Welcome..! Join us to Develop your Humanity
டாக்டர் க்ஷமா மேத்ரே - விரிவான ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டுக்காக 35 ஆண்டுகளுக்கு முன்பு, தனது இலாபகரமான மருத்துவ பயிற்சியை கைவிட்டார்
தங்கள் உண்மையான அழைப்பைப் பின்பற்றுவதற்கும் அதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பதற்கும் போதுமான உந்துதல் அனைவருக்கும் இருப்பது இல்லை. தைரியமான பெண்ணான டாக்டர் க்ஷமா மேத்ரே 1985 ஆம் ஆண்டில், அதிர்ஷ்ட வசமாக இவ்வாறு ஓர் அழைப்பு கிடைக்கபெற்றார், அன்றிலிருந்து, அதற்காக ஒரு உறுதிப்பாட்டை இதற்காக ஏற்றார். தான் கொண்ட அந்த உறுதிப்பாட்டில் இருந்து அவர் என்றும் பின்வாங்கவே இல்லை. அவரது இதயத்தின் அந்த அழைப்பை பின்பற்றி, புது தில்லியில் தனது இலாபகரமான குழந்தை மருத்துவ பயிற்சியைக் கைவிட்டு, கிராமப்புற மேம்பாட்டுக்கான ஒரு புதிய பணியைத் தொடங்கினார். சின்மயா தபோவன் அறக்கட்டளையின் கீழ் சுவாமி சின்மயானந்தாவால் நிறுவப்பட்ட சின்மயா கிராம ஆரம்ப சுகாதார மற்றும் பயிற்சி மையத்தில் ((CRPHC&TC) சேர இமாச்சல் பிரதேசத்தில் காங்க்ரா மாவட்டம் சித்பாரிக்கு டாக்டர் க்ஷமா மேத்ரே சென்றார். CRPHC&TC யில் 1985 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் ஒரு திட்ட மருத்துவராக சேர்ந்தார், 1987 இல் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
காங்க்ரா மாவட்டத்தின் அரசாங்கத்தால் எட்டப்படாத தொலைதூர கிராமப்புறங்களில் உள்ள சுகாதார துணை மையங்களில் தொடங்கி, எம்.பி.டபிள்யூ (எஃப்) (பல்நோக்கு தொழிலாளர்கள்-பெண்கள்) வகுப்புகள் மற்றும் களத்தில் பயிற்சியளிப்பதன் மூலம் டாக்டர் மேத்ரே, கிராமத்தின் யதார்த்த நிலையில் மக்களின் வாழ்விற்கு இன்னும் தீவிரமான தலையீடு தேவைப்படுகிறது என்பதனையும் அந்த உபாயம் சுய உதவி என்பதனையும் தெளிவாகத் தெரிந்து கொண்டார். எனவே அவரது திறமையான தலைமையின் கீழ், மஹிலா மண்டல்கள், ஆல்கஹால் துஷ்பிரயோக விழிப்புணர்வு மற்றும் ஆல்கஹால் திட்டத்தின் மேலாண்மை, யுவக் மண்டல்கள், யுவதி சமூகங்கள் மற்றும் பால்வாடிவாடிகள் மற்றும் ஆண்களுக்கான கிசான் கிளப் போன்ற பல சமூக அடிப்படையிலான அமைப்பு திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட்டன.
சுய உதவிக்குழுக்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நுண்நிதி பற்றி அறிவதற்கும், தொழில்முனைவோர்களாக மாறுவதற்கும் வழிமுறையாக அமைந்தது. 2004 ஆம் ஆண்டில், சி.ஆர்.பி.எச்.சி & டி.சி-க்குப் பிறகு CORD (கிராமப்புற மேம்பாட்டுக்கான சின்மயா அமைப்பு) என்ற புதிய தன்னார்வ தொண்டு நிறுவனம் டாக்டர் மேத்ரே அவர்களை தன் தேசிய இயக்குநராக கொண்டு நிறுவப்பட்டது.
சவால்களைப் பற்றி பேசுகையில், டாக்டர் மேத்ரே கூறுகிறார், “ஒருவருக்கு அவர்தம் திறமை பொருளாதார ரீதியாக உதவி யாக இல்லாதபோது அவர் எப்படி அந்த திறமை சார்ந்தவராக இருக்க விரும்புவார்? எனவே நான் இங்கு சொல்லும் எளிய விஷயம் என்னவென்றால், இந்த கிராமவாசிகளை திறமையானவர்களாகவும், அவர்களின் திறமை தொகுப்பை மேம்படுத்தவும் நாம் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும், இதனால் அந்தந்த திறமை சார் நிபுணர்கள் நம்மோடு இல்லாத வரை அது சாத்தியமில்லை. MNREGA வோ அல்லது தொழில் போட்டியோ உண்மையான சவால் அல்ல, எங்களுடன், கிராம மக்களில், கிராமவாசிகளுடன் சேர்ந்து இங்கு பணியாற்றத் தயாராக இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதே உண்மையான சவால். ”
அவரது திட்டங்கள் கிராமவாசிகளுடன் குழுக்களாகவும் தனித்தனியாகவும் விவாதங்கள் மூலம் கட்டமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. திட்டங்கள் அடிமட்டத்தில் இருந்து உருவாகியுள்ளதால், செயல்முறை பின்பற்றுதலுக்கு எதுவாக உள்ளது. . இதன் காரணமாக, அபிவிருத்தி கொள்கை உரையாடலுக்கும், வெவ்வேறு மட்டங்களில் மாற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்கவும் முடிகிறது.
டாக்டர் மேத்ரேயும் CORD இல் உள்ள அவரது குழுவும் வாழ்வாதாரத்திற்கான ஒரு நெகிழ்வான அணுகுமுறையை வழங்குகின்றன, மேலும் ஏராளமான கிராமவாசிகள் தங்கள் எண்ணங்களை அடுத்த நிலைக்கு எடுத்துசெல்ல ஊக்குவிக்க படுகின்றனர்.. வேளாண்மை, தோட்டக்கலை, பால் சார்ந்த பொருட்கள் , குட்டி கடைகள், உணவுப் பொருட்கள், துணி வகைகள் (நெசவு, தையல், பின்னல் மற்றும் எம்பிராய்டரி), பாரம்பரிய கலை மற்றும் கைவினைப்பொருட்கள், மூங்கில் மற்றும் பிற மரமற்ற வனப் பொருட்கள் மற்றும் பல்வேறு சேவைகள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் எளிதாக்கப்படுகின்றன. தற்சார்பு, செயல்பாட்டு நிர்வாகத்தை கட்டமைத்தல் மற்றும் மைக்ரோ-தொழில்முனைவோரை உள்ளூர் சந்தைகளில் பிரதானமாக்குதல் ஆகியவற்றை உறுதிப்படுத்துதல், இந்த செயல்பாட்டின் ஒருங்கிணைந்த வேலையாகும்.. மக்களுக்கு கல்வி கற்பித்தல், நோய்த்தடுப்பு, குடும்பக் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து, சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன. வயிற்றுப்போக்கு முதல் எய்ட்ஸ் வரை நோய்களைத் தடுப்பது வலியுறுத்தப்படுகிறது. சிகிச்சை மேலாண்மை தவிர, சிபிஆர்(CBR) திட்டம் ஊனமுற்றோரை சமூகத்தில் கண்ணியத்துடன் சேர்ப்பது மற்றும் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது..
CORD மூலம், டாக்டர் மேத்ரே மற்றும் அவரது சக ஊழியர்கள்- மக்கள் தங்கள் இயற்கை வளங்களை நிர்வகிப்பதற்கும் பராமரிப்பதற்கும் நுண் திட்டங்களை உருவாக்க மற்றும் செயல்படுத்த ஊக்குவிக்கபட்டு , அதற்கான பயிற்சியும் அளிக்க பெருகின்றனர். ஜல், ஜங்கிள், ஜமீன், ஜான், ஜான்வார், ஜீவிகா மற்றும் ஜீவன் (நீர், காடு, நிலம், மக்கள், விலங்கு, வாழ்வாதாரம், வாழ்க்கை) என்ற ஏழு ஜே-களின் ‘ஒன்றோடொன்று’ உள்ள தொடர்பினை மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது.
தினசரி வாழ்க்கையோடு கல்வியை பிண்ணி பினைத்தோ அல்லது தீவர முதியோர் கல்வி மூலமாகவோ பஸ் அடையாளங்களைப் படித்தல், தொலைபேசி எண்களை டயல் செய்தல், அடிப்படைக் கணக்குகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தின் பதிவுகளை வைத்திருத்தல், அவர்களின் பெயரில் எவ்வாறு கையெழுத்திட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வது போன்றவைகளை கற்று தருவதன் மூலம் டாக்டர் மேத்ரே கிராமவாசிகளின் தன்நம்பிக்கையை வளர்க்க உதவியுள்ளார் . ஒரு படி மேலே சென்று, கிராமப்புற இளைஞர்களுக்கான கணினி மற்றும் ஆங்கில உரையாடல் வகுப்புகள் நடத்தி அது அவர்களின் வேலைவாய்ப்புக்கு தேவையான கணினி திறன்களைப் பெற ஏதுவாகிறது. டாக்டர் மேத்ரேயின் திட்டமிட்ட அணுகுமுறை : பங்கேற்பு, ஒருங்கிணைப்பு, நிலைத்தன்மை மற்றும் நெட்வொர்க்கிங் என்ற நான்கு முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இன்று, டாக்டர் மேத்ரேவின் தலைமையில், CORD அதன் விரிவான ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 5 மாநிலங்களில் 726 கிராமங்களில் செயல்படுகிறது. மேலும் ஆறாவதாக ஒரு மாநிலத்தில் ஒரு அனாதை இல்லத்தை நடத்தி வருகிறது. 100,000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் நேரடியாகவும் 500,000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் மறைமுகமாகவும் அடைந்துள்ளனர் பயனடைந்துள்ளனர்.
999 ஆம் ஆண்டு முதல், டாக்டர் மேத்ரே மற்றும் அவரது குழு, நபார்ட் (கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வேளாண் வங்கி) உடன் இணைந்து, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் ஜே & கே ஆகிய நாடுகளில் 30,000 க்கும் மேற்பட்ட மேம்பாட்டு நிபுணர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் சுயஉதவி குழுக்கள் வழியாக கிராமப்புற ஏழைகளுக்கு குறு கடன் வசதி கிடைக்க செய்துள்ளது. இதே போன்ற வேலையினை ஒடிசா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நான்கு தளங்களில் CORD ஏற்கனவே தொடங்கியுள்ளது. இலங்கை-CORD-ன் ஆலோசகராக டாக்டர் மேத்ரே பணிக்கப்பட்டு இலங்கையிலும் மூன்று தளங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
டாக்டர் மேத்ரே - 2012 இல் கார்டியன் சர்வதேச மேம்பாட்டு சாதனை விருது, தி வீக் இதழின் 1993 ஆண்டின் சிறந்த பெண் விருது, 2008-இல் பத்மஸ்ரீ, 2008 விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
“முன்பு 1985 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த இமாச்சலப் பிரதேசமும் ஒரு கிராமமாக இருந்தது, நான் வேலை செய்ய முடிவு செய்த பகுதி ஆடு மேய்ப்போர், கல்வியறிவு இல்லாதோர், வறுமை, மோசமான சுகாதார நிலைமை, குடிப்பழக்கம் மற்றும் பல “தவிர்க்கக்கூடிய” பிரச்சினைகளை வாழ்க்கையின் ஒரு பகுதியாக கொண்டிருந்தோர் வாழும் பகுதியாக இருந்தது.. நான் இந்த கிராமங்களில் பல மைல்கள் நடந்து செல்வேன், நான் ஒரு மருத்துவர் என்று அவர்களிடம் கூறப்பட்டபோது, நான் பொய்யுரைக்கிறேனா அல்லது பைத்தியமா என்று அவர்கள் ஆச்சரியப்படுவார்கள். நான் அவர்களுடன் அமர்ந்து, அவர்களுடன் பேசுவேன், அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கான எளிய வழிகளைப் பற்றி அவர்களிடம் பேசுவேன். ஆரம்பத்தில், இந்த கிராமங்களுக்கு வருவதற்கான எனது முடிவை எடுத்து இங்கு வந்தவுடன், நான் நிறைய சவால்களை எதிர்கொண்டாலும் எனது குருஜியின் ஆசீர்வாதத்தால் நான் எடுத்த முடிவில் நான் பின்வாங்க வேண்டிய அவசியம் ஏற்படவே இல்லை. இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு என்னை ஒரு சிறந்த மனிதராக மாற்றிகொள்ள எனக்கு கடவுள் ஒரு வாய்ப்பைக் கொடுத்து ஆசீர்வதிக்கபட்டுள்ளதை உணர்கிறேன்.,” என்று மிகவும் பணிவன்போடு கூடிய குரலில் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார் இந்த பெண்மணி.