Welcome..! Join us to Develop your Humanity
சாஸ்வதி சிங் – அன்று, மாற்றுத்திறனாளியான அவரது மகனுக்கு 42 கலாசாலைகள், சேர்க்கை அனுமதி தர மறுத்தது. இன்று அவர் , இந்தியாவின் முதல் ‘மதியிறுக்க குறைபாட்டு’ (Autism) சீரமைப்புகுழு உறைவிடத்தை (Group Home) நடத்திக் கொண்டிருக்கிறார்!
சாஸ்வதியின் தனிப்பட்ட வாழ்க்கையின் தொடர் நிகழ்வுகள் மிகவும் பயங்கரமானது! அவை நம்மில் பெரும்பாலோர்க்கு நிகழ்ந்திருந்தால், நாம் பெட்டிப் பாம்பாய் ஒடுங்கிபோய் இருந்திருப்போம்! பதினேழு வயதில், விதிவசத்தால் கல்கத்தாவிலுள்ள அவர்களது வீட்டில் ஒரு சங்கட சூழ்நிலையால் தந்தை மரணித்தார்; அந்நிகழ்வைத் தொடர்ந்து சாஸ்வதியின் தாயாரும் மனநிலை பாதிப்புக்கு உள்ளானார்; பின் அவரது உடன்பிறப்புகளுக்கும் மனமுடைபட்டு அவர்கள் வாழ்கை நிலை பாதிபடைந்தது. இப்பேரிடர்களிலும் ஒரு அசாத்ய தைரியத்தைத் திரட்டிக் கொண்டு, தனது முழு குடும்பத்திற்கும் துயர் தாங்கும் தூணாக மாறி, குடும்பத்தை முன்னடத்திச் சென்றார்.
நுண்ணுயிரியல் துறையில் நிபுணத்துவம் பெற, அவர் தனது உயர் கல்வி படிப்பை முடித்தார். கல்கத்தாவில் உள்ள பல்வேறு பள்ளிகளில் உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு, அவர் ஹரியானாவைச் சேர்ந்த ஒருவரை மணந்தார். அவரது முதல் குழந்தை (ப்ரகார்), கருத்தரிக்கும் வரை அனைத்தும் சரியாக நடப்பதாகத் தான் தோன்றியது. அவரின் பிரசவத்திற்கு ஒரு நாள் முன்பிலிருந்து தான் சிக்கல்கள் எழும்பின. பிறக்கும் போது, குழந்தை அவரிடமிருந்து பிரிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் அவதிப்பட்டான் குழந்தை- ப்ரகார். பிறந்த 15 நாள்கள் - தொடர்ந்து 24 மணி நேரமும், வலிப்பு நோயின் கடுமையான அத்தியாயங்களை குழந்தை அனுபவித்தான்.
இதிலிருந்து மீண்ட குழந்தை-ப்ரகார், அடுத்த சில ஆண்டுகளை ஒரு ‘நரம்பியல் குறைபாடுடைய’ குழந்தையாக கழித்தார். பின் அவர் ஒரு வழக்கமான பள்ளியில் தான் பயின்றார், ‘அதீத இயல்பு தன்மை’ (Hyperactive syndrome) கொண்டிருந்தாலும் பேச்சுத் திறனை வளர்த்துக் கொண்டார். நான்கு வயதில் அவருக்கு ஓருமுறை, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தொடர்ந்து, ஒரு மாதத்திற்குள் இரண்டு பெரிய! வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். இந்நிகழ்வுகள் அவரது மூளைக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தி தனது பெயரைக் கூட மறக்கும் நிலைக்கு ஆளானார். தாயார்-சாஸ்வதி இதுகண்டு பெருந்துயர்க்கு ஆளானார். நாட்கள் சில அழுகை, புலம்பல், தன்னைதானே நொந்துகொள்ளுதல்களில் சென்றது. ஒருசிலர் அவர் நிலையில் இருந்திருந்தால் வாழ்வையே வேற்றுதிதிருப்பர்.
ஆனால் சாஸ்வதி யதார்த்தத்தை ஏற்க முடிவு செய்தார். அவர் ஒரு புகழ்பெற்ற தில்லி மாநகர் பள்ளியில் மூத்த உயிரியல் ஆசிரியராக இருந்த வேலையை ராஜினாமா செய்தார், மேலும் தனது மகனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழத் தேவையான அனைத்தையும் தருவதாக உறுதியளித்தார். அவர் மகன்-ப்ரகாருடன் வெவ்வேறு பள்ளிகளைச் சுற்றி வந்தார், ஆனால் 42 பள்ளிகள் அவரது ‘அதீத இயல்பு’ (Hyperactive) மற்றும் ‘கடுமையான நடத்தை’ (behavioral issues) பிரச்சினைகள் காரணமாக அவரை நிராகரித்தன.
சாஸ்வதி தனது மகள் ப்ரேர்ணாவுக்கு தாயானபோது, மகன்-ப்ரகார் அவர் அப்போது படித்துக்கொண்டிருந்த பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். விரும்பத்தகாத சம்பவம் ப்ரகார் மற்றும் அவரைப் போன்ற பலரின் பொறுப்பை ஏற்கும் தீர்மானத்தை பலப்படுத்தியது. மேற்கு தில்லியில் தனது மூன்றாவது மாடி பிளாட்டில் தனது சொந்த - சிறப்புப் பள்ளியை 1995 ஜூலை 1 ஆம் தேதி ‘பிரேர்னா சிறப்புப் பள்ளி’ என்ற பெயரில் தொடங்கினார்.
மூன்று ஆண்டுகள் – சாஸ்வதி தனது குடியிருப்பின் எல்லைப்புறத்தில் பள்ளியை பராமரிக்க போராடினார், பள்ளி சேர்க்கைக்கான ஒரு பெரிய காத்திருப்பு பட்டியல் உருவாகி இருந்தது. பின்னர் தில்லி மாநகரின் லெப்டினன்ட் கவர்னரின் அப்போதைய சிறப்பு செயலாளராக இருந்த திருமதி.கிரண் பேடியை அணுகினார். திருமதி.பேடி, திலக்நகரில் உள்ள சமூக மையத்தில் அமைப்புக்கு ஒரு இடத்தை ஒதுக்கினார்.
குறைந்த வருமானம் மற்றும் குறைந்த விழிப்புணர்வு சூழல்களில் உள்ள (வசதியற்றவர்க்கு இலவசமாக) ‘புத்தி குறைபாடுள்ள’ பல மாணவர்களை மையமாக வைத்து பள்ளி செயல்படுகிறது, பெரும்பாலும் கல்லூரி மாணவர்களை உணர்திறனுக்காக (sensitization) ஈடுபடுத்தப்படுகிறார்கள். சாஸ்வதி, இப்பிள்ளைகளின் தாய்மார்களுக்குகான பொறுப்பு மற்றும் அவரவர் பிள்ளைகளை கையாளும் திறன் அளிப்பதில் கவனம் செலுத்தினார்.
“குழந்தைக்கு முதன்மை பராமரிப்பாளர் தாய். சிறப்பு பள்ளிப்படிப்பால் மட்டுமே நாம் இவ்வளவு செய்ய முடியும், தாய்மார்கள் பொறுப்பேற்கும்போதுதான் உண்மையான மாற்றம் ஏற்பட முடியும். பள்ளியில் செய்யப்படுவது வீட்டில் மீண்டும் உறுதிப்படுத்தப்படும்போது மட்டுமே நிலைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது,…”என்று அவர் வலியுறுத்துகிறார்.
ஆரம்ப சேர்க்கை நேரத்தில், தாய்மார்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயிற்சி பெறவும், பள்ளியின் செயல்பாட்டிற்கு உதவவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். தவறாமல் கலந்துகொண்டவர்களுக்கு மையத்தில் வேலை வழங்கப்பட்டது, இது மற்றவர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. சில ஆண்டுகளில், இந்த தாய்மார்களால் இந்த மையம் சுயமாக இயங்கியது. சாஸ்வதி இந்த பகுதியில் தொடர்ந்து பணியாற்றினார், ஆனால் விரைவில் எதிர்காலம் குறித்த கேள்விகள் அவரை நெறுக்கியது. சிறப்பு பள்ளிப்படிப்பை விட ‘மன இறுக்கம்’ (autism) அதிகம் என்று அவர் உணர்ந்தார்.
இதற்கிடையில், டெல்லியில் அவர் பணிபுரிந்ததற்குப் பாராட்டுகள் கிடைத்தன, இதன் காரணமாக அப்போதைய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக இருந்த திருமதி. மேனகா காந்தி, ஜப்பானில் உள்ள பல்வேறு நலன்புரி அமைப்புகளுக்குச் செல்ல அவரைத் தேர்ந்தெடுத்தார். PARIVAAR - National Parents Organisations (NCPO). பின்னர் ‘சிறப்பு ஒலிம்பிக்கிற்காக’ ஆசிய-பசிபிக் நாட்டின் 13 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக 2001 இல் வாஷிங்டன் டி.சி.க்கு விஜயம் செய்தார்.
அதே ஆண்டில், மாசசூசெட்ஸில் உள்ள Option Instituteல் ‘Son –Rise Program’ல் சேர்ந்தார், அங்கு ‘ஆட்டிஸத்தில்’ மிக முக்கியமான ‘Gluten Free and Casein Free Diet (GFCF)’ ( அதாவது – புரத பசை மற்றும் பால் புரதம் இல்லாத உணவு) பற்றி முதலில் அறிந்து கொண்டார், இது அவரது பிற்கால பணிகளின் முக்கிய அம்சமாகும்.
புதிய நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் திகழ்ந்த அவர், மகன்-ப்ரகார் 17 வயதை எட்டியபோது ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க முடிவு செய்தார். இது இந்தியாவில் ‘மதியிறுக்கத்திற்கான’ (Autism) முதல் சீரமைப்புகுழு உறைவிடமாகவும் (Group Home), மேலும் இது 2005 ஆம் ஆண்டில் தெஹராதூனில் ‘Inspiration Centre – Dehradun’ தொடங்கப்பட்டது. இவ்வகை இளைஞர்களின் சுயாதீனமான வாழ்வாதாரத்தின் இறுதி குறிக்கோளுடன் – ‘நடத்தை சிகிச்சை’ மற்றும் GFCF உணவுமுறை இரண்டையும் பயன்படுத்துவதன் மூலம் ‘மதியிறுக்கம்’(Autism) குறித்த ஒரு முழுமையான அணுகுமுறையை வழங்குவதே இந்த குழு இல்லத்தின் மையகருவாக இருக்கிறது.
இன்று அவரது 32 வயது மகன், மற்றும் அவரது மகள், ஒவ்வொரு அடியிலும் அவரை ஆதரிக்கும் வலுவான நபர்களாக வளர்ந்துள்ளனர். இந்த இருவருடனும், அவர் உதவி செய்த ஆயிரக்கணக்கான குழந்தைகளுடனும், சாஸ்வதியின் வாழ்க்கை - தாய்மைக்கான ஒரு இடமாகும்!
சாஸ்வதி ஒரு வீரப் பெண்மணி, தனது வாழ்க்கையின் 25 ஆண்டுகளை ‘ஆட்டிசத்தின்’ குறைபாடுள்ளவற்காக தன்னை அர்ப்பணித்தவர், 2,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சுயவளர்ச்சி குறைபாடுள்ள இளைஞர்களுடனும் பணியாற்றினார். கூடுதலாக, விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டங்களை பரப்புவதன் மூலம், அவர் 15,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நம்பிக்கை நக்ஷதிரமாக விளங்குகிறார். மேலும், அவர் கடந்துவந்த பாதை நமக்கு பாடமாக உள்ளது!