது. எனவே எப்படி ஒரு சமூக ஊடக பயனரின் கவனத்தை முக்கியமான தகவல் பதிவுகளில் ஈர்ப்பது ? விவசாயத்தைப்பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மீம்ஸ்களை பயன்படுத்தி, தமிழக இளைஞர் ஒருவர், தனது முகநூல் (பேஸ்புக்) பக்கம் மூலம் தீர்வு கண்டு வருகிறார். அவரது இந்த புதிய முறை நிச்சயமாக வேலை செய்கிறது.
நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றால், 'விவசாயத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்' என்ற பக்கத்தை முகநூலில் பார்த்திருக்கலாம். திருவாரூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை ப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் பி.எஸ்சி., படித்த 27 வயது சந்தோஷ் என்பவர் தொடங்கினார். பல்வேறு மீம்ஸ்கள் மூலம் விவசாயத்தை பற்றி மக்களுக்கு இந்த பதிவுகள் கற்றுக் கொடுக்கிறது. ஒரு வித்தியாசம் இருக்கிறது; வெறும் நகைச்சுவை துணுக்குகளுக்கு பதிலாக, இந்த மீம்களில் அஜித், ஜோதிகா, சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த் போன்ற பிரபல முகங்கள் சமூக பிரச்சனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி, உணவில் ரசாயனங்கள் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
விவசாயத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று அழைக்கப்படும் சந்தோஷ் நடத்தும் பேஸ்புக் பக்கம் தினசரி 97,000 க்கும் மேற்பட்ட விருப்பங்கள் மற்றும் 99,000 க்கும் மேற்பட்ட மக்கள் அதை பின் தொடர்கின்றனர். இயற்கை விவசாயம் மற்றும் விவசாயம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கேள்விகள் கேட்கப்படுகின்றன. சராசரியாக, அவரது பதிவுகள் 1,000 க்கும் மேற்பட்ட விருப்பங்கள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்டு பகிரப்படுகிறது . சந்தோஷ் பகலில் தனது கொல்லைப்புறத்து பண்ணையில் விவசாயத்தில் ஈடுபடுக்கிறார் இரவில் அவர் நாடு முழுவதும் பல்வேறு மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ..
விவசாயத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்ற முகநூல் பக்கம் மீம்ஸ் பயன்படுத்தி நிலையான விவசாயம் , சிறந்த பயிர் நுட்பம் பற்றி பகிர்வதோடு மட்டும் இல்லாமல் ,தவறான எண்ணங்களை நீக்குகிறது, இவை அனைத்தும் பயனாளர்களை மகிழ்வித்து நகைச்ச்சுவையுடன் செய்கிறார் . "நாங்கள் பெறும் பாராட்டுகளை விட, நம் முகநூல் பக்கத்தில் நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன . மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு த்தீர்வுகளைக் கேட்கிறார்கள், மேலும் அவற்றை நாங்கள் நேரடியாகவும் அணுகுகிறோம்," என்று அவர் மேலும் கூறினார். பயனாளர்கள் அவரது ஆலோசனையினால் தாங்கள் பெற்ற முன்னேற்றம் பற்றி சொல்ல மீண்டும் வருகின்றனர் .
படிக்கும் போது, அடிக்கடி சில விவசாய நடைமுறைகள் பற்றி முகநூலில் கேட்கப்பட்டது, அப்போது அவருக்கு சமூக ஊடக பயன்பாடு புரிந்தது .ஒரு சிறிய சமூகத்திற்கு அவரால் உதவ முடிந்தஅதே நேரத்தில், சமூகத்தின் பெரும் பகுதிமக்கள் அத்தகைய தகவல்களை பரப்புவதிலிருந்து பயனடைவார்கள் என்பதை அவரும் அவரது சகாக்களும் உணர்ந்தனர். மீம்ஸ்களின் ஈர்ப்பு மற்றும் அதன் பிரபலம் , சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் பிரகாஷ் தங்கவேல், மாஹிம் ஆண்டனி ஆகிய இருவரும் 'விவசாயத்தை க்கற்றுக்கொள்ளுங்கள்' என்ற பக்கத்தை முகநூலில் உருவாக்கதூண்டியது.இதன் நோக்கம் நிலையான விவசாயத்தை ஊக்குவிப்பதாகும். ஒரு மாதத்தில் இந்தப் பக்கம் 70,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. விவசாயம் தொடர்பான கருத்து பரிமாற்றத்துக்கு ஒரு பொது மன்றமாகி துடிப்புடன் செயல்பட்டது
"சாதாரண உரை இடுகைகளை (text posts) விட மக்கள் மீம்ஸை அதிகம் பகிர்கின்றனர் . ஆனால் சமூகத்தை கேலி செய்யும் பல மீம்ஸைப் பார்ப்பது வெறுப்பாக இருந்தது; மீம்ஸை சிறப்பான வழியில் ஏன் பயன்படுத்த கூடாது என இது என்னைத் தூண்டின. சமூக ரீதியாக பொருத்தமான மற்றும் பயனுள்ள செய்திகளை அனுப்ப இந்த சக்திவாய்ந்த ஊடகத்தை ஏன் பயன்படுத்தக்கூடாது,என சிந்தித்தேன் ”என்று அவர் கூறுகிறார்
தன்னைப் தொடர்பவர்களைப் பற்றி சந்தோஷிடம் கேட்டபோது, "எனக்கு செய்தி அனுப்பும் 70 சதவீத மக்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், ஆனால் பெங்களூரு மற்றும் கொல்கத்தாவிலிருந்து ஏராளமான மக்கள் என்னுடன் மற்ற நகரங்களை சேர்ந்தவர்களும் இணைகிறார்கள்." இயற்கை விவசாய ( ஆர்கானிக்) பண்ணைகளில் உற்பத்தியை அதிகரிக்க உதவிக்குறிப்புகளைக் கேட்கும் நபர்களிடமிருந்து தினமும் 150-200 செய்திகளுடன் படங்களுடன் அவர் பெறுகிறார்.
இயற்கை வேளாண்மையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவரிடம் ஒவ்வொரு நாளும் கேட்கப்பட்ட 150-200 க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சதோஷ் பதிலளிப்பார்.
தனது பக்கத்தின் பிரபலமடைந்து வருவதால், சந்தோஷ் மற்ற நகரங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து வரும் செய்திகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கும் பணியை எதிர்கொள்கிறார், இது உண்மையில் அவரது பலம் அல்ல. ஆனால் அவர் தனது நண்பர்களிடமிருந்தும், அவர் தினமும் சந்திக்கும் மக்களிடமிருந்தும் ஒரு சிறிய உதவியைப் பெறுகிறார், அவர்கள் தமிழ் அல்லாத பின்தொடர்பவர்களுடன் உரையாடக்கூடிய வகையில் அவருக்கு போதுமான ஆங்கிலத்தைக் கற்பிப்பதற்காக தன்னார்வமாக முன்வந்துள்ளனர் . 27 வயதான திருவாரூர் சிறுவனுக்கு தற்போது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆங்கிலம் கற்க உதவி செய்கிறது , எனவே அவரைப் பின்பற்றுபவர்கள் முன்வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க முடிகிறது .
பக்கத்தைத் தொடங்க வேளாண் வல்லுநரைத் தூண்டியது எது என்று கேட்டபோது, சந்தோஷ் கூறுகிறார், “எனது மாவட்டத்தில் உள்ள அனைவரும் விவசாயத்தில் ரசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள், அவை ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன, ஆனால் அவர்கள் தங்கள் வழிகளை மாற்ற விரும்பவில்லை. இயற்கை வேளாண்மையின் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன், இதனால் இந்தியாவில் விவசாயம் செய்யப்படும் முறையை மாற்ற முடியும்
சந்தோஷ் ஆழ்வார் மீம்ஸ் என்ற மற்றொரு பிரபலமான பேஸ்புக் குழுவையும் நடத்தி வருகிறார், இது இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாய நுட்பங்களை ஊக்குவிக்கிறது. "இது நம் முன்னோர்கள் எவ்வாறு நிலத்தை உழுது , நல்ல விளைச்சலை அடைந்த முறை மற்றும் இது ரசாயனங்கள் இல்லாமல் மண்ணின் தரத்தை பராமரிக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
சந்தோஷின் நோக்கம் ஒரு இயற்கை வேளாண்மை பண்ணையைத் தொடங்குவதாகும், இதன் மூலம் வணிக ரீதியான நம்பகத்தன்மையை விட, முறையின் செயல்திறனையும் நிரூபிக்க விரும்புகிறார். “நான் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவன். என் தாத்தா மற்றும் மாமாக்கள் இன்னும் விவசாயம் செய்கிறார்கள், ஆனால் அவர்கள் கூட ரசாயன முறைகளைப் பின்பற்றுகிறார்கள். இயற்கை வேளாண்மையின் நன்மைகள் பற்றி நான் அவர்களிடம் கூறியுள்ளேன், ஆனால் அவர்கள் ரசாயன உள்ளீடுகளுக்குப் பழகி விட்டதால் அவற்றின் முறைகளை மாற்ற மாட்டார்கள். இயற்கை வேளாண்மையின் செயல்திறனை என்னால் நிரூபிக்க முடியும் வரை, விஷயங்கள் மாறாது. அதனால்தான் பண்ணையைத் தொடங்க நாங்கள் இப்போது நிலத்தைத் தேடுகிறோம்”, என்று சந்தோஷ் விவரிக்கிறார்.